Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க
உலகில் அதிக புத்திசாலிகள் இருக்கும் டாப் 10 நாடுகள் இதுதான்... இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
புத்திசாலித்தனம் என்பது நபருக்கு நபர் மாறுபடும். அதேபோல ஒவ்வொரு நாட்டுக்கும் கூட வேறுபடும். உலகில் அதிக புத்திசாலிகள் கொண்ட நாடுகளை கண்டறிவது என்பது மிகவும் கடினமாகும். ஏனெனில் இதை கண்டறிய பல காரணிகளை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பின்லாந்து அமைப்பான Wiqtcom Inc நடத்திய ஆய்வின்படி, ஆசிய நாடுகள்தான் அதிக IQ உள்ள மிகவும் புத்திசாலித்தனமான நாடுகளாக உள்ளது.
இந்த அமைப்பு 2019 முதல் நாடுகளின் நுண்ணறிவைத் தீர்மானிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது இந்த ஆய்வுகளின் அடிப்படையில் உலகின் அதிக புத்திசாலிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் அதிக புத்திசாலிகளைக் கொண்ட உலகின் டாப் 10 நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ஜப்பான்
இந்த பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, ஜப்பானியர்கள் 112.30 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், இது அவர்களை பட்டியலில் சிறந்தவர்களாக மாற்றுகிறது. ஜப்பானியர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறந்தவர்கள் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஜப்பானின் தொழில்நுட்பம் மற்ற நாடுகளை விட எப்போதும் மேம்ப்பட்டதாக இருக்க இதுவே காரணம்.
ஹங்கேரி
ஐரோப்பிய கண்டத்திலும் சில புத்திசாலியான சில நாடுகள் உள்ளது, ஹங்கேரி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹங்கேரி 110.23 மதிப்பெண்கள் பெற்று, ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் புத்திசாலியான நாடாக மாறியுள்ளது. இதற்குக் காரணம் ஹங்கேரியின் வலுவான கல்வி முறைதான்.
தைவான்
தைவான் அதன் புத்திசாலித்தனமான மக்கள்தொகை உலகின் புத்திசாலி நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 111.19 மதிப்பெண்கள் மூலம், ஜப்பான் மற்றும் ஹங்கேரிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இத்தாலி
இத்தாலியர்கள் தொழில்நுட்ப அறிவு மற்றும் கணிதத்தில் சிறந்தவர்கள். 110.83 மதிப்பெண்களுடன் இத்தாலி நான்காவது இடத்தில் உள்ளது. கலிலியோ மற்றும் லியோனார்டோ டா வின்சி போன்ற உலகின் மிகப்பெரிய மேதைகள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியா
கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் தென் கொரியா இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென் கொரியர்கள் புத்திசாலிகளாக இருப்பதற்குக் காரணம், கல்வியில் நல்ல மதிப்பெண்கள் மற்றும் தரங்களைப் பெறுவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தென் கொரியாவில் மக்களின் புத்திசாலித்தனத்தை தீர்மானிப்பதில் எண்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தென் கொரியா இந்த ஆய்வில் 110.80 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.
செர்பியா
IQ-வில் அதிக மதிப்பெண் பெறும் மற்றொரு ஐரோப்பிய நாடு செர்பியா. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது 110.60 மதிப்பெண்களைப் பெற்று, உலகின் ஆறாவது புத்திசாலித்தனமான நாடாக செர்பியா உள்ளது.
ஈரான்
இந்த பட்டியலில் உள்ள ஆச்சரியமளிக்கும் நாடு ஈரான். இது 110.27 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. கணிதம் மற்றும் கல்வித் துறையில் ஈரானின் சமீபத்திய சாதனைகள் ஈரானை இந்த பட்டியலில் இடம் பிடிக்க வைத்துள்ளது.
பின்லாந்து
பின்லாந்து 109.60 மதிப்பெண்களுடன் இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது, மேலும் அதன் வெற்றிக்கான காரணம், ஃபின்லாந்தின் கல்வி முறைதான். பின்லாந்தின் கல்வி முறை அந்த நாட்டு மக்களை உலகின் அதிக செயல்திறன் கொண்ட தொழிலாளர்களாக மாற்றுகிறது மற்றும் அதிக திறமை கொண்ட ஆசிரியர்களை உருவாக்குகிறது.
ஹாங் காங்
ஹாங்காங்கின் உயர் நுண்ணறிவு அயோடின் அதிகம் உள்ள உணவில் இருந்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, மேலும் மன திறன் வளர்ச்சியில் அயோடின் முக்கிய பங்கு வகிக்கிறது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் ஹாங் காங் 109.57 மதிப்பெண்களைப் பெற்று, அதிக IQ உள்ள நாடுகளின் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
வியட்நாம்
வியட்நாம் இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது, வியட்நாம் இந்த ஆய்வில் 108.82 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் உள்ள ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு இதுவாகும்.
இந்தியா
இந்தியா இந்த பட்டியலில் 143-வது இடத்தில் உள்ளது. இந்தியா இந்த ஆய்வில் பெற்றுள்ள மதிப்பெண் 76.24 மட்டுமே.



Click it and Unblock the Notifications

