Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
உலகில் புத்திசாலியான மக்கள் மிகவும் குறைவாக உள்ள டாப் 10 நாடுகள்... முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா?
ஒருவரின் புத்திசாலித்தனத்தை அளவிட பல வழிகள் இருந்தாலும் உலகம் முழுவதும் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொதுவான உத்தி என்றால் அது IQ அளவீடுதான். IQ அல்லது நுண்ணறிவு அளவு என்பது ஒரு நபரின் அறிவாற்றல் திறன்களின் அளவீடு ஆகும், சராசரி IQ பொதுவாக 100 க்குள் இருக்கிறது. தனிநபர்களின் அறிவுசார் திறன் மற்றும் அறிவாற்றல் திறன்களை மதிப்பிடுவதற்கு IQ மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன.
IQ மதிப்பெண் 70-க்கு கீழே இருப்பது அறிவுசார் குறைபாட்டைக் குறிக்கிறது, அதே நேரத்தில் 130 க்கு மேல் இருப்பது திறமையானக் கருதப்படுகிறது. இந்த பதிவில் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மிகக் குறைந்த IQ மதிப்பெண்களைக் கொண்ட டாப் 10 நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

தெற்கு சூடான்
IQ மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது தெற்கு சூடான். இதன் சராசரி IQ மதிப்பெண் 61.63 மற்றும் தரவரிசையில் 188 வது இடத்தில் உள்ளது. பல காலமாக நீடித்து வரும் மோதல்கள் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை போன்றவற்றால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. முதன்மையான பிரச்சனைகளாக போதுமான கல்வி வளங்களின்மை, பெருமளவிலான இடப்பெயர்ச்சி மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவை அடங்கும், இது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கற்றல் திறனை ஆழமாக பாதிக்கிறது.
சியரா லியோன்
இந்த பட்டியலில் சியரா லியோன் சராசரி 62.20 மதிப்பெண்ணுடன் தரவரிசையில் 187-வது இடத்தில் உள்ளது. இந்த நாடு பல சவால்களை எதிர்கொள்கிறது, குறிப்பாக பொதுக் கல்வி முறை மற்றும் அதிக அளவு வறுமை முக்கியமான சவால்களாகும், இவை இரண்டும் நாட்டின் செயல்திறனை நிர்ணயிக்கும் குறிப்பிடத்தக்க காரணிகளாகும். உள்நாட்டுப் போரின் பேரழிவு தாக்கங்கள் மற்றும் எபோலா சிக்கல் அதைத் தொடர்ந்து வந்த சுகாதார நெருக்கடிகள், பள்ளிப்படிப்பை மிகவும் கடினமாக மாற்றியது.
காம்பியா
காம்பியாவின் சராசரி IQ மதிப்பெண் 62.21 மற்றும் நாடுகளின் தரவரிசையில் 186 வது இடத்தில் உள்ளது. அதன் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது காம்பியா ஓரளவிற்கு ஸ்திரத்தன்மை கொண்ட காலகட்டங்களை அனுபவித்திருந்தாலும், அது குறைவான வளங்களுடனும் அடிப்படை விவசாயத்தை நம்பியிருப்பதுடனும் தொடர்ந்து போராடி வருகிறது, இதன் விளைவாக, குறிப்பாக கிராமப்புறங்களில், தொடர்ந்து வறுமை நிலவுகிறது. இந்த நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் கல்வித் தரம் மற்றும் பள்ளி அணுகலை பாதிக்கிறது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR)
மத்திய ஆப்பிரிக்க குடியரசு சராசரி IQ மதிப்பெண்ணாக 63.57 பெற்றுள்ளது மற்றும் தரவரிசை பட்டியலில் 185 வது இடத்தில் உள்ளது. CAR ஆழ்ந்த வறுமை மற்றும் தொடர்ச்சியான உள்நாட்டு மோதல்களால் நிறைந்த நாடாக உள்ளது, இதன் விளைவாக பரவலான இடப்பெயர்ச்சி மற்றும் அத்தியாவசிய சேவைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மோதல்கள் பள்ளிகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பை சிக்கலானதாக மாற்றியுள்ளது, இதன் விளைவாக மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் போதுமான கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்தை பெறவில்லை.
கேமரூன்
கேமரூனின் சராசரி IQ மதிப்பெண் 63.87 ஆக உள்ளது. இந்த நாடு குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டிருந்தாலும், அதன் கல்வி முறையின் தரம் மற்றும் இங்குள்ள பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மோதல்களால் அனைவருக்கும் கல்வி கிடைப்பது கடினமாகிறது. குறைந்த அறிவாற்றல் மதிப்பெண்களுக்கு காரணமாக இருக்கும் சிக்கல்களில் வளக் கட்டுப்பாடுகள், பொதுப் பள்ளிகளில் கற்பித்தலின் குறைந்த தரம் போன்றவை முக்கியமானவை.
கானா
கானாவின் சராசரி IQ மதிப்பெண் 64.42 ஆக உள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் கானா பெரும்பாலும் முன்னணி நாடாகக் கருதப்பட்டாலும், குறைவான சேர்க்கை விகிதங்களுடன் கல்வித் தரத்தைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிகொள்கிறது. கூட்ட நெரிசலான வகுப்பறைகள், போதுமான கற்பித்தல் பொருட்கள் மற்றும் குழந்தைள் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள் போன்றவை முக்கியமான சிக்கல்களாக உள்ளது.
சாவோ டோம் மற்றும் பிரின்சிப்
சாவோ டோம் மற்றும் பிரின்சிப் சராசரியாக 64.56 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இந்த சிறிய தீவு நாடு அதன் வரையறுக்கப்பட்ட நிலம் மற்றும் ஏற்றுமதிகளை நம்பியிருப்பதால் வித்தியாசமான சவால்களை எதிர்கொள்கிறது. வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட ஒரு தீவு நாட்டில் வலுவான, நவீன கல்வி உள்கட்டமைப்பை உருவாக்குவதில் உள்ள சிரமங்கள் இதை IQ குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக மாற்றுகிறது.
மலாவி
மலாவியின் சராசரி IQ மதிப்பெண் 64.58. உலகின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படும் மலாவியின் அறிவாற்றல் மதிப்பெண்கள், பரவலான வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற குறிப்பிடத்தக்க சிக்கல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன, இது ஆரம்பகால குழந்தை பருவ மூளை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தடையாக உள்ளது.
லைபீரியா
லைபீரியா சராசரியாக 65.02 மதிப்பெண்களைப் பெற்றது. உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளைப் போலவே, லைபீரியாவின் கல்வி முறையும் உள்கட்டமைப்பை அழித்து, நாட்டு மக்களின் கல்வியில் மோசமான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சீரற்ற பள்ளிப்படிப்பின் விளைவாக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்கள் இல்லாதது போன்றவற்றால் நாட்டின் கல்வித்தரம் மிகவும் மோசமாக உள்ளது.
கினியா
கினியாவின் சராசரி IQ மதிப்பெண் 65.08. அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சுரங்க வருவாயை அதிகமாகச் சார்ந்திருப்பதால், நாடு கணிசமான வளர்ச்சித் தடைகளை எதிர்கொள்கிறது. நாட்டின் வருமானம் அதன் வளர்ச்சிக்காக செலவிடப்படுவதில்லை. நகர்ப்புற மையங்களைத் தாண்டி நாட்டின் உட்புறத்தில் கல்வி அணுகலை விரிவுபடுத்துதல், சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான அரசியல் சூழலை உறுதி செய்தல் போன்றவற்றில் உள்ள சவால்கள் காரணமாக கினியா இந்த நிலையில் உள்ளது.



Click it and Unblock the Notifications
