உலகில் உயரம் குறைவானவர்கள் வாழும் டாப் 10 நாடுகள்... இந்தியர்களின் சராசரி உயரம் எவ்வளவு தெரியுமா?

Top 10 Countries With Shortest People in the World: சமூகத்தில் ஒருவரின் அடையாளத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் தோற்றம் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்து அவர்களை எடை போடுவது தவறான விஷயமாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அதைத்தான் செய்கிறார்கள். ஒருவரின் தோற்றத்தில் இருக்கும் சில அம்சங்கள் மிகவும் வசீகமானதாக அறியப்படுகின்றன.

உயரம் முதல் நிறம் வரை மனிதர்களின் தோற்றத்தில் உள்ள இந்த பன்முகத்தன்மை அவர்களின் மரபியல், உணவுமுறை, சுற்றுச்சூழல் நிலை போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. ஒருவரின் உயரம் என்பது அவர் பிறந்த நாட்டைப் பொறுத்துக் கூட மாறுபடும். உலகில் சில நாடுகள் தங்கள் மக்கள்தொகையின் சராசரி உயரம் குறைவாக இருப்பதற்காக அறியப்படுகின்றன. உலக மக்கள்தொகை மதிப்பாய்வு அறிக்கையின்படி, உலகின் உயரம் குறைவான மக்களைக் கொண்ட டாப் 10 நாடுகள் என்னென்ன மற்றும் இதில் இந்தியாவின் நிலை என்னவென்பதை தெரிந்து கொள்ளலாம்.

Top 10 Countries With Shortest People in the World Where India Stands

திமோர்-லெஸ்டே

உலகிலேயே மிகக் குறைந்த சராசரி உயரம் கொண்ட மக்கள் வசிக்கும் நாடு திமோர்-லெஸ்டே. இங்கு ஆண்கள் தோராயமாக 160 செ.மீ (5 அடி 3 அங்குலம்) உயரம் கொண்டவர்கள். பெண்கள் மிகக் குறைந்த சராசரி உயரம் 153 செ.மீ (5 அடி) கொண்டவர்கள். உயரம் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் மக்களிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மரபணுக் கோளாறுகளுமாகும்.

லாவோஸ்

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில், உலகின் இரண்டாவது மிகவும் உயரம் குறைவான மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஆண்கள் சுமார் 163 செ.மீ (5 அடி 4 அங்குலம்) உயரமும், பெண்கள் 153 செ.மீ (5 அடி) உயரமும் கொண்டுள்ளனர். இங்குள்ள குறுகிய உயரத்திற்கு அவர்களின் மரபணுக்கள் முக்கியக் காரணமாக உள்ளது.

சாலமன் தீவுகள்

பசிபிக் மெலனேசிய நாடான சாலமன் தீவு மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்களின் சராசரி உயரம் 163 செ.மீ (5 அடி 4 அங்குலம்) ஆகும். பெண்களின் சராசரி உயரம் 157 செ.மீ (5 அடி 2 அங்குலம்) ஆகும். தீவுவாசிகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினைகளை சந்திக்கின்றனர் , இது அவர்களின் உயரத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

Top 10 Countries With Shortest People in the World Where India Stands

பப்புவா நியூ கினியா

சாலமன் தீவுகளைப் போலவே, பப்புவா நியூ கினியாவிலும் ஆண்களின் சராசரி உயரம் 163 செ.மீ (5 அடி 4 அங்குலம்) மற்றும் பெண்களின் சராசரி உயரம் 157 செ.மீ ஆகும். இந்த மாற்றங்களுக்கு அவர்களின் கலாச்சார மற்றும் புவியியல் காரணிகளால் ஏற்படுகின்றன.

மொசாம்பிக்

தென்கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மொசாம்பிக்கில் ஆண்களின் சராசரி உயரம் தோராயமாக 164 செ.மீ (5 அடி 5 அங்குலம்), பெண்களின் உயரம் 155 செ.மீ (5 அடி 1 அங்குலம்). இது வெப்பமண்டல காலநிலை கொண்ட கடலோர நாடாக இருந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுகாதார பிரச்சினைகள் சராசரி உயரத்தை பாதிக்கின்றன.

குவாத்தமாலா

இந்த மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், ஆண்களின் சராசரி உயரம் 164 செ.மீ (5 அடி 5 அங்குலம்), பெண்களின் உயரம் சுமார் 151 செ.மீ (4 அடி 11 அங்குலம்) ஆகும். குவாத்தமாலாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் பூர்வீக மாயன் இனத்தவர்கள், மேலும் உயரம் குறைவாக இருப்பதற்கான காரணம் அவர்களின் மரபணுக்கள் ஆகும்.

நேபாள்

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் இமயமலையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்களின் சராசரி உயரம் 164 செ.மீ (5 அடி 5 அங்குலம்) மற்றும் பெண்கள் 152 செ.மீ (5 அடி) உயரம் கொண்டுள்ளனர். இந்த நாடு அமைந்துள்ள இடமும், மோசமான விளைச்சலும் நீண்ட காலமாக மக்கள்தொகையின் குறுகிய உயரத்திற்கு காரணமாக இருக்கலாம்.

ஏமன்

ஏமன் அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்களின் சராசரி உயரம் 164 செ.மீ., பெண்களின் சராசரி உயரம் 155 செ.மீ.. அதன் நீண்ட வரலாறு, பொருளாதார பிரச்சினைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவை இங்கு குறுகிய உயரத்திற்கு வழிவகுக்கிறது.

பங்களாதேஷ்

பூமியில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதால், வங்கதேசத்தில் ஆண்கள் 165 செ.மீ (5 அடி 5 அங்குலம்) உயரமும், பெண்கள் 152 செ.மீ (5 அடி) உயரமும் கொண்டுள்ளனர். நகரமயமாக்கல் மற்றும் கடந்த தசாப்தங்களில் நிலவிய ஊட்டச்சத்து குறைபாடு அவர்களின் மிகக் குறைந்த உயரத்திற்கு காரணமாக உள்ளது.

மடகாஸ்கர்

மடகாஸ்கர் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ளது. நாட்டின் சராசரி ஆண்களின் உயரம் தோராயமாக 165 செ.மீ., பெண்களின் உயரம் 153 செ.மீ. ஆகும். இந்த தீவின் பன்முகத்தன்மையும், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பாரம்பரியத்தின் கலவையும் அவர்களின் உயரத்தில் பிரதிபலிக்கின்றன.

இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

மிகக் குறைந்த உயரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சராசரி உயரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளது. பில்லியன் கணக்கான மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஆண்களின் சராசரி உயரம் 5 அடி 6 அங்குலம் மற்றும் பெண்களின் சராசரி உயரம் 5 அடி 1 அங்குலமாக உள்ளது. இந்தியர்களின் உயரம் சராசரியானது, ஆனால் உலகளாவிய சராசரியை விட சற்று குறைவாக உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு, வாழ்க்கை முறை மற்றும் மரபியல் போன்ற காரணிகளால் இந்த நிலை நிலவுகிறது.

Story first published: Friday, August 8, 2025, 16:10 [IST]
Desktop Bottom Promotion