Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
இந்தியாவின் டாப் 10 பணக்கார வங்கிகள் இதுதான்... இந்த வங்கிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Top 10 Richest Banks In India: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் வங்கித்துறை மிகவும் முக்கியமானது. இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதும் வங்கிகள்தான். Market Capitalisation என்பது ஒரு வங்கியின் உறுதித்தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையின் முக்கிய அளவீடாகும். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, சில பொது மற்றும் தனியார் துறை வங்கிகள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து, இந்திய வங்கி சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்தியாவின் அனைத்து வங்கிகளுமே பணத்தை நிர்வகித்தாலும் இந்த குறிப்பிட்ட வங்கிகளிடம் தனிப்பட்ட சொத்துக்களும், முதலீடுகளும் அதிகமாக உள்ளது. இந்த வங்கிகளில் உங்களுக்கும் அக்கவுண்ட் இருந்தால் நீங்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கிறீர்கள். இந்த பதிவில் இந்தியாவின் பணக்கார வங்கிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

HDFC வங்கி
HDFC வங்கி 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, அதன் பின்னர் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக தற்போது முன்னேறியுள்ளது. HDFC வங்கியின் சந்தை முதலீடு தற்போது 13.81 லட்சம் கோடியாக உள்ளது. டிசம்பர் 2024 நிலவரப்படி, இது 4,100 க்கும் மேற்பட்ட இந்திய நகரங்கள் மற்றும் கிராமங்களில் 2,1,000 க்கும் மேற்பட்ட ATMகள் மற்றும் 9,100 கிளைகளை இயக்குகிறது. பரந்த அளவிலான நிதி திட்டங்கள் மற்றும் சேவைகளுடன், HDFC வங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.
ICICI வங்கி
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ICICI வங்கி 1994 இல் நிறுவப்பட்டது. ICICI வங்கியின் சந்தை மூலதனம் தற்போது 9.43 லட்சம் கோடியாக உள்ளது. இது நாடு முழுவதும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாகும், இது வங்கி சார்ந்த சேவைகள் மற்றும் நிதி சேவைகளுடன் சில கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. அதன் பரந்த நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் முயற்சிகளால் இந்த வங்கி இந்தியாவின் முக்கியமான வங்கிகளில் ஒன்றாக உள்ளது.
SBI வங்கி
இந்தியாவின் மிகவும் பழமையான வங்கி என்றால் அது SBI வங்கிதான். 1806 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட SBI இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும். அதன் ஒட்டுமொத்த மதிப்பு தற்போது 6.84 லட்சம் கோடியாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 22,500 க்கும் மேற்பட்ட கிளைகளையும், சுமார் 63,580 ஏடிஎம்களையும் வைத்திருப்பதுடன், சுமார் 50 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் வங்கியாக SBI உள்ளது.
Kotak Mahindra Bank
Kotak Mahindra Bank 1985 ஆம் ஆண்டு வங்கி சாரா நிதி நிறுவனமாக நிறுவப்பட்டது மற்றும் 2003 ஆம் ஆண்டு வங்கியாக மாறியது. தற்போது இந்த வங்கியின் சந்தை மதிப்பு 4.26 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியா முழுவதும் 1,965 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் கிட்டத்தட்ட 3,000 ஏடிஎம்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஜூன் 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி கிட்டத்தட்ட 5.1 கோடி மக்கள் இந்த வங்கியின் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.
Axis Bank
Axis Bank 1993 ஆம் நிறுவப்பட்ட இந்தியாவின் மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாகும். இதன் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு 3.39 லட்சம் கோடியாக உள்ளது. இது நாடு முழுவதும் பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு ஆயிரகணக்கான 5,876 கிளைகள் மற்றும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள் (ATMகள்) மற்றும் அனைத்து விதமான நிதி சேவைகளையும் வழங்குகிறது.
Bank of Baroda
SBI வங்கி போலவே 1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Bank of Baroda, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். 17 நாடுகளில் 165 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதன் மூலம் அதன் கணிசமான உள்நாட்டு மற்றும் சர்வதேச இருப்பு அதிகரித்துள்ளது. தற்போது அதன் சந்தை மூலதன மதிப்பு 1.13 லட்சம் கோடியாக உள்ளது.
Punjab National Bank
1894 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Punjab National Bank, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும். இதன் தற்போதைய சந்தை மதிப்பு 1.06 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தியா முழுவதும் 11,000 க்கும் மேற்பட்ட கிளைகளை இயக்குகிறது மற்றும் 1.80 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் நாடு முழுவதும் பரந்த அளவிலான வங்கி சேவைகளை வழங்குகிறது.
Union Bank of India
Union Bank of India 1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு முக்கிய பொதுத்துறை வங்கியாகும். இதன் தற்போதைய சந்தை மதிப்பு 91 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்தியா முழுவதும் 9,500-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 12,000 ஏடிஎம்களுடன் வலிமையான வலையமைப்புடன், 1.20 வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சேவைகளை வழங்கி வருகிறது.
Indian Overseas Bank
Indian Overseas Bank 1937 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பொதுத்துறை வங்கியாகும், அதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இது தென்னிந்தியாவில் முதலில் நிறுவப்பட்டது பின்னர் நாடு முழுவதும் அதன் வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான வங்கி சேவைகளை வழங்குகிறது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 80 ஆயிரம் கோடியாக உள்ளது.
கனரா வங்கி
கனரா வங்கி, 1906 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் பழமையான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 12,026 ஏடிஎம்கள் மற்றும் 9,816 கிளைகளுடன், டிசம்பர் 2024 நிலவரப்படி 11.65 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 79 ஆயிரம் கோடியாக உள்ளது.



Click it and Unblock the Notifications












