Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
இந்தியாவில் அதிக தற்கொலை நடக்கும் டாப் 10 மாநிலங்கள்... தமிழ்நாடு எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Indian States With Highest Suicide Rates: தற்கொலை என்பது உலகம் முழுவதும் நிலவும் ஒரு மோசமான மன அழுத்த பிரச்சினையாகும். இது சமூக மற்றும் மனநல பிரச்சினைகளின் விளைவாக மக்கள் எடுக்கும் துரதிர்ஷ்டமான முடிவாகும். இந்தியாவில், தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) தரவுகளின்படி, இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
தற்கொலை விகிதம் 2017 இல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 9.9 ஆக இருந்தது, 2022 இல் ஒரு லட்சத்திற்கு 12.4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளின் தரவுகளை ஒப்பிடும் போது, முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

2021 உடன் ஒப்பிடும்போது 2022 இல் மொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை 4.2% அதிகரித்துள்ளது, நாடு முழுவதும் 1,70,924 வழக்குகள் பதிவாகியுள்ளன. பொதுவாக தற்கொலை விகிதம், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு தற்கொலைகளின் எண்ணிக்கை என வரையறுக்கப்படுகிறது. இந்த பதிவில் இந்தியாவில் தற்கொலை விகிதம் அதிகமுள்ள மாநிலங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சிக்கிம்
இந்த பட்டியலில் சிக்கிம் முதலிடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, சிக்கிமில் அதிகபட்ச தற்கொலை விகிதம் 43.1% ஆக பதிவாகியுள்ளது. சிக்கிமில் 2022 ஆம் ஆண்டில் 293 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 2021-யை விட 27 அதிகமாகும், இது தற்கொலை விகிதத்தில் 10.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
இரண்டாவது இடத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 42.8% தற்கொலை விகிதத்துடன் உள்ளன. தரவுகளின்படி, பெரும்பாலான தற்கொலைகளுக்கு நோய்களும், மது பழக்கமுமே காரணமாக நிகழ்ந்தன.
பாண்டிச்சேரி
யூனியன் பிரதேசமும் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் தற்கொலை விகிதம் தொடர்ந்த அதிகரித்து வருகிறது. தற்போது இங்கு தற்கொலை விகிதம் 29.7% ஆக உள்ளது.
கேரளா
கடவுளின் தேசமான கேரளாவிலும் கவலையளிக்கும் விதமாக தற்கொலை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எழுத்தறிவு அதிகமாக இருக்கும் கேரளாவில் தற்கொலைகள் அதிகரிப்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. கேரளாவில் ஒரு லட்சம் பேருக்கு தற்கொலை விகிதம் 28.50 ஆக உள்ளது.
சத்தீஸ்கர்
கேரளாவைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது. இங்கு நிலவும் வறுமை, சுகாதார சிக்கல்கள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் இங்கு ஒரு லட்சம் பேருக்கு தற்கொலை விகிதம் 28.25 ஆக உள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானா 26.3% தற்கொலை விகிதங்களைப் பதிவு செய்துள்ளன. இங்கு நிலவும் சமூகம் சார்ந்த சிக்கல்களும், வேலையின்மையும், மது மற்றும் போதை பொருட்களின் பயன்பாடும் தற்கொலைக்கு முக்கிய காரணமா உள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாடு இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லட்சம் பேருக்கு தற்கொலை விகிதம் 25.9 ஆக உள்ளது. அதிர்ச்சியளிக்கும் வகையில் அரசு ஊழியர்களிடையே பெரும்பாலான தற்கொலைகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன. 2022-ல் நடந்த 2,166 தற்கொலைகளில் 364 பேர் அரசு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா
அண்டை மாநிலமான கர்நாடகா இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லட்சம் பேருக்கு தற்கொலை விகிதம் 20.2 ஆக உள்ளது.
கோவா
இந்திய இளைஞர்களின் கனவு தேசமான கோவாவும் இந்த பட்டியலில் உள்ளது. இங்குள்ள மது மற்றும் போதை மருந்து கலாச்சாரம் மற்றும் அதிக சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக கோவாவில் அதிக தற்கொலைகள் நடைபெறுகிறது. இங்கு ஒரு லட்சம் பேருக்கு தற்கொலை விகிதம் 19.2 ஆக உள்ளது.
மகாராஷ்டிரா
இந்தியாவின் இதயமான மகாராஷ்டிரா இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள போதை மருந்து கலாச்சாரம் மற்றும் இளைஞர்களிடையே நிலவும் மன அழுத்தம் காரணமாக இங்கு தற்கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது. இங்கு ஒரு லட்சம் பேருக்கு தற்கொலை விகிதம் 18.1 ஆக உள்ளது.



Click it and Unblock the Notifications

