Latest Updates
-
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்!
ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமுள்ள டாப் 10 நாடுகள்... அதுக்கு காரணம் என்ன தெரியுமா?
உலகின் வளர்ச்சிக்கும், சமநிலைக்கு பாலின சமநிலை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் இது உலகின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை கணிசமாக பாதிக்கிறது. பெரும்பாலான நாடுகளில், பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே சற்று அதிகமாக உள்ளது. ஆனால் விதிவிலக்காக, அதிக பெண் மக்கள்தொகை கொண்ட சில நாடுகள் உள்ளன.
மக்களின் இடம்பெயர்வு விகிதங்கள் மற்றும் ஆயுட்கால வேறுபாடுகள் முதல் சமூக-பொருளாதார நிலை என இந்த எதிர் மக்கள்தொகைக்கு பல காரணிகள் காரணமாகின்றன. உலக மக்கள்தொகை மதிப்பாய்வு அறிக்கையின்படி, ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமுள்ள டாப் 10 நாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜிபூட்டி
உலகிலேயே அதிக பெண் மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஜிபூட்டி, இங்கு ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 120 பெண்கள் உள்ளனர். பல ஆண்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயர்கிறார்கள், இதனால் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஒரு உள்நாட்டு மக்கள் தொகை உருவாகியுள்ளது. இங்கு பெண்கள் பெரும்பாலும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்குகிறார்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் மற்றும் கல்வியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
ஹாங்காங்
ஹாங்காங்கில் ஆண்களை விட அதிக எண்ணிக்கையிலான பெண்கள் உள்ளனர், குறிப்பாக சுகாதாரம், இங்கு 100 ஆண்களுக்கு 116 பெண்கள் உள்ளனர். கல்வி மற்றும் விருந்தோம்பல் போன்ற நகர்ப்புறத் துறைகளில் பெண்களின் ஆதிக்கம் அதிகமுள்ளது. பெண்களின் நீண்ட ஆயுள் மற்றும் ஆண்களின் இடப்பெயர்ச்சி போன்றவை பெண்களின் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கு பங்களிக்கின்றன.
லிதுவேனியா
மற்ற பால்டிக் நாடுகளைப் போலவே, லிதுவேனியாவிலும் தொடர்ந்து அதிக பெண் மக்கள் தொகை உள்ளது. இங்கு 100 ஆண்களுக்கு 116 பெண்கள் உள்ளனர். இங்கு பெண்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள், மேலும் ஆண் பணியாளர்களின் இடம்பெயர்வு பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் உள்ளது, குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது
பஹாமாஸ்
பஹாமாஸில், பெண்கள் மக்கள் தொகையில் அதிக பங்கைக் கொண்டுள்ளனர். இங்கு 100 ஆண்களுக்கு 116 பெண்கள் வசிக்கின்றனர். இது நாட்டின் வயதான மக்கள்தொகை மற்றும் வெளிநாடுகளில், குறிப்பாக சுற்றுலா மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலைகளுக்காக ஆண்கள் இடம்பெயர்வதற்கான போக்கு முக்கிய காரணமாக உள்ளது.
ரஷ்யா
உலகின் மிகப்பெரிய பெண் மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இங்கு 100 ஆண்களுக்கு 115 பெண்கள் வசிக்கின்றனர். வரலாற்றுப் போர்களின் போது பெண்களை விட அதிக ஆண்கள் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வயதானவர்களில், தற்போது ஆண்களை விட பெண்கள் கணிசமாக அதிகமாக உள்ளனர்.
பெலாரஸ்
பெலாரஸ் ரஷ்யாவைப் போலவே அதே முறையைப் பின்பற்றுகிறது, இந்த நாட்டில் 100 ஆண்களுக்கு 115 பெண்கள் வாழ்கின்றனர். ஆண்களை விட பெண்களின் மக்கள்தொகை அதிகமுள்ளது. அதிக ஆண் இறப்பு மற்றும் நீண்ட பெண் ஆயுட்காலம் ஆகியவை இந்த ஏற்றத்தாழ்வுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களாக உள்ளது.
லாட்வியா
லாட்வியாவில், குறிப்பாக வயதானப் பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நாட்டில் 100 ஆண்களுக்கு 115 பெண்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகை அமைப்பு கடந்த கால போர்கள் மற்றும் நவீன இடம்பெயர்வுகளை பிரதிபலிக்கிறது, இது பாலின விகிதத்தை பெண்களுக்கு சாதகமாக மாற்றியுள்ளது.
அங்கியுலா
சிறிய கரீபியன் பிரதேசமான அங்கியுலாவில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஆண்கள் இடம்பெயர்வதால், அதிக பெண் மக்கள் தொகை உள்ளது. இங்கு 100 ஆண்களுக்கு 114 பெண்கள் வசிக்கின்றனர். ஆண்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடும் சூழலில் பெண்கள் தீவில் தங்கி உள்ளூர் நிர்வாக மற்றும் கல்வித் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
புவேர்ட்டோ ரிக்கோ
புவேர்ட்டோ ரிக்கோவின் மக்கள்தொகையில் ஆண்களை விட அதிகமான பெண்கள் உள்ளனர். வேலைக்காக அமெரிக்காவிற்கு ஆண்கள் அதிகம் குடிபெயர்தல் மற்றும் பெண்களின் நீண்ட ஆயுட்காலம் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இங்கு 100 ஆண்களுக்கு 112 பெண்கள் வசிக்கின்றனர். சுகாதாரம், கல்வி மற்றும் சிவில் சேவைகளில் பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
மால்டோவா
100 ஆண்களுக்கு 112 பெண்கள் என்ற விகிதத்தில் மால்டோவா பத்தாவது இடத்தில் உள்ளது. பல மால்டோவா ஆண்கள் ரஷ்யா அல்லது இத்தாலி போன்ற நாடுகளுக்கு வேலைக்காக குடிபெயர்கிறார்கள், குறிப்பாக கிராமப்புற சமூகங்களில் பெண்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications

