Latest Updates
-
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
உலகில் எந்த நாடு அதிக தங்கத்தை வைத்துள்ளது தெரியுமா? இந்தியாவிடம் மட்டும் எவ்வளவு தங்கம் இருக்கு தெரியுமா?
இந்தியாவில் இப்போதும் தினமும் மக்களுக்கு அதிர்ச்சியளித்து வரும் ஒரு விஷயமென்றால் அது தங்கத்தின் விலைதான். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை கிட்டதட்ட ஒரு லட்சத்தை நெருங்கி கொண்டேயிருக்கிறது. மற்ற நாடுகளில் தங்கள் முதலீட்டுக்கான ஒரு வாய்ப்பாக கருதப்பட்டாலும், இந்தியாவில் செல்வம் மற்றும் சக்தியின் அடையாளமாக இருந்து வருகிறது.
உலக பொருளாதாரத்தில் தங்கம் எப்போதும் ஒரு முக்கியபங்கைக் கொண்டுள்ளது, அதற்கு காரணம் அதன் தொடர்ந்து அதிகரித்து வரும் மதிப்பு மற்றும் நிலைத்தன்மைதான். உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இன்றும் தங்கத்தை தங்கள் வெளிநாட்டு இருப்புக்களில் வைத்திருக்கின்றன. பணவீக்கம், நாணயத்தின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிதி நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக இது ஒரு கவசமாக செயல்படுகிறது.

2025 ஆம் ஆண்டில், பல நாடுகள் தொடர்ந்து மிகப்பெரிய தங்க இருப்புக்களை வைத்திருக்கிறது, இது சர்வதேச பொருளாதாரத்தில் தங்கத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இந்த பதிவில் உலகில் அதிக தங்கம் வைத்திருக்கும் டாப் 10 நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
உலகின் மிகப்பெரிய தங்க இருப்பு
2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 20% உயர்ந்துள்ளன, இது மத்திய வங்கிகளால் பெருமளவில் தங்கத்தை வாங்க வழிவகுத்தது. IMF இன் படி, மத்திய வங்கிகள் சமீபத்தில் தங்கள் இருப்பில் 37 டன் தங்கத்தைச் சேர்த்துள்ளன, இது கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது 206% அதிகமாகும்.
இந்தியாவில் எவ்வளவு தங்கம் உள்ளது?
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 854.73 மெட்ரிக் டன்களாக உள்ளது. இந்த இருப்பில் பெரும்பகுதி, தோராயமாக 510.46 மெட்ரிக் டன், இந்தியாவிற்குள் உள்ளது. மீதமுள்ள 324.01 மெட்ரிக் டன்கள் Bank of England மற்றும் the Bank for International Settlements-ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 20.26 மெட்ரிக் டன் தங்கம் வைப்புத்தொகைகளில் வைக்கப்பட்டுள்ளது.
உலகில் எந்த நாட்டிடம் அதிக தங்கம் உள்ளது?
அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான தங்க இருப்புக்களுடன் முதலிடத்தில் உள்ளது. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் 8,133.46 டன்களுக்கும் அதிகமான தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதில் பெரும்பாலானவை ஃபோர்ட் நாக்ஸ் போன்ற இடங்களில் பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. இது அதன் மொத்த வெளிநாட்டு இருப்புக்களில் 72.41% ஆகும். அமெரிக்காவின் மிகப்பெரிய தங்க இருப்பு அமெரிக்க டாலரின் தற்போதைய வலுவான நிலைக்கு முக்கியமானா காரணமாக உள்ளது.
உலகில் அதி தங்கம் வைத்துள்ள டாப் 10 நாடுகள்
1. அமெரிக்கா - 8,133.46 டன்கள்
2. ஜெர்மனி - 3,351.53 டன்கள்
3. இத்தாலி - 2,451.84 டன்கள்
4. பிரான்ஸ் - 2,436.97 டன்கள்
5. ரஷ்யா - 2,335.85 டன்கள்
6. சீனா - 2,264.32 டன்கள்
7. ஜப்பான் - 845.97 டன்கள்
8. இந்தியா - 840.76 டன்கள்
9. நெதர்லாந்து - 612.45 டன்கள்
10. துருக்கி - 584.93 டன்கள்
இந்தியாவின் சர்வதேச முதலீட்டு நிலை
இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவின் சர்வதேச முதலீட்டு நிலை (IIP) $108.4 பில்லியன் அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் வெளிப்புற நிதி நடவடிக்கைகளின் வலிமையை பிரதிபலிக்கிறது. இந்த அறிக்கை இந்திய ரிசர்வ் வங்கியால் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வெளியிடப்படுகிறது.



Click it and Unblock the Notifications
