Latest Updates
-
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும்
இந்தியாவில் கிடைக்கும் 15000 வகை மாம்பழங்களில் டாப் 10 மாம்பழங்கள் எது தெரியுமா? இதுல உங்களுக்கு பிடிச்சது எது
கோடைகாலம் வந்து விட்டது. இந்த பருவ காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் என்பது நாம் அறிந்ததுதான். அதிலும் வழக்கத்தை விட இந்த வருட கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் பல சிக்கல்களை அனுபவித்தாலும் அது கொண்டுவரும் வெகு சில நன்மைகளில் ஒன்று அதன் பருவகால பழங்கள். குறிப்பாக மாம்பழம்.
'பழங்களின் அரசன்', 'இந்தியாவின் தேசிய பழம்' என பல பெருமைகளைக் கொண்ட மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த தனித்துவமான பழம் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

இந்தியாவின் கலாச்சாரம் எப்படி பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறதோ அதேபோல மாம்பழமும் அதன் சுவையிலும், தரத்திலும் பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 1500 வகையான மாம்பழ வகைகள் உள்ளது. இந்த பதிவில் இந்த 1500 வகைகளில் சிறந்ததாக மற்றும் பிரபலமாக இருக்கும் டாப் 10 மாம்பழ வகைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
இமாம்பசந்த்
இமாம்பசந்த் மாம்பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது, மேலும் உலகிலேயே அதிகம் மிகவும் விரும்பப்படும் மாம்பழ வகை. சேலம், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அதிகம் பயிரிடப்படும் இமாம்பசந்த் மாம்பழம் சிறந்த சுவை மற்றும் அதிக சதைப்பகுதியைக் கொண்டுள்ளது. இந்த பழம் 200 கிராம் முதல் 1200 கிராம் வரை பெரிதாகக் கூடியது.
அல்போன்சா
பொதுவாக ஹாபஸ் என்றும், தமிழ்நாட்டில் சேலம் குண்டு என்றும் அழைக்கப்படும் அல்போன்சா, இனிப்பான மற்றும் அளவில் சிறியதாக இருக்கும் மாம்பழ வகையாகும். வட இந்தியாவில் அல்போன்சா மட்டுமே அவர்கள் பயிரிடும் ஒரே மாம்பழ வகையாகும். வட இந்தியாவில் அல்போன்சாவைத் தவிர மற்ற வகைகள் இருப்பதே பலருக்கும் தெரியாது.
மல்கோவா
மாம்பழம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மல்கோவா மாம்பழம்தான். இது இனிப்புச் சுவை மிகுந்த தனித்துவமான சதைப்பற்றுள்ள மாம்பழமாகும். இந்த மாம்பழம் வட்டமாகவோ அல்லது நீள்வட்டமாகவோ இருக்கும். இதன் ஒரு பழம் சுமார் 200 கிராம் முதல் 600 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். மல்கோவா மாம்பழம் பழங்காலத்தில் செல்வா செழிப்பின் அடையாளமாக கருதப்பட்டது.
செந்தூரம்
அதன் கவர்ச்சிகரமான தோற்றத்திற்காகவும், தேன் போன்ற சுவைக்காகவும் செந்தூரம் மிகவும் பிரபலமான மாம்பழ வகையாக உள்ளது. சிவப்பு மஞ்சள் நிறத்தில் செந்தூர மாம்பழம் மக்களின் மனதில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. கேரள மக்கள் மற்ற வகைகளை விட செந்தூர மாம்பழத்தை அதிகம் விரும்புகிறார்கள். நனறாக பழுத்த நிலையில் சாப்பிட்டால் செந்தூரம் பழம் தேனைப் போல சுவையாக இருக்கும் கூறப்டுகிறது.
மல்லிகா
மல்லிகா மாம்பழ வகை கிட்டதட்ட மாம்பழ சீசன் முடியும் தருவாயில் கிடைக்கும் ஒரு மாம்பழமாகும். மல்லிகா மாம்பழம் மற்ற மாம்பழங்களை விட நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும். மல்லிகா மாம்பழம் உருண்டையாக இல்லாமல் கிளி மூக்கு மாம்பழம் போல நீளமான மாம்பழமாகும், ஆனால் அதனை சுவை ஆரஞ்சு பழம் போல இருக்கும். மல்லிகா மாம்பழம் சாறு, கேக்குகள் தயாரித்தல் மற்றும் இனிப்புகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
சேலம் பங்களா
சேலம் பங்களா மிகவும் தனித்துவமான மாம்பழ வகையாகும், இது சேலத்தில் மட்டுமே வளரக்கூடிய மாம்பழ வகையாகும், இது மாம்பழத்தின் அனைத்து நிலைகளிலும் இனிப்பு சுவையைக் கொண்டது. சேலம் பங்களா மாம்பழம் பச்சையாக இருந்தாலும் இனிப்புச் சுவை கொண்டது மற்றும் பார்ப்பதற்கு இம்மாப்பசண்ட் மாம்பழத்தைப் போன்றது. இந்த மாம்பழம் பருவத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் கிடைக்கும்.
பங்கனப்பள்ளி
பங்கனப்பள்ளி மாம்பழம் உலகப் புகழ் பெற்றதாகும். பங்கனப்பள்ளி மாம்பழம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பயிரிடப்படுகிறது. இந்த மாம்பழம் நீண்ட ஆயுட்காலம் கொண்டது மற்றும் சிறிய கொட்டையுடன் அதிக இனிப்புத்தன்மை கொண்டது. மற்ற இடங்களை விட சேலத்தில் விளையும் பங்கனப்பள்ளி மாம்பழம் அதிக சுவை கொண்டது.
கலபாடி
கலபாடி மாம்பழம் அதிக சாறு மற்றும் இனிப்புடன் கூடிய சிறிய ஊதா நிற மாம்பழமாகும், இது முழுமையாக பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறும். இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் இது அரிதான மற்றும் சுவையான மாம்பழங்களில் ஒன்றாக இருக்கிறது.
தோத்தாபுரி
கிளி போல தோற்றமளிப்பதால், தோத்தாபுரி மாம்பழம் பொதுவாக கிளி மூக்கு மாம்பழம் என்று அழைக்கப்படுகிறது. மாம்பழ சீசன் முடியும் போது இந்த பழத்தை நாம் பார்க்கலாம், பருவத்தின் தொடக்கத்தில் இது ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பாதாமி
கர்நாடக மாநிலத்தின் மிகவும் பிரபலமான மாம்பழ வகை பாதாமி. இது பெரும்பாலும் கர்நாடகாவின் அல்போன்சா என்று அழைக்கப்படுகிறது. இந்த மாம்பழ வகையின் சுவை மற்றும் அமைப்பு அல்போன்சாவைப் போலவே இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த வகை மாம்பழம் கர்நாடகாவின் பாதாமி நகரத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. பாதாமி மாம்பழம் ஏப்ரல் முதல் ஜூன் வரை கடைகளில் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
