Latest Updates
-
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
குழந்தை பிறப்பு விகிதம் மோசமாக உள்ள டாப் 10 நாடுகள்... இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Countries With Lowest Birth Rates: உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிப்பது முதல் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வது வரை என அனைத்திற்கும் மக்கள் தொகையே அடிப்படையாக உள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் மக்கள் தொகை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஏனெனில் உலகின் பல வளர்ந்த நாடுகளின் மக்கள் தொகையை விட இந்த இரண்டு நாடுகளின் மக்கள் தொகை அதிகமாகும்.
அதிக மக்கள் தொகை என்பது அதிக மனிதவளத்தைக் குறிக்கிறது. இருப்பினும், உணவு, வேலைகள், கல்வி மற்றும் பல வளங்களுக்கான தேவை அதிகரிப்பதன் சவாலையும் அதிகரிக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பது எப்படி ஒருவிதமான சவால்களை ஏற்படுத்துகிறதோ அதேபோல பிறப்பு விகிதம் குறைவதும் சில சவால்களையும், நன்மைகளையும் கொண்டுள்ளன.

குறைந்த பிறப்பு விகிதங்கள் ஒரு நபருக்கு அதிக வளங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும், ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும். உலகில் மிகக் குறைந்த பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மக்காவ்
இந்த பட்டியலில் 0.68 மதிப்பெண்ணுடன் மக்காவ் முதலிடத்தில் உள்ளது. மக்காவ் உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. மக்காவ் என்பது சீனாவின் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதியாகும், இங்கு நகரமயமாக்கல், உயர்ந்த வாழ்க்கைத் தரம் மற்றும் விளையாட்டு மற்றும் சுற்றுலா சார்ந்த தொழிலாளர் சந்தை அதிகரித்து வருகிறது. இந்த காரணிகளால் சொத்துக்களின் விலை அதிகரித்துள்ளது மற்றும் வேலையில் அதிக கவனம் செலுத்த காரணமாகின்றன, இது குறைந்த பிறப்பு விகிதங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஹாங்காங்
0.73 மதிப்பெண்ணுடன் உலகிலேயே இரண்டாவது மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்ட மாநிலமாக ஹாங்காங் உள்ளது. நகரமயமாக்கல் மற்றும் விலையுயர்ந்த வாழ்க்கைத்தரம் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இங்கு நிலவும் வலுவான பணி நெறிமுறைகள் மற்றும் நீண்ட வேலை நேரங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கு குறைந்த நேரத்தையே வழங்குகின்றன. மேலும் அரசு கொள்கைகளும், கட்டுப்படுத்தப்பட்ட குழந்தைப் பராமரிப்பு ஆகியவையும் பிரச்சினையின் ஒரு பகுதியாக உள்ளது.
தென்கொரியா
தென்கொரியா 0.73 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தில உள்ளது. பல அரசுத் திட்டங்கள் அமலுக்கு வந்த பிறகும், உலக வரலாற்றில் மிக வேகமாகக் குறைந்து வரும் பிறப்பு விகிதங்களில் ஒன்றாக தென் கொரியா உள்ளது. அதிகப்படியான கல்விக் கட்டணம், வேலை தொடர்பான மன அழுத்தம் மற்றும் குடும்பப் பொறுப்புகளில் பாலின வேறுபாடுகள் ஆகியவை தென் கொரிய இளைஞர்களிடையே குடும்பக் கட்டுப்பாட்டை கடினமாக்கியுள்ளன.
தைவான்
0.86 மதிப்பெண்ணுடன் தைவான் நான்காவது இடத்தில் உள்ளது. தைவானில் வீட்டுவசதியின் விலை உயர்வு, கல்விப் போட்டி மற்றும் நிலையற்ற வேலைகள் போன்ற சூழல் நிலவுகிறது, இவை அனைத்தும் குறைந்த பிறப்பு விகிதங்களுக்கு காரணமாகின்றன. இரட்டை வருமானம் மற்றும் சமூக ஆதரவு நெட்வொர்க்குகள் இல்லாததன் காரணமாக குடும்பத்தை உருவாக்குவதை இளைஞர்கள் தவிர்க்கிறார்கள்.
சிங்கப்பூர்
0.95 மதிப்பெண்ணுடன் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் உள்ளது. சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வெறும் 59 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் மக்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விட தொழில் வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். விலையுயர்ந்த நகர வாழ்க்கை, நவீன வாழ்க்கை முறையுடன் சேர்ந்து, மக்களின் கருவுறுதல் தேர்வுகளை மாற்றியுள்ளது. குடும்பங்கள் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான அரசாங்க மானியங்கள் இருந்தபோதிலும், இங்கு பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.
உக்ரைன்
கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிறகு, உக்ரைன் 0.99 என்ற உலகின் மிக மோசமான பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. பொருளாதார பாதுகாப்பின்மை, குடியேற்றம் மற்றும் போர் ஆகியவை நாட்டின் மக்கள்தொகையைப் பாதித்துள்ளன வெகுவாக பாதித்துள்ளன. எதிர்கால நிச்சயமற்ற தன்மை இளம் தம்பதிகள் குழந்தைகளைப் பெறுவதைத் தவிர்க்கும் நிலைக்கு வழிவகுத்துள்ளது.
சீனா
இந்த பட்டியலில் சீனா இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஒரு குழந்தை கொள்கையை கைவிட்ட பிறகும், சீனா தொடர்ந்து 1.01 என்ற குறைந்த பிறப்பு விகிதங்களையே சந்தித்து வருகிறது. நகரமயமாக்கல், திருமண புறக்கணிப்பு, விலையுயர்ந்த குழந்தை பராமரிப்பு மற்றும் குடும்பத்தை நபற்றிய சமூக கண்ணோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி அதிகரிப்பதை கடினமாக்கியுள்ளன.
மால்டா
சிறிய மத்தியதரைக் கடல் நாடான மால்டா 1.11 குழந்தை பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. தாமதமான திருமணங்கள், அதிகரித்த வாழ்க்கைச் செலவு மற்றும் தொழில் காரணிகளால் அதன் பிறப்பு விகிதத்தில் சரிவைக் கண்டுள்ளது.
தாய்லாந்து
தாய்லாந்து கடந்த தசாப்தத்தில் அதிக பிறப்பு விகிதம் கொண்ட நாடாக இருந்து தற்போது 1.20 மதிப்பெண்ணுடன் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடாக மாறியுள்ளது. நகரமயமாக்கல், மாறி வரும் குடும்ப வடிவங்கள் மற்றும் கல்வி மற்றும் கருத்தடைக்கான விரிவான அணுகல் ஆகியவை இந்த கடுமையான மக்கள்தொகை மாற்றத்திற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகளாகும்.
இத்தாலி
இத்தாலியின் பிறப்பு விகிதம் சில ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி, இளைஞர்களின் அதிக வேலையின்மை மற்றும் தொழில்முறை வாழ்க்கையை குடும்ப வாழ்க்கையுடன் சமநிலைப்படுத்துவதில் உள்ள சிரமம் ஆகியவை குறைந்த பிறப்பு விகிதத்திற்கான சில முக்கிய காரணங்களாகும். தற்போது இத்தாலியின் பிறப்பு விகிதம் 1.21 ஆக உள்ளது.
இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
தற்போது, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.96 ஆக உள்ளது, இது 1994 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி 3.72 ஆக இருந்த நிலையில் இருந்து ஒரு நிலையான சரிவைக் குறிக்கிறது. இருப்பினும், இந்தியா இன்னும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.



Click it and Unblock the Notifications












