Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உலகில் தினமும் அதிக மரணங்கள் நடக்கும் டாப் 10 நாடுகள் இதுதான்... இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் உலகின் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகின் மக்கள் தொகை இப்போது 8 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. சீனாவை பின்னுக்குத் தள்ளி 1.46 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே சமயம் 340 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலகில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பிறப்பது போல கிட்டதட்ட அதற்கு இணையாக மக்களின் இறப்பும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்க மக்களின் இறப்பிற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஆயிரங்கள் முதல் இலட்சங்களில் மக்கள் இறக்கின்றனர். 195 நாடுகள் கொண்ட நம் பூமியில் அதிக இறப்பு விகிதம் கொண்ட நாடுகள் என்னென்ன என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

சமீபத்திய Global Index Report வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, உலக நாடுகளின் இறப்பு விகிதங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படுகின்றன என்றும், இதற்கு முக்கியக் காரணம் அவற்றின் அதிக மக்கள் தொகை மற்றும் சுகாதார வசதிகள் போதுமான அளவு இல்லாமல் இருப்பதுதான்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகள்
- உலகில் ஒரு மணி நேரத்தில் அதிக மரணம் நிகழும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 1,221 பேர் இறக்கின்றனர். இது சீனாவில் உள்ள மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் தொடர்ச்சியான சுகாதாரப் பிரச்சினைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.
- இந்தியா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது, நம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 1,069 இறப்புகள் நிகழ்கின்றன. இந்த அதிக மரணங்களுக்குக் காரணம், மக்கள் தொகை அழுத்தம் மட்டுமல்ல, சுகாதாரத் துறையில் இருக்கும் பின்னடைவு மற்றும் மக்கள் சந்திக்கும் பல்வேறு விதமான சவால்களுமாகும்.
- இந்த பட்டியலில் உலக வல்லரசான அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 332 பேர் இறக்கின்றனர். இந்தியா மற்றும் சீனாவை விட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தபோதிலும், இது அமெரிக்காவை முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
- நைஜீரியா ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 313 மரணங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
- இந்தோனேசியா ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 238 மரணங்களைப் பதிவு செய்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
- ரஷ்யா ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கிட்டத்தட்ட 198 பேர் இறப்புகளை பதிவு செய்து ஆறாவது இடத்தில் உள்ளது.
- நமது அண்டை நாடான பாகிஸ்தான், மணிக்கு சுமார் 181 மரணங்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
- ஜப்பான், மணிக்கு ஏறக்குறைய 180 மரணங்களுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
- பிரேசில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது, அங்கு ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 167 பேர் இறக்கின்றனர்.
ஜெர்மனி, மணிக்கு சுமார் 108 இறப்புகளுடன் பத்தாவது இடத்தைப் பிடித்துதுள்ளது.
இந்த இறப்பு விகிதம் மக்கள் தொகை அளவு, சுகாதார அமைப்புகள் மற்றும் சமூக நிலைமைகள் ஆகியவை எவ்வாறு வெவ்வேறு நாடுகளில் இறப்பு விகிதங்களைச் சேர்ந்து பாதிக்கின்றன என்பதை காட்டுகிறது.



Click it and Unblock the Notifications












