Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
உலகில் முதலில் தோன்றிய மிகவும் பழமையான டாப் 10 நாடுகள் இதுதான்... இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Oldest Countries in the World: நம் உலகம் எப்படி உருவானது என்ற ரகசியம் இன்றுவரை ரகசியமாகவே உள்ளது. பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே நிலப்பரப்புகள் உருவாகி விட்டன. நாளாடைவில் மனித நாகரிகம் தோன்றிய பிறகு இந்த நிலப்பரப்புகள் நாடுகளாக பிரிக்கப்பட்டன. அந்த வகையில் சில நாடுகள் உலகின் பண்டைய நாகரிகங்களின் தாயகமாக இருந்துள்ளன.
இந்த பழமையான நாடுகள் போர்களால் ஏற்பட்ட பேரழிவுகள், ராஜ்ஜியங்களின் வளர்ச்சிகள், வம்சங்களின் மாற்றங்கள் முதல் எல்லை மாற்றங்களால் ஏற்பட்ட விளைவுகள் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களின் வளர்ச்சியைக் கண்டுள்ளன.

இந்த பழமையான நாடுகள் தங்கள் கலாச்சாரங்கள் மற்றும் அடையாளங்களுடன் பல்லாயிரம் ஆண்டுகளாக காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கின்றன. எகிப்தின் கம்பீரமான பிரமிடுகள் முதல் இந்தியாவின் சிறந்த பண்பாடு வரை, மனித சமூகத்தின் தோற்றம் மற்றும் அது எவ்வாறு உருவானது என்பதற்கான அடையாளங்களாக இந்த நாடுகள் உள்ளன. இந்த பதிவில் உலகின் பழமையான நாடுகள் என்னென்ன மற்றும் அதில் இந்தியாவின் இடம் என்னவென்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஈரான் - கிமு 3200
இந்த பட்டியலில் முதலிடத்தில் உலகின் பழமையான நாடாக இருப்பது ஈரான். ஈரான் 1935 வரை பெர்சியா என்று அழைக்கப்பட்டது. ஈரானில் நகர்ப்புற குடியேற்றங்கள் கிமு 7000 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தொடங்கியது. பண்டைய மேதியர்கள் கிமு 625 இல் ஈரானை ஒன்றிணைத்து, ஒரு புகழ்பெற்ற வரலாற்றின் தொடக்கத்தைக் குறித்தனர். வலிமைமிக்க அச்செமனிட் பேரரசிலிருந்து சஃபாவிட் வம்சம் வரை, ஈரானின் நாகரிகம் பல்வேறு சக்திவாய்ந்த பேரரசுகளை கண்டுள்ளது.
எகிப்து - கிமு 3150
பெரும்பாலான மக்கள் எகிப்துதான் உலகின் பழமையான நாடு என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்கு எகிப்தின் வரலாறு புகழ் பெற்றது. ஹாலிவுட் திரைப்படங்களுத்தான் இதற்கு நன்றி சொல்ல வேண்டும். பண்டைய எகிப்தின் மர்மங்களைக் கண்டறிவது எப்போதும் சுவாரஸ்யமான ஒன்றாகும். எகிப்தின் சோஹாக்கில் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் 7,000 ஆண்டுகளுக்கும் மேலானதாக மதிப்பிடப்பட்ட ஒரு தொலைந்து போன நகரத்தைக் கண்டுபிடித்துள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் பண்டைய எகிப்தின் ஆரம்பகால வம்ச காலங்கள் தோராயமாக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதைக் நிரூபித்துள்ளன. எகிப்தின் பிரமிக்க வைக்கும் பிரமிடுகள் மனித நாகரிகத்தின் ஆற்றலுக்கு ஒரு சான்றாக நிற்கிறது.
சிரியா - கிமு 3000
நாகரிகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் கண்ட நாடான சிரியா, சுமார் 700,000 ஆண்டுகளுக்கு முந்தைய எச்சங்களை இப்போதும் கொண்டுள்ளது. தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கிமு 3000 இல் இருந்ததாக நம்பப்படும் ஆரம்பகால நாகரிகத்தில் ஒன்றான எப்லாவின் பண்டைய நகரத்தைக் கண்டுபிடித்தன. நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள் சிரியாவை இந்த பட்டியலில் மூன்றவது இடத்தில் வைத்துள்ளது.
வியட்நாம் - கிமு 2879
வியட்நாமின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆரம்பகால விவசாய சமூகங்கள் தோன்றியதை இந்த நாடு கண்டது மற்றும் பண்டைய உலகின் விவசாய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. உலகின் முதல் விவசாயிகளின் சமூகங்களில் ஒன்றாக வியட்நாம் உள்ளது, இது அதன் பழமைக்கு முக்கிய சான்றாக உள்ளது.
அர்மீனியா - கிமு 2492
3,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட அர்மீனியா, உலகில் ஒரு அழியாத தடத்தை உருவாகியுள்ளது. அர்மீனியாவின் அதிகாரப்பூர்வ உருவாக்கம் கிமு 782 இல் நிகழ்ந்தது. அதன் உச்சத்தில், அர்மீனியா கருங்கடல் முதல் ஈரானில் உள்ள உர்மியா ஏரி வரை பரந்த பிரதேசங்களில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தியது. கிபி 301 இல் கிறிஸ்தவத்தை அரசு மதமாக ஏற்றுக்கொண்ட ஆரம்பகால நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இன்றுவரை, ஆர்மீனிய அப்போஸ்தலிக்க திருச்சபையால் தனித்துவமான அடையாளத்தை ஆர்மீனியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கொரியா - கிமு 2330
இன்றைய வட மற்றும் தென் கொரியாவின் தாயகமான கொரிய தீபகற்பம், 5,000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. கிமு 2330 முதல் கிமு 108 வரை, கோகுரியோ இராச்சியம் செழித்து வளர்ந்தது மற்றும் பிராந்தியத்தின் முன்னேற்றங்களுக்கு பங்களித்தது. கொரிய நாகரிகம் ஒரு நீண்ட மற்றும் வரலாறு நிறைந்த கடந்த காலத்தைக் கொண்டுள்ளது.
சீனா - கிமு 2070
பண்டைய மரபுகள் மற்றும் ஆழமான கலாச்சாரம் நிறைந்த நாடான சீனா, கிமு 2070 க்கு முந்தைய நாகரிகத்தைக் கொண்டுள்ளது. ஆரம்பகால சீன நாகரிகம் கிமு 1700 முதல் கிமு 1046 வரையிலான ஷாங் வம்சத்தின் போது தோன்றியது. இந்த காலகட்டத்தில் நார்த் சென்ட்ரல் சீனாவின் ஒற்றுமை மற்றும் வம்ச வாரிசுரிமையின் முதல் நடைமுறை நிறுவப்பட்டது.
இந்தியா - கிமு 2000
இந்தியா இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள சமூகங்கள் சுமார் 250,000 ஆண்டுகளாக செழித்து வளர்ந்துள்ளன. வெண்கல யுகம், கிமு 3300 முதல் கிமு 1300 வரை ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சியைக் கண்டது. பண்டைய நூல்களில் சுட்டிக்காட்டியுள்ளபடி, சிந்து சமவெளி நாகரிகம் செழித்து மெசபடோமியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது. இந்தியாவின் வளமான வரலாறு, எஞ்சியிருக்கும் பழமையான நாடுகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தை அதற்கு பெற்றுத் தந்துள்ளது.
ஜார்ஜியா - கிமு 1300
இந்த பட்டியலில் ஜார்ஜியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது, இது ஒயின் தயாரிப்பின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இங்கே 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய மது ஜாடிகளைக் கண்டுபிடித்துள்ளன, இது உலகின் ஒயின் தயாரிப்பின் பழமையான சான்றாக அமைகிறது. ஜார்ஜிய சமூகத்தில் ஆரம்பகால அரசியல் கட்டமைப்புகளின் இருப்பு கிமு 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. இந்த கண்டுபிடிப்புகள் ஜார்ஜியாவை பழமையான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
சூடான் - கிமு 1070
இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் சூடான் உள்ளது, இது குறைந்தது 3,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட ஒரு நிலப்பரப்பாகும். சூடானில் உள்ள சமூகங்கள் கிமு 8 ஆம் மில்லினியத்தில் குடியேறத் தொடங்கியதாக ஆராய்ச்சி விளக்குகிறது. இதன் ஆரம்பகால மக்கள் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தலில் திறமையானவர்களாக மாறினார்கள். காலப்போக்கில், அவர்கள் நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து விவசாயத்தில் ஈடுபடும் சமூகங்களாக மாறினர்.



Click it and Unblock the Notifications












