Latest Updates
-
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் டாப் 10 மாநிலங்கள்... கடைசி இடத்தில் உள்ள மாநிலம் எது தெரியுமா?
Top 10 Happiest States In India: இந்தியா பல்வேறு கலாச்சாரம், மொழி மற்றும் வெவ்வேறு வாழ்க்கைத் தரங்களையும், பன்முகத்தன்மையையும் கொண்ட மிகப்பெரிய நாடாகும். எனவே நாடு முழுவதும் மக்களும், அவர்களின் மகிழ்ச்சியும், அதற்கான காரணங்களும் வேறுபடுகின்றன. பல்வேறு ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் இந்திய மாநிலங்களின் வாழ்க்கைத் தரம், சமூக ஆதரவு, பொருளாதார ஸ்திரத்தன்மை, மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியான மாநிலங்களின் பட்டியலை உருவாகியுள்ளது.
குறைந்த மகிழ்ச்சி விகிதங்களை மாநிலங்கள் வறுமை, இயற்கை பேரழிவுகள் அல்லது அரசியல்ரீதியான பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இந்திய மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கை மற்றும் ஹேப்பிபிளஸ் கன்சல்டிங்கின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் டாப் 10 மகிழ்ச்சியான மாநிலங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இமாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம் அதன் மௌண்டைன் வியூ பாய்ன்ட்ஸ் மற்றும் சுற்றுலா தளத்திற்காக விரும்பப்படுகிறது. இங்கு இருக்கும் மக்கள் இயற்கை உடன் இணைத்து வாழவும் அதை மதிக்கவும் விரும்புகிறார்கள். இதனால் இது இந்தியாவின் மகிழ்ச்சிக் குறியீட்டில் மகிழ்ச்சியான மாநிலத்தின் வரிசையில் முதலிடத்தை பெற முக்கிய பங்களிக்கிறது.
மிசோரம்
இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலங்களின் வரிசையில் ஒன்றாக மிசோரம் எப்போதும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைவது மாநிலத்தின் வலுவான சமூக உணர்வு மற்றும் குடிமக்களிடையே அதிக அளவில் இருக்கும் கல்வியறிவு தான்.
பஞ்சாப்
அதன் வளமான, துடிப்பான கலாச்சாரம், மத பன்முகத்தன்மை மற்றும் விவசாய வெற்றிக்காக பரவலாக பிரபலமாக இருப்பது பஞ்சாப். இந்த மாநிலத்தின் பண்டிகை சூழ்நிலையும், சுவையான உணவும் உண்மையிலேயே உலகளவில் புகழ் பெற்றவை. விவசாயமும், பொருளாதார வளர்ச்சியும் இங்கு சீரான வளர்ச்சியில் உள்ளது. இது மக்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.
குஜராத்
குஜராத் வலுவான பொருளாதாரம் மற்றும் வளமான பாரம்பரியம் முதல் பல வெற்றிகரமான தொழில்கள் வரை அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த மாநிலம் அதன் சமூக மனப்பான்மைக்கும் பெயர் பெற்றிருக்கிறது. இவை அனைத்தும் குஜராத்தை மகிழ்ச்சியான மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற செய்யும் வாய்ப்பை கொடுக்கின்றன .
சிக்கிம்
சிக்கிம் அதன் அற்புதமான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது, மேலும் இந்த மாநிலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாவில் அதிக கவனம் செலுத்துகிறது. அதன் அமைதியான சூழ்நிலை மற்றும் வானிலை மற்றும் அமைதியான அரசியல் சூழல் மக்களிடையே மகிழ்ச்சியை ஊக்குவிக்கிறது.
அருணாச்சலப் பிரதேசம்
இந்தியாவில் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் அடர்த்தியான மழைக்காடுகளில் ஒன்று அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளது. இந்த மாநிலத்தின் பழங்குடி சமூகம் அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கிறது. இயற்கையின் பாதுகாப்பில் மகிழ்ச்சியாக வாழ வாழ மாநிலம் மிகவும் சரியானது.
கேரளா
அதிக படிப்பறிவு விகிதம், திறமையான சுகாதாரத் துறை, மத நல்லிணக்கம் மற்றும் இயற்கை வளம் நிறைந்த மாநிலம் ஆகியவற்றின் கலவையாக கேரளா உள்ளது, அதனால்தான் கேரளா கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் கேரளா செலுத்தும் கவனம் மக்களின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது..
மேகாலயா
பாரம்பரிய கலைத்திறனை மையமாகக் கொண்ட ஆச்சரியப்படுத்தும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அமைதியான இயற்கை காட்சிகள் உட்பட மேகாலயாவின் இயற்கை அழகு, மேகாலயாவை இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலங்களில் ஒன்றாக மாற்றுறது.
இவை தவிர அந்தமான் தீவுகள் மற்றும் பாண்டிசேரியும் மகிழ்ச்சியான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஆனால் அவை யூனியன் தேசங்களாக இருப்பதால் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
கடைசி இடம்
இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது. மக்களின் மகிழ்ச்சியை பெரிதும் பாதிக்கும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் காரணமாக உத்தரப் பிரதேசம் இந்தியாவில் மகிழ்ச்சியற்ற மாநிலமாக உள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைப்பது எளிய மக்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதால் இங்கு இந்த பிரச்சினை நிலவுகிறது மேலும் வறுமையும் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
இங்கு நிலவும் குறைந்த கல்வியறிவும் வளர்ச்சியை பாதிக்கிறது, இது தனிநபர் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது. பாலின சமத்துவமின்மை உத்தரப் பிரதேசத்தில் பரவலாக உள்ளது, இது சமூகத்தில் பெண்களின் பரவலான ஏற்றத்தாழ்வுக்கு காரணமாக இருக்கிறது மற்றும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியைக் குறைக்கிறது.



Click it and Unblock the Notifications
