Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
உலகில் படித்தவர்கள் அதிகம் வாழும் டாப் 10 நாடுகள்... இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Countries With Highest Literacy Rate: ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை அளவிடும் முக்கிய காரணிகளில் அந்த நாட்டின் கல்வியறிவு மிகவும் முக்கியமான அம்சமாகும்.ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் கல்வி மிகவும் முக்கியமானதாகும். சில நாடுகள் மேம்பட்ட கல்வி கொள்கைகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளால் கல்வி மற்றும் எழுத்தறிவில் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ளது.
அதேபோல வறுமை, பொருளாதார சிக்கல்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க காரணங்களால் சில நாடுகளில் தரமான கல்வி முறை இல்லை. உலக மக்கள்தொகை மதிப்பாய்வு அறிக்கையின்படி, உலகில் அதிக எழுத்தறிவு விகிதத்தைக் கொண்ட டாப் 10 நாடுகள் என்னென்ன மற்றும் இதில் இந்தியாவின் நிலை என்னவென்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உக்ரைன்
உலகிலேயே மிக உயர்ந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட நாடுதற்போது போர் நடந்து கொண்டிருக்கும் உக்ரைன். இங்கு கல்வியறிவு விகிதம் 100 சதவீதம் உள்ளது. இந்த மிகப்பெரிய சாதனைக்கு காரணமாக இருப்பது, அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற அந்த நாட்டின் மிகப்பெரிய குறிக்கோள்தான். சோவியத் காலத்திலிருந்தே இந்த நாடு எப்போதும் அதிக கல்வியறிவு விகிதங்களைக் கொண்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான்
உஸ்பெகிஸ்தானும் 100% கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கட்டாயக் கல்வி மற்றும் எழுத்தறிவு பிரச்சாரங்கள் நாட்டில் அனைவரையும் கல்வியறிவு பெற செய்ததில் முக்கியப்பங்கு வகித்தது. உஸ்பெகிஸ்தானின் சராசரி கல்வியறிவு விகிதம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எப்போதும் 99% க்கும் அதிகமாகவே உள்ளது.
வட கொரியா
'பூமியின் நரகம்' என்று அழைக்கப்படும் சர்வாதிகார நாடான வட கொரியாவும் 100 சதவீத கல்வியறிவு விகிதத்தையும் கொண்டுள்ளது. வட கொரியா அரசியல்ரீதியாக உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், நாடு உலகளாவிய கல்வியில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது, இதனால் கல்வியறிவு அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. இந்த நாட்டில் கல்வி இலவசம் மற்றும் கட்டாயமானது, இது குடிமக்கள் அனைவரையும் கல்வியறிவு பெறச் செய்கிறது.
அஜர்பைஜான்
அஜர்பைஜானின் சராசரி கல்வியறிவு விகிதம் 100 சதவீதம் ஆகும், இது அந்த நாட்டில் உள்ள கட்டாயக் கல்வி குறித்த அதன் நீண்டகால கல்விக் கொள்கைகளின்விளைவாகும். 1990-களின் பிற்பகுதியிலிருந்து நன்கு நிறுவப்பட்ட பொதுக் கல்வி முறையின் ஆதரவுடன் இந்த நாடு அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது.
கஜகஸ்தான்
கஜகஸ்தானின் எழுத்தறிவு விகிதமும் 100 சதவீதமாக உள்ளது. நாட்டின் சோவியத் பாரம்பரியமான தரமான கல்வி இன்றும் உயர்ந்து நிற்கிறது. இந்த நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் இளைஞர்களிடையே அதிக எழுத்தறிவு நிலைகளுடன் தரமான கல்வியை அளிக்கின்றன.
பின்லாந்து
பின்லாந்தின் கல்வி முறை உலகின் சிறந்த கல்வி முறைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது, மேலும் அது ஒவ்வொரு ஆண்டும் அதை நிரூபித்து வருகிறது. அதன் 100 சதவீத கல்வியறிவு விகிதத்திற்கான காரணம் இந்த நாட்டின் மாணவர்களை மையமாகக் கொண்ட கல்விக் கொள்கை, அதிக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பிரபலமான வாசிப்பு கலாச்சாரமாகும்.
நார்வே
நார்வேயின் சராசரி எழுத்தறிவு விகிதமும் 100 சதவீதமாக உள்ளது. இங்கு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இங்குள்ள பொதுப் பள்ளி அமைப்பு, கல்வியின் தரம் மற்றும் சமத்துவத்தில் கவனம் செலுத்துகிறது, மற்றும் குழந்தை பருவக் கல்வித் திட்டங்கள் எழுத்தறிவை கிட்டத்தட்ட உலகளாவியதாக மாற்றியுள்ளன.
ஜார்ஜியா
தேசிய அளவில் கல்வி அணுகலையும், புதுப்பித்த பாடத்திட்டத்தையும் வழங்கும் சீர்திருத்தங்களின் உதவியுடன் ஜார்ஜியா 100 சதவீத கல்வியறிவு விகிதத்தை எட்டியுள்ளது. மேலும் ஜார்ஜியா எப்போதும் தரமான ஆசிரியர் பயிற்சி திட்டங்கள் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை ஆதரித்து வருகிறது.
லக்சம்பர்க்
குறைந்த மக்கள் தொகை மற்றும் வலுவான பொருளாதாரம் லக்சம்பர்க் கல்வியில் அதிக முதலீடு செய்ய வழிவகுத்துள்ளது, இது 100 சதவீத கல்வியறிவு விகிதத்தை எட்டுவதற்கு உதவி செய்துள்ளது. இங்குள்ள பன்மொழி பள்ளிப்படிப்பு நாட்டின் கல்வி முறையின் சிறப்பம்சமாகும்.
குவாம்
குவாம் ஒரு அமெரிக்க பிரதேசமாகும், இது அமெரிக்க கல்வி முறையின் அடிப்படையில் செயல்படுகிறது மற்றும் சராசரியாக 100 சதவீத கல்வியறிவு விகிதத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா
இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 76 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் ஆண்களின் கல்வியறிவு 82.4 சதவீதமாக உள்ளது. அதேசமயம், பெண்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 65.8 சதவீதமாக உள்ளது, இது ஆண்களின் கல்வியறிவு விகிதத்தை விட மிகக் குறைவு. இந்த புள்ளிவிவரங்கள் கல்வியில் இந்திய குடிமக்களிடையே மிகப்பெரிய பாலின வேறுபாட்டை எடுத்துக்காட்டுகின்றன. பிராந்திய வேறுபாடுகள், பாலின ஏற்றத்தாழ்வு மற்றும் தரமான கல்வி கிடைப்பதில் உள்ள சிக்கல் ஆகியவை அனைத்து மக்களுக்கும் கல்வியறிவு கிடைப்பதில் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.



Click it and Unblock the Notifications
