Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
இந்தியாவில் அதிக மக்கள்தொகை உள்ள டாப் 10 மாநிலங்களில் தமிழ்நாடு எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Most Populated States In India: இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்திய புள்ளி விவர கணக்குகளின் படி இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கிறது. இந்தியா 146 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது. பில்லியன் கணக்கான மக்களைக் கொண்ட இந்த நாடு 28 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு மாநிலமும் அதன் அளவு மற்றும் மக்கள்தொகையில் கணிசமாக வேறுபடுகின்றன.
இந்தியாவின் சில மாநிலங்கள் உலகின் பல நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்டவையாக உள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, சவால்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள, இந்தியாவின் மக்கள் தொகையைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம். சில மாநிலங்களுக்கு அவற்றின் மக்கள் தொகையே மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதை மறுக்க முடியாது. Datacommons.org இன் படி, இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 மாநிலங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம் 22 கோடி மக்கள் தொகையுடன் தற்போது இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக முதலிடத்தில் உள்ளது, அதன் பெரிய பரப்பளவு மற்றும் அதிக பிறப்பு விகிதங்கள் காரணமாக தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மாநிலம் வளமான வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக வாரணாசி மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களில், புதிய நபர்கள் தொடர்ந்து குடியேறுகிறார்கள். இங்குள்ள வளமான நிலம் விவசாயத்தை இந்த மாநிலத்தின் முதன்மைத் தொழிலாக ஆக்குகிறது.
மகாராஷ்டிரா
இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிரா 12.1 கோடி மக்கள் தொகையுடன் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் தலைநகரான மும்பை இந்தியாவின் நிதி மையமாகவும் பரவலாக அறியப்படுகிறது, மேலும் இது இந்தியாவின் கனவு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது, இது அதிக வேலைவாய்ப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கை காரணமாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவிலான மக்கள் இங்கு குடியேறுகிறார்கள்.
பீகார்
அதிக கருவுறுதல் விகிதங்கள் மற்றும் பெரும்பான்மையான இளம் மக்கள் தொகை காரணமாக, பீகார் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும். தற்போது 11.7 கோடி மக்கள் தொகை இந்த மாநிலத்தில் உள்ளது. கூடுதலாக, இந்த மாநிலம் பெரும்பாலும் கிராமப்புறமாக இருப்பதால், விவசாயம் இங்கு குறிப்பிடத்தக்க தொழிலாக உள்ளது.
மேற்கு வங்காளம்
9.8 கோடி மக்கள் தொகையுடன் மேற்கு வங்கம் நான்காவது இடத்தில் உள்ளது. கங்கை நதி இங்கு ஓடுவதால், அதன் வளமான சமவெளிகள் மற்றும் நதி அமைப்புகள் காரணமாக மேற்கு வங்காளம் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உள்ளது. கொல்கத்தா இங்குள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும், இது உலகம் முழுவதிலுமிருந்து வேலை மற்றும் கல்விக்காக மக்களை ஈர்க்கிறது.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம் அதன் நீண்ட கடற்கரைக்கும், உணவுகளுக்கும் பெயர் பெற்றது. 8.9 கோடி மக்கள் தொகையுடன் இந்த மாநிலம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் விவசாயம் மற்றும் தொழில்கள் அதிக மக்கள்தொகையை ஆதரிக்கின்றன. கூடுதலாக, இந்த மாநிலம் வளர்ந்து வரும் நகரமயமாக்கலையும் காண்கின்றன.
மத்திய பிரதேசம்
8 கோடி மக்கள் தொகையுடன் மத்திய பிரதேசம் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்றாகும், மேலும் அதன் கடன் தொகையில் பெரும் பங்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவே செல்கிறது. மாநிலத்தின் மைய இருப்பிடமும் இயற்கை வளங்களும் அதன் அதிக மக்கள் தொகை அதிகரிப்புக்கு வழிவகுக்கின்றன.
தமிழ்நாடு
தமிழ்நாடு அதன் வலுவான பொருளாதார முன்னேற்றத்திற்கு பெயர் பெற்றது. 7.8 கோடி மக்கள் தொகையுடன் தமிழ்நாடு தற்போது 7-வது இடத்தில் உள்ளது. கடந்த சில வருடங்களாக மற்ற மாநில மக்கள் தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வேலைகளுக்காக அதிகளவில் குடிபெயர்கிறார்கள். தமிழ்நாட்டில் நல்ல சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளது, இது மக்கள் தொகை வளர்ச்சிக்கு உதவுகிறது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் பரப்பளவில் மிகப்பெரிய இந்திய மாநிலமாக உள்ளது. 7.6 கோடி மக்கள் தொகையுடன் ராஜஸ்தான் எட்டாவது இடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் போன்ற நகரங்கள் வேலை மற்றும் வர்த்தகத்திற்காக மக்களை ஈர்க்கின்றன. இங்கு மக்கள் தொகை சீராக அதிகரித்து வருகிறது.
குஜராத்
குஜராத் இந்தியாவின் தொழில்துறை மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. 6.6 கோடி மக்கள் தொகையுடன் குஜராத் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. வணிகம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக பலர் இங்கு குடிபெயர்கின்றனர். மாநிலத்தின் துறைமுகங்கள் மற்றும் அகமதாபாத், சூரத் போன்ற நகரங்களும் மக்கள் தொகையை தொடர்ந்து அதிரித்து வருகின்றன.
கர்நாடகா
குஜராத்தை விட சில லட்சங்கள் பின்தங்கி இருப்பதால் கர்நாடகா இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு பெயர் பெற்றது. இந்த இடம் ஒரு பிரபலமான தொழில்நுட்ப மற்றும் கல்வி மையமாகும். இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் வேலை மற்றும் படிப்பு, உயர்தர வாழ்க்கைக்காக இங்கு வருகிறார்கள், இவை அனைத்தும் மக்கள்தொகையை அதிகரிக்க வழிவகுக்கிறது.



Click it and Unblock the Notifications
