Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
உலகின் பெரும்பகுதியை கட்டியாண்ட 5 சக்திவாய்ந்த பேரரசுகள்... முதலிடத்தில் உள்ளது எந்த இராஜ்ஜியம் தெரியுமா?
உலகம் தோன்றிய காலம் முதலே ஒவ்வொரு பிராந்தியத்தையும் வெவ்வேறு ராஜ்ஜியங்கள் தொடர்ச்சியாக ஆண்டு வந்தன, இப்போதும் ஆண்டு வருகின்றன. வரலாறு முழுவதும் ஆயிரக்கணக்கான சக்தி வாய்ந்த பேரரசுகள் பற்றிய தகவல்கள் நிறைந்துள்ளன. இந்த உலகம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அதனை ஆண்ட பேரரசுகளே முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
வரலாறு முழுவதும் பல பேரரசுகளும், ராஜ்ஜியங்களும் கலாச்சார பரிமாற்றம், வெற்றி மற்றும் புதுமையான முயற்சிகள் மூலம் உலகை எப்போதும் வடிவமைத்து வந்துள்ளன. உலகல் பல சக்திவாய்ந்த பேரரசுகள் இருந்தாலும் ஒரு சில ராஜ்ஜியங்கள் மட்டுமே அவர்களின் செல்வாக்காலும், அதிகரித்தாலும் வரலாற்றில் அழியாப்புகழை அடைந்தனர். இந்த பதிவில் அவற்றின் நிலப்பரப்பு, காலகட்டங்கள் மற்றும் மற்ற பிராந்தியங்களின் மீதான கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டு வரலாற்றின் சக்திவாய்ந்த ராஜ்ஜியங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பிரிட்டிஷ் பேரரசு
உலக வரலாற்றில் மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட பேரரசு பிரிட்டிஷ் பேரரசுதான். உலகின் அனைத்து கண்டங்கள் முழுவதும் சுமார் 35.5 மில்லியன் கிமீ பரப்பளவிற்கு பிரிட்டிஷ் பேரரசு பரந்து விரிந்திருந்தது, இது உலக வரலாற்றில் மிகப்பெரியதாக இருந்தது. இது இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் உள்ளிட்ட பரந்த பகுதிகளை ஆண்டது. 16 ஆம் நூற்றாண்டில் தோன்றி, 20 ஆம் நூற்றாண்டில் அதன் வீழ்ச்சியடைந்தது வரை பிரிட்டிஷ் பேரரசு உலகளாவிய வர்த்தகம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
மங்கோலியப் பேரரசு
உலகின் சக்திவாய்ந்த அரசர் என்று வரும்போது அதில் செங்கிஸ்கான் முக்கியமான இடத்தில் இருப்பார். மங்கோலியப் பேரரசு 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செங்கிஸ்கானால் நிறுவப்பட்டது, ஒரு நாடோடி சிற்றரசாக செங்கிஸ்கானால் உருவாக்கப்பட்ட இது அவருடைய வீரத்தாலும், தொடர்ச்சியான படையெடுப்புகளாலும் 24 மில்லியன் கிமீ பரப்பளவு கொண்ட மிகப்பெரிய தொடர்ச்சியான நிலப் பேரரசாக மாறியது. மங்கோலியப் பேரரசு சீனாவிலிருந்து கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு வரை பரவி, போரில் புரட்சியை ஏற்படுத்தியது, மேலும் வர்த்தகத்தை ஊக்குவித்தது மற்றும் தொலைதூர நாகரிகங்களை இணைத்தது.
ரஷ்யப் பேரரசு
ரஷ்யா இப்போது மட்டுமல்ல கடந்த காலத்திலும் சக்திவாய்ந்த பேரரசாக இருந்தது. 1721 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ரஷ்யப் பேரரசு, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் அலாஸ்கா வரை விரிவடைந்து, 22.8 மில்லியன் கிமீ பரப்பளவை ஆட்சி செய்தது. இது ஜார் மன்னர்களின் கீழ் ஒரு சக்திவாய்ந்த பேரரசாகவும், உலக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாகவும் இருந்தது. 1917 ரஷ்யப் புரட்சியின் போது இந்தப் பேரரசு சரிந்து, சோவியத் யூனியன் உருவாக வழி வகுத்தது.
சீனாவின் குயிங் வம்சம்
1644 முதல் 1912 வரை ஆட்சி செய்த குயிங் வம்சம் உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த சக்திவாய்ந்த ஒரு பேரரசாகும், மேலும் இதுதான் சீனாவின் கடைசி ஏகாதிபத்திய வம்சமாகும், இது 14.7 மில்லியன் கிமீ பரப்பளவைக் கட்டுப்படுத்தியது. அதன் ஆட்சியின் கீழ் சீனா, மங்கோலியா, திபெத் மற்றும் தைவான் போன்ற மிகப்பெரிய நாடுகள் இருந்தன. அதன் கலாச்சார சாதனைகள் மற்றும் வளர்ச்சிக்கு பெயர் பெற்ற இந்த வம்சம், இறுதியில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய அழுத்தங்கள் காரணமாக பலவீனமடைந்து,இறுதியில் வீழ்ச்சியடைந்தது.
ஸ்பானிஷ்பேரரசு
15 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஸ்பானிஷ் பேரரசு, 13.7 மில்லியன் கிமீ பரப்பளவை ஆட்சி செய்த உலகின் சக்திவாய்ந்த பேரரசுகளில் ஒன்றாக மாறியது. இது லத்தீன் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் பரந்த பிரதேசங்களை ஆட்சி செய்தது. வளர்ச்சி மற்றும் வெற்றிகளால் தூண்டப்பட்டு, 19 ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைவதற்கு முன்பு, ஸ்பானிஷ் தனது கலாச்சாரத்தையும், கத்தோலிக்க மதத்தையும் உலகம் முழுவதும் பரப்பியது.



Click it and Unblock the Notifications












