Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
உலகில் அதிக அறிவாளிகள் இருக்கும் டாப் 10 நாடுகள்... முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?
ஒருவரின் புத்திக்கூர்மை எவ்வளவு வலிமையானது அறிந்து கொள்ள உதவுவது அவர்களின் IQ-தான். அறிவாற்றல் திறனை அளவிடுவதற்கு, நுண்ணறிவு அளவுகோல் (IQ) ஒரு பயனுள்ள அளவுகோலாகும், இது ஒருவரின் இயற்கையான திறனை மட்டுமல்ல, கல்வியின் தரம், கலாச்சார முன்னுரிமைகள் மற்றும் கொள்கை செயல்திறன் ஆகியவற்றையும் சொல்கிறது.
ஒருவரின் தனிப்பட்ட IQ-வை கணக்கிடுவது போல எளிதானதல்ல ஒரு நாட்டின் IQ-வை கணக்கிடுவது. "The Intelligence of Nations" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வு உலகில் அதிக IQ கொண்ட நாடுகளின் பட்டியலை தயாரித்துள்ளது.

அதிக IQ உள்ள நாடுகள் பெரும்பாலும் வலுவான கல்வி அமைப்புகள், வலுவான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் விரைவான தொழில்நுட்ப மாற்றத்தின் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கும் பணியாளர்களைக் கொண்டுள்ளன. உலக மக்கள்தொகை மதிப்பாய்வின்படி, அதிக IQ கொண்ட முதல் 10 நாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த தரவுகள் Lynn/Becker Scale-யை அடிப்படையாகக் கொண்டது.
ஜப்பான்
ஜப்பான் 106.48 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது, இது ஜப்பானியர்களை சிறந்த புத்திசாலிகளாக மாற்றுகிறது. ஜப்பானியர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறந்தவர்கள் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஜப்பான் அதன் எலக்ட்ரானிக்ஸ், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் தரத்திற்காக உலகம் முழுக்க பிரபலமானது, அவை மற்ற நாடுகளை விட மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.
தைவான்
106.47 மதிப்பெண்களுடன் தைவான் இரண்டாவது இடத்தில் உள்ளது. தைவான் அதன் புத்திக்கூர்மை வாய்ந்த மக்கள் காரணமாக உலகில் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. தற்போது செமிகண்டக்டர் சந்தையில் தைவான் பெரும் பங்கைக் கொண்டுள்ளது, மேலும் இந்த நாட்டு மக்களின் புத்திசாலித்தனம் அதை சாத்தியமாக்கியுள்ளது.
சிங்கப்பூர்
இந்த ஆய்வில் சிங்கப்பூர் 105.89 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மாணவர்களிடையே விமர்சன சிந்தனை மற்றும் பகுத்தறிவு திறன்களில் அதிக கவனம் செலுத்தும் வலுவான கல்வி முறை காரணமாக இந்த நாடு புத்திசாலி நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ளது.
ஹாங்காங்
தென்கிழக்கு ஆசிய நாடான ஹாங்காங் 105.37 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஹாங்காங் உலகின் சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும், இது அதை சிறந்த கற்றல் மையமாக மாற்றுகிறது. ஹாங்காங்கின் அதிக IQ அயோடின் அதிகம் உள்ள உணவில் இருந்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, மேலும் மன திறனை வளர்ப்பதில் அயோடின் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.
சீனா
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்து வரும் சீனா 104.1 மதிப்பெண்களுடன் உலகின் புத்திசாலி நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. சீனாவில் உள்ள வலுவான கல்வி முறையே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
தென் கொரியா
பெரும்பாலான கிழக்கு ஆசிய நாடுகள் உலகின் மிகவும் புத்திசாலித்தனமான நாடுகளில் இடம்பிடித்துள்ளது, மேலும் தென் கொரியா இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. தென் கொரியர்கள் புத்திசாலிகளாக இருப்பதற்குக் காரணம், இங்கு நல்ல மதிப்பெண்கள் மற்றும் ரேங்கைப் பெறுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தென் கொரியாவில் உங்கள் புத்திசாலித்தனத்தை தீர்மானிப்பதில் மதிப்பெண்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. தென் கொரியா 102.35 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
பெலாரஸ்
பெலாரஸ் ஒரு கிழக்கு ஐரோப்பிய நாடாகும், ஆய்வில் இது 101.6 மதிப்பெண்களைப் பெற்றதன் மூலம் ஏழாவது இடத்தில் உள்ளது. இது கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், பலனளிக்கும் கல்வி முறை மற்றும் கணிதம், அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் விளைவாகும்.
பின்லாந்து
பின்லாந்து 101.7 மதிப்பெண்களுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது, மேலும் அதன் வெற்றிக்கான காரணம், ஃபின்லாந்து மக்களை உலகிலேயே மிகவும் உற்பத்தித் திறன் கொண்ட தொழிலாளர்களாக மாற்றும் வலுவான கல்வி முறையும், சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களும்தான்.
லிச்சென்ஸ்டீன்
லீக்டென்ஸ்டீன் 101.2 மதிப்பெண்களுடன் உலகின் புத்திசாலித்தனமான நாடுகளில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், சிறந்த கல்வி முறை, சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் கலாச்சாரம் மற்றும் அறிவு சார்ந்த கற்றலுக்கு வலுவான முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இந்த உயர் நிலையை அடைந்துள்ளது.
ஜெர்மனி
பள்ளிப்படிப்பு முதல் உயர்கல்வி நிலை வரை, உலகின் சிறந்த ஒட்டுமொத்த கல்வி முறையைக் கொண்டுள்ள நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாகும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மூலம் உலகின் சிறந்த மருத்துவ வசதி கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் ஜெர்மனி உள்ளது. இந்த ஆய்வில் ஜெர்மனி 100.74 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications
