Latest Updates
-
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன?
உலகில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் டாப் 10 நாடுகள்... இந்தியாவிடம் எவ்வளவு தங்கம் இருக்கு தெரியுமா?
இன்று தினந்தோறும் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கும் விஷயமென்றால் அது தங்கத்தின் விலைதான். கற்பனைக்கும் எட்டாத வகையில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கத்தின் இந்த அசாதாரண விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. குறிப்பாக தங்கத்தில் அதிகளவு செய்யப்படும் முதலீடு அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
தங்கத்திற்கு உலக பொருளாதாரத்தில் எப்போதும் ஒரு முக்கியப்பங்கு உண்டு. அதன் மதிப்பு மற்றும் விலையில் உள்ள ஸ்திரத்தன்மை காரணமாகவே தங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இன்றும் தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தை வைத்திருக்கின்றனர். இதற்கு காரணம் இது பணவீக்கம், நாணய மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிதி நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக ஒரு கேடயமாகச் செயல்படுகிறது.

உலகின் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்திருந்தாலும் சில நாடுகள்தான் உலகளவில் அதிக தங்க இருப்பைக் கொண்டிருக்கின்றன. அவை எந்தெந்த நாடுகள், அந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்கா
அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான தங்க இருப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா 8,100 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது; இதில் பெரும்பாலான தங்கம் ஃபோர்ட் நாக்ஸ் போன்ற இடங்களில் உள்ள பாதுகாப்பான பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் தற்போதைய வலுவான உலகளாவிய நிலைக்கு அவர்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவும் முக்கிய காரணமாகும் .
ஜெர்மனி
ஜெர்மனி 3,350 டன்களுக்கும் அதிகமான தங்க இருப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அவர்களின் தங்கத்தின் கணிசமான பகுதி பிராங்பேர்ட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள தங்கம் வெளிநாடுகளில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் இன்னும் பராமரிக்கப்பட்டு வருகிறது. தங்கம் ஜெர்மனியின் நிதிப் பாதுகாப்பில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.
இத்தாலி
சுமார் 2,450 டன் தங்கத்துடன் இத்தாலி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இத்தாலியின் பொருளாதாரம் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருந்தாலும், அதன் மத்திய வங்கி நீண்ட கால பாதுகாப்பான சொத்தாகத் தங்கத்தையே பெரிதும் நம்பி வருகிறது.
பிரான்ஸ்
சுமார் 2,435 டன் அளவுள்ள தங்கத்துடன் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது. நாட்டின் பண ஸ்திரத்தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் பிரான்ஸ் மத்திய வங்கிக்கு ஒரு மிகவும் பயனுள்ள கருவியாக தங்கம் உள்ளது.
ரஷ்யா
ரஷ்யாவின் தங்க கையிருப்பு 2,300 டன்களுக்கும் அதிகமாக உள்ளது. அரசியல் அழுத்தங்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தாலும் ரஷ்யா கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து சீராகத் தங்கத்தைக் குவித்து வருகிறது, குறிப்பாக வெளிநாட்டு நாணயங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காகவே இவ்வாறு செய்கிறது.
சீனா
சீனா தனது தங்க இருப்பைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, 2025-ஆம் ஆண்டில் 2,200 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை சீனா குவித்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகிய சீனா, யுவானை ஆதரிப்பதற்கும் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் தனது உத்தியின் ஒரு பகுதியாகத் தங்கத்தைக் கருதுகிறது.
சுவிட்சர்லாந்து
தனது நிதி நிலை மற்றும் வங்கித் துறை வலிமைக்காக அறியப்படும் சுவிட்சர்லாந்து, சுமார் 1,040 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மிகவும் குறைவான மக்கள்தொகையைக் கருத்தில் கொள்ளும்போது, சுவிட்சர்லாந்தின் தனிநபர் தங்க கையிருப்பு உலகின் மிக உயர்ந்தவற்றில் ஒன்றாக உள்ளது.
இந்தியா
2025-ஆம் ஆண்டில், இந்தியாவின் மத்திய வங்கியின் கையிருப்பில் சுமார் 800 டன் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியா உலக அளவில் தங்க கையிருப்பில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது இந்தியாவின் கோயில்களிலும், தனிப்பட்ட அளவில் வைத்திருக்கும் பல டன் தங்கத்தைக் கணக்கில் கொள்ளாதது ஆகும். ஒருவேளை அதையும் கணக்கிட்டால் இந்தியா டாப் 3 இடங்களில் இருக்கக்கூட வாய்ப்புள்ளது.
நெதர்லாந்து
நெதர்லாந்து சுமார் 620 டன் தங்கத்தை வைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நெதர்லாந்து தனது தங்கத்தின் பெரும் பகுதியை வெளிநாட்டு வங்கிகளிலிருந்து உள்நாட்டு சேமிப்புக் கிடங்குகளுக்குத் திரும்பக் கொண்டு வந்தது.
துருக்கி
550 டன் தங்கத்துடன் துருக்கி பத்தாவது இடத்தில் உள்ளது. சமீப ஆண்டுகளாக துருக்கி நாணய மதிப்பு தொடர்பான சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன், பொருளாதார சமநிலையைப் பேணுவதற்காகத் தங்கத்தை ஒரு பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications
