Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
வெளிநாட்டில் படித்த இந்திய அரசியல்வாதிகள் யார்யார்-ன்னு தெரியுமா?
யாருக்கு தான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கிறது? இன்று யாரிடம் சென்று நீங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை தான் செய்கிறீர்களா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்ற பதில் தான் வரும். இதுவரை உலகில் உள்ள ஒவ்வொரு துறையிலும் வேலை செய்வதற்கு அந்த துறைக்கு ஏற்ற படிப்பை படித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு துறையில் மட்டும் அந்த கட்டாயம் இல்லை. அது தான் அரசியல்.
இந்திய அரசியலை எடுத்துக் கொண்டால், படித்து அரசியல்வாதியாக இருப்பவர்களும் உள்ளனர், படிக்காமல் அல்லது குறைவாக படித்து அரசியல்வாதிகளாக இருப்பவர்களும் உள்ளனர். அதுவும் சில இந்திய அரசியல்வாதிகள் வெளிநாட்டில் படித்தவர்கள் என்பது தெரியுமா? நடந்து வரும் மக்களவை தேர்தல்களுக்கு மத்தியில், வெளிநாட்டில் படித்துவிட்டு இந்திய அரசியலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் யார்யார் என்பதைக் காண்போம்.

1. மன்மோகன்சிங்
இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் அவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். 1932 ஆம் ஆண்டில் பிடித்த மன்மோகன் சிங் அவர்கள் பஞ்சாப் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். அதன் பின் அவர் பொருளாதாரம் குறித்த மேற்படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் முடித்தார்.
2. சசி தரூர்
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருபவர் தான் சசி தரூர். இவர் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஃபிளெச்சர் ஸ்கூல் ஆஃப் லா அண்ட் டிப்ளமசியில் சர்வதேச உறவுகள் மற்றும் விவகாரங்களில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு முன் டெல்லி பல்கலைகழகத்தில் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ வரலாற்றைப் படித்தார். இவர் 2009 ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
3. ராகுல் காந்தி
இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பமான நேரு குடும்பத்தை சேர்ந்தவர் தான் ராகுல் காந்தி. இவர் சோனியா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் மகனாவார். 1970-ல் பிறந்த ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் எம்.பில் பட்டம் பெற்றவர். இவர் 2004 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார்.
4. கபில் சிபல்
அரசியல்வாதியும் வழக்கறிஞருமான கபில் சிபல் 1977 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் சட்ட பள்ளியில் எல்எல்எம் பட்டம் பெற்றார். அதற்கு முன் அவர் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். இவர் 1989 ஆம் ஆண்டில் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
5. ஜோதிராதித்ய சித்தியா
1971 ஆம் ஆண்டு பிறந்த ஜோதிராதித்யா சிந்தியா 2001 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்ட் கிராஜூவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ முடித்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய உறுப்பினர் ஆவர். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் லிபரல் ஆர்ட்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பிஏ பட்டம் பெற்றவர்.
6. சுப்பிரமணியன் சுவாமி
இந்திய அரசின் முன்னாள் புள்ளியியல் ஆலோசகரான சுப்ரமணியன் சுவாமி, ஹார்வார்டு பல்கலைகழகத்தில் ராக்ஃபெல்லர் உதவித்தொகையில் படித்தவர். இவர் 1965-ல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள லோவெல் ஹவுசில் பணிபுரிந்தார். அதற்கு முன் இவர் கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்து கல்லூரியில் இவர் இளங்கலை பட்டம் வெற்றார்.
7. சல்மான் குர்ஷித்
வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் கேபினட் அமைச்சர் சல்மான் குர்ஷித், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் செயின்ட் எட்மண்ட் ஹாலில் எம்.ஏ, சிவில் சட்ட இளங்லை பட்டம் பெற்றார். அதற்கு முன் டெல்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜாகிர் உசேனின் பேரன் ஆவார்.
8. மஹுவா மொய்த்ரா
1974 ஆம் ஆண்டில் பிறந்த மஹுவா மொய்த்ரா அமெரிக்காவின் ஹோலியோக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர். அசாம்மின் கச்சார் மாவடடத்தில் பிறந்த இவர் கொல்கத்தாவில் உள்ள கோகலே நினைவு பெண்கள் பள்ளியில் படித்தார். இவர் 2009 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.
9. அகிலேஷ் யாதவ்
1973-ல் பிறந்த அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மகன் ஆவார். இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தில் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் மைசூரில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
10. ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் பென்சில்வேனியாவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைகழகத்தின் ஹெய்ன்ஸ் கல்லூரியில் பொதுக் கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதற்கு முன் அவர் ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











