Latest Updates
-
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
இந்தியாவின் டாப் 10 பணக்கார முதலமைச்சர்கள் யார் தெரியுமா? தமிழ்நாடு முதல்வர் எந்த இடத்தில் உள்ளார் தெரியுமா?
Top 10 Richest Chief Minister in India: இந்தியாவில் அரசியல் என்பது சேவை என்பதை தாண்டி வியாபாரமாகி அரை நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. அரசியலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள். இந்தியாவின் மிகவும் அதிகாரமிக்க பதவிகளில் முக்கியமானது முதலமைச்சர் பதவி. முதலமைச்சர் என்பவர் ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் தலைவராக உள்ளார், அவர்கள் தங்கள் மாநிலத்தை நிர்வகிக்கும் கடினான பணியை பார்க்கிறார்கள்.
இந்தியாவின் 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களில், இருவர், அதாவது 7 சதவீதம் பேர், புதிய ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) ஆய்வுகளின் படி, மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். அதேசமயம் சில மாநிலத்தின் முதல்வர்கள் லட்சங்களில் சொத்து வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த பதிவில் இந்தியாவின் டாப் 10 பணக்கார முதலமைச்சர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

என். சந்திரபாபு நாயுடு - ஆந்திரப் பிரதேசம்
₹931.83 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களில் முதலிடத்தில் இருக்கிறார்கள். தெலுங்கு தேசம் கட்சி (TDP) தலைவரான சந்திரபாபு நாயுடு பலமுறை முதலமைச்சராக இருப்பதுடன் புத்திசாலி தொழிலதிபராகவும் உள்ளார். அவர் ரூ.810 கோடி அசையும் சொத்துக்களும் ரூ.121 கோடி அசையா சொத்துக்களும் வைத்திருக்கிறார். மேலும் அவருக்கு 0 கோடி கடன் இருப்பவதாகவும் தேர்தல் பத்திரத்தில் கூறியுள்ளார்.
பெமா காண்டு, அருணாச்சலப் பிரதேசம்
இரண்டாவது இடத்தில பாரதிய ஜனதா கட்சியின் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளார். அவரது மொத்த சொத்துக்கள் ரூ.332 கோடி என்றும், ரூ.165 கோடி அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.167 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் அவருக்கு 180 கோடிக்கும் அதிகமாக கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சித்தராமையா, கர்நாடகா
மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.51 கோடி, இதில் ரூ.21 கோடி அசையும் சொத்துக்களும் ரூ.30 கோடி அசையா சொத்துக்களும் அடங்கும்.
நீபியு ரியோ - நாகாலாந்து
நான்காவது இடத்தில் நாகாலாந்தின் தற்போதைய முதல்வர் நீபியு ரியோ இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ₹46.95 கோடியாகும். அவர் தனது தனிப்பட்ட வணிகம் மூலம் இவ்வளவு சொத்துக்களை குவித்துள்ளார்.
மோகன் யாதவ் - மத்தியப் பிரதேசம்
ஐந்தாவது இடத்தில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்ளார். அவரது அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.42.05 கோடி, அதே நேரத்தில் அவரது கடன் ரூ.8.55 கோடியாக உள்ளது.
என்.ரங்கசாமி - பாண்டிச்சேரி
அனைத்திந்திய என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த N. ரங்கசாமி இந்த ஆறாவது பணக்கார முதல்வராக உள்ளார். அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 38 கோடியாகும். அதேசமயம் அவரது தனிப்பட்ட கடன் ரூ. 1 கோடியாக உள்ளது.
ரேவந்த் ரெட்டி - தெலங்கானா
ஏழாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெலங்கான முதல்வரான ரேவந்த் ரெட்டி உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 30 கோடியாக உள்ளது, மேலும் அவருக்கு 1 கோடி ரூபாய் கடனும் உள்ளது.
ஹேமந்த் சோரன் - ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வரான ஹேமந்த் சோரன் எட்டாவது பணக்கார முதலமைச்சராக உள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த அவரிடம் 25 கோடி ரூபாய்க்கு சொத்துக்களும், 3 கோடி ரூபாய்க்கு கடனும் உள்ளது.
ஹிமந்த பிஸ்வா சர்மா - அசாம்
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஹிமந்த பிஸ்வா சர்மா அசாம் மாநிலத்தின் முதல்வராகவும் ஒன்பதாவது பணக்கார முதலமைச்சராகவும் இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 7 கோடியாகும், அதேசமயம் அவரது கடன் 3 கோடியாகும்.
கொனார்ட் சங்மா - மேகாலயா
மேகாலயா முதல்வரான கொனார்ட் சங்மா இந்தியாவின் 10-வது பணக்கார முதலமைச்சராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு 14 கோடி ரூபாய் மற்றும் அவரது மொத்த கடன் 24 லட்ச ரூபாயாக இருக்கிறது.
மு.க.ஸ்டாலின் - தமிழ்நாடு
நமது தமிழ்நாட்டு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் 14-வது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு கோடியாகும். அதேசமயம் அவருக்கு தனிப்பட்ட கடன் என்று எதுவும் இல்லை.



Click it and Unblock the Notifications













