இந்தியாவில் கள்ளக்காதல் அதிகமாக இருக்கும் டாப் 10 நகரங்கள்..தமிழ்நாட்டின் இந்த ஊர்தான் முதலிடத்தில் இருக்காம்!

Top 10 Indian Cities With Most Extramarital Affairs: இந்தியாவில் திருமணம் என்பது ஒரு உறவு என்பதையும் தாண்டி அது இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாகவும் இருக்கிறது. 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நம் நாட்டில் திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்காகும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.

அதிர்ச்சியளிக்கும் விதமாக, ஏராளமான திருமணமானவர்கள் இப்போது ஆஷ்லே மேடிசன் போன்ற டேட்டிங் பயன்பாடுகள் மூலம் தங்கள் திருமணத்தை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர். இது திருமண உறவுகளை ஆராய்வதற்கான ஒரு முன்னணி உலகளாவிய தளமாகும், குறிப்பாக திருமணமானவர்கள் அல்லது உறுதியான உறவுகளில் உள்ளவர்கள் தங்கள் புதிய உறவுகளைப் பற்றி இதில் தேடுகிறார்கள்.

Top 10 Indian Cities With Most Extramarital Affairs

அதிக எண்ணிக்கையிலான திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களைக் கொண்ட நகரங்களில் பெரிய நகரங்கள் மட்டுமில்லை, மிகச்சிறிய நகரங்களும் உள்ளன. அனைத்திற்கும் மேலாக முதலிடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சிறிய நகரம் உள்ளது. ஆஷ்லே மேடிசன் தளத்தின் படி இந்தியாவில் கள்ள உறவில் அதிகம் ஈடுபடும் டாப் 10 நகரங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரம்

கோவில்களுக்கும், பட்டுப் புடவைகளுக்கும் உலகக் புகழ் பெற்ற நமது காஞ்சிபுரம் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைப் பதிவு செய்த இந்திய மாநிலம் காஞ்சிபுரம் ஆகும். டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகர்ப்புற மையங்களை விஞ்சி, இந்தியா முழுவதும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் காஞ்சிபுரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தளத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, 2024 ஆம் ஆண்டில் 17 வது இடத்திலிருந்த காஞ்சிபுரம் ஒரே வருடத்தில் முதலாவது இடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான தெளிவான காரணங்களை அந்த தளம் வழங்கவில்லை என்றாலும், இதுபோன்ற டேட்டிங் செயலிகளின் பயன்பாடு பின்தங்கிய நகரங்களிலும் அதிகரித்திருப்பதை இது வெளிப்படுத்துகிறது.

மத்திய டெல்லி

2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் கள்ள உறவில் அதிகம் ஈடுபடுபவர்கள் அதிகமுள்ள நகரங்களில் இரண்டாவது இடத்தில் மத்திய டெல்லி உள்ளது. தலைநகரின் மையப்பகுதி பணக்கார குடும்பங்கள் மற்றும் பெரிய வேலயில் இருப்பவர்களால் நிறைந்துள்ளது. வளர்ந்த இந்த நகரத்தில் நிலவும் அவசர வாழ்க்கை முறை மற்றும் அடையாளங்களின் பாதுகாப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

Top 10 Indian Cities With Most Extramarital Affairs

குர்கான்

குர்கான் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாகும், அதனால் நீண்ட நேர வேலை, மன அழுத்தம் நிறைந்த பணிச்சூழல் இங்கு இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இது போன்ற சூழல்கள் திருமணங்களில் உணர்ச்சிரீதியான தூரத்தை உருவாக்கி கள்ள உறவில் ஈடுபட வழிவகுக்கலாம் என்று கூறப்படுகிறது.

கௌதம புத்தர் நகர்- நொய்டா

டெல்லிக்கு அருகிலுள்ள இந்த தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் செயற்கைக்கோள் நகரம், திருமணத்திற்கு வெளியே புதிய உறவை நாடுபவர்களின், குறிப்பாக இளைஞர்களிடையே மற்றும் கார்ப்ப்ரேட் வேலையில் இருபவர்களிடையே வேகமாக அதிகரித்து வரும் போக்கையும் காண்கிறது.

தென்மேற்கு டெல்லி

இந்தியாவின் தலைநகரின் முக்கிய நகரமான தென்மேற்கு டெல்லி பகுதியும் பெரிய வேலைகள் மற்றும் அதிகம் படித்த மக்களால் நிறைந்துள்ளது. வேகமான வாழ்க்கை முறை மற்றும் நிதி சுதந்திரம் ஆகியவை இங்கு அதிகரிக்கும் கள்ள உறவுகளுக்கு காரணமாக இருக்கலாம்.

டேராடூன்

டேராடூன் இந்தியாவின் முக்கியமான மற்றும் அமைதியான மலை நகரமாகும். இருப்பினும், அதிகரித்த நகரமயமாக்கல் மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவை இங்கு திருமணத்திற்குப் புறம்பான உறவுகளின் அதிகரித்து வரும் போக்குக்கு சில காரணங்களாக இருக்கலாம்.

கிழக்கு டெல்லி

தேசிய தலைநகரின் கிழக்கு டெல்லி அமைந்திருக்கும் இடம் முதன்மையாக குடியிருப்பு மற்றும் வீடுகளைக் கொண்ட நடுத்தர வர்க்க குடும்பங்களைக் கொண்டுள்ளது. அவர்கள் புதிய சுவாரஸ்யமான உறவுகளைத் தேடுவதற்காக இணையத்தை நோக்கி அதிகளவில் திரும்புகின்றனர்.

புனே

புனேயின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அளவு மாணவர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் வெளிமாநிலத்தவர் என அனைவரும் கலந்து வாழ்கின்றனர். புனே மக்களின் வாழ்க்கை முறையில் மேற்கத்திய தாக்கமும், இரவு வாழ்க்கையும், ஒருதார மணம் இல்லாத உறவுகளுக்கான இடமாக அதை மாற்றி வருகின்றன.

பெங்களூரு

பெங்களூர் இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. பெங்களூரில் வசிக்கும் பல மாநில இளைஞர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் நீண்ட வேலை நேரங்களையும் சமூக சுதந்திரத்தையும் கொண்டுள்ளனர். இந்த பல்வேறு காரணங்கள் திருமணம் தாண்டிய உறவிற்கு வழிவகுக்கிறது.

தெற்கு டெல்லி

தெற்கு டெல்லியின் ஆடம்பரமான வீடுகள் அனைத்தும் சுதந்திரம் மற்றும் ரகசிய அடையாளங்களுக்கு பெயர் பெற்றது, மேலும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் இங்கு வேகமாக அதிகரிப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் இப்போது பெரிய நகரங்கள் அல்லது பெருநகரப் பகுதிகளில் மட்டும் நடப்பதில்லை என்பதை இந்தப் பட்டியல் சுட்டிக்காட்டுகிறது, சிறிய கிராமங்களும், நகரங்களும் கூட இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

Story first published: Sunday, July 27, 2025, 10:00 [IST]
Desktop Bottom Promotion