Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
உலகில் அரிசி அதிகம் உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள்..இந்தியாவும்,பாகிஸ்தானும் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா
இந்திய மக்களின் முதன்மையான உணவு எதுவென்றால் அரிசிதான். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியை தங்கள் பிரதான உணவாக உட்கொள்கின்றனர். அரிசி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படும் தானியமாக உள்ளது. உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தப் பயிரை உண்கின்றனர். இருப்பினும், இதன் உற்பத்தி ஒரு சில ஆசிய நாடுகளில் மட்டுமே நிகழ்கிறது.
உலகெங்கிலும் உள்ள அரிசி சந்தையில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அரிசி உற்பத்தி செய்யும் சில மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. USDA வெளிநாட்டு வேளாண் சேவை தரவுகளின்படி, உலகிலேயே அதிகளவு அரிசி உற்பத்தி செய்யும் நாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா
உலகிலேயே அதிக அரிசி உற்பத்தி செய்யும் நாடு நமது இந்தியாதான். இந்தியாவில் அரிசி உற்பத்தி அதன் வேளாண் காலநிலை மண்டலங்கள் அடிப்படையில் நிரணயிக்கப்படுகிறது. பில்லியன் கணக்கான மக்களைக் கொண்ட நம் நாட்டில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அரிசி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறார். குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் உயர்ரக பாஸ்மதி வகை அரிசி உற்பத்தி அதிகமாக உள்ளது.
சீனா
சீனா உலகின் இரண்டாவது பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாகும். சீனாவின் மிகப்பெரிய நதிப் படுகைகள் மற்றும் செழிப்பான நீர்ப்பாசன முறை ஆகியவை நாட்டில் அதிக அரிசி உற்பத்திக்கு சாதகமான நிலைமைகளை வழங்குகின்றன. அரிசி சீனாவில் ஒரு முக்கிய உணவாகவும், கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கியத் துறையாகவும் உள்ளது.
பங்களாதேஷ்
பங்களாதேஷின் டெல்டா சமவெளிகள் மிகவும் வளமானவை மற்றும் உலகளவில் அரிசி உற்பத்தி செய்யும் முக்கிய இடங்களில் ஒன்றாகும். இங்கு வேகமாக வளர்ந்து வரும் அரிசி சந்தை உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கூடுதலாக, இப்பகுதியில் ஏராளமான நீர் ஆதாரம் இருப்பதால் பல அறுவடை முறைகளும் எளிதாக நடைபெறுகிறது.
இந்தோனேசியா
இந்தோனேசியாவின் வெப்பமண்டல காலநிலை ஆண்டு முழுவதும் நெல் சாகுபடிக்கு ஏற்றது, குறிப்பாக ஜாவா மற்றும் சுமத்ராவில். கடந்த ஆண்டில், இதனால் மகசூல் அதிகரித்தது, இதற்கு தரமான விதை வகைகளும் மற்றும் அரசாங்க முயற்சிகளே காரணமாகும், மேலும் அரிசி தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு அவசியமாகிவிட்டது.
வியட்நாம்
வியட்நாம் இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. வியட்நாமின் மீகாங் மற்றும் ரெட் ரிவர் டெல்டாக்கள் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முக்கியமான அரிசி உற்பத்தி மையங்களாக உள்ளன. மீகாங் டெல்டா மட்டும் நாட்டின் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியை விளைவிக்கிறது.
தாய்லாந்து
தாய்லாந்து உயர்தர மல்லிகை அரிசியை உற்பத்தி செய்வதற்கு புகழ் பெற்றது மற்றும் உலகின் முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளது. சாவோ பிரயா நதிப் படுகை அதன் அரிசி பொருளாதாரத்தின் மையமாக உள்ளது, இது மில்லியன் கணக்கான கிராமப்புற மக்களை வாழ்வாதாரங்களை ஆதரிக்கிறது.
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய உணவுப் பயிராக அரிசி உள்ளது, இது முக்கியமாக லுசோன் மற்றும் மின்டானாவோவில் பயிரிடப்படுகிறது. மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மகசூல் பிரச்சினைகள் காரணமாக உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்ய நாடு அரிசியை இறக்குமதியும் செய்கிறது.
மியான்மர்
மியான்மர் பல நூற்றாண்டுகளாக நெல் சாகுபடியில் முக்கிய இடத்தில் உள்ளது. மியான்மரின் இராவடி டெல்டா முக்கிய உற்பத்திப் பகுதியாகும். வானிலை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும், நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி வருவாயில் அரிசி முக்கிய காரணமாக உள்ளது.
பாகிஸ்தான்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் வளரும் நறுமணமிக்க பாஸ்மதி மற்றும் நீண்ட தானிய அரிசி உற்பத்திக்கு புகழ் பெற்றதாக அறியப்படுகிறது. அரிசி பாகிஸ்தானில் ஒரு முக்கியமான ஏற்றுமதி பயிராக உள்ளது மற்றும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.
ஜப்பான்
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது ஜப்பான். ஜப்பானின் அரிசி கலாச்சாரம் உலகப் புகழ் பெற்றது. ஜப்பானின் அரிசி உற்பத்தி மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும், ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் அரிசி அதன் உலகத் தரம் வாய்ந்த தரத்திற்கு பெயர் பெற்றது மற்றும் முக்கியமாக ஹொன்ஷு போன்ற பகுதிகளில் பயிரிடப்படுகிறது.



Click it and Unblock the Notifications

