Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
டாப் 10 Instagram பயனர்கள் கொண்ட நாடுகள்... இந்தியாவில் எவ்வளவு பேர் Instagram பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
Top 10 Countries With Highest Instagram Users: நாம் கலியுகத்தில் வாழ்கிறோம் என்பதை விட டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம் என்பதே உண்மை. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இப்போது உலகை ஆட்சி செய்கிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவில் ஒரு மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே தற்போது ஒரு Influencer ஆகிவிடலாம். இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றாகும், மேலும் அனைத்து தரப்பு மக்களும் இந்த App-யை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், எந்த நாடு அதிக இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா
இந்தியாதான் உலகிலேயே அதிக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சுமார் 392.5 மில்லியன் மக்கள் Instagram-யை பயன்படுத்துகிறார்கள். அதில் 33.1% பெண் பயனர்கள், 66.9% ஆண் பயனர்கள் ஆவார். அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்குக் காரணம் அதன் மிகப்பெரிய மக்கள் தொகைதான். அவர்களில் பெரும்பாலானவர்கள் 2K கிட்ஸ்கள் ஆவர். இந்தியாவில் ஸ்மார்ட்போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
அமெரிக்கா
உலக வல்லரசான அமெரிக்கா இரண்டாவது அதிக இன்ஸ்டாகிராம் பயனர்களைக் கொண்ட இரண்டாவது நாடாகும். இங்கு 172.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் Instagram-யை பயன்படுத்துகிறார்கள். இங்கு ஆண்களை விட பெண்கள் அதிகமாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள்.
பிரேசில்
இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது, இங்கு 141.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். இங்கு 58% பெண்களும், 42% ஆண்களும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். இணைய வசதிகள் மற்றும் இன்ஸ்டாகிராம் தரும் பொழுதுபோக்கே இதற்கு முக்கிய காரணாமாக இருக்கிறது.
இந்தோனேசியா
இந்தோனேசியாவில் 90.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். இங்கு 54% பெண்களும், 46% ஆண்களும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள்.இந்தோனேசிய மக்களின் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிற்கு காரணம் அதன் பெரிய மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் சமூக ஊடக கலாச்சாரம் ஆகும்.
துருக்கி
58.3 மில்லியன் பயனர்களுடன் துருக்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் 47.1 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் 52.9 சதவீதத்தினர் ஆண்கள். நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை, அதிக இணைய ஊடுருவல் விகிதம் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கும் பழக்கமே காரணமாகும்.
ஜப்பான்
ஜப்பான் அதன் இயற்கையை நேசிக்கும், ஆரோக்கியமான மக்கள்தொகைக்கு பெயர் பெற்றது. இருப்பினும், ஜப்பானியர்களும் குறிப்பிட்ட அளவு இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். இங்கு கிட்டதட்ட 55.5 மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். இதில் 58 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் 42 சதவீதத்தினர் ஆண்கள்.
மெக்சிகோ
மெக்ஸிகோவில் கிட்டதட்ட 48.9 மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள் இளைஞர்களிடையே அதிக சமூக ஊடக ஊடுருவல், அதிகரித்த ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் மனித தொடர்பை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரம் போன்றவையே இதற்கு காரணமாக உள்ளன.
இங்கிலாந்து
இங்கிலாந்து சுமார் 34.7 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது, அதில் 55% பெண்கள் மற்றும் 45% ஆண்கள். டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களே இதற்கு காரணமாக உள்ளனர். மேலும் இங்கு மக்கள் தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டிற்காக Instagram-யை பயன்படுத்துகின்றனர்.
ஜெர்மனி
ஜெர்மனியில் கிட்டதட்ட 33.8 மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள் என்று அந்த நாடு தெரிவித்துள்ளது. இதில் 52.6% பெண்கள் மற்றும் 47.4% ஆண்கள். இங்கு அதிகரித்து வரும் இன்ஸ்டாகிராம் பயனர் எண்ணிக்கைக்குக் காரணம் இளம் பெண்களின் எண்ணிக்கை மற்றும் உலகளவில் அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகும்.
இத்தாலி
30.7 மில்லியன் பயனர்களுடன் இத்தாலி பத்தாவது இடத்தில் உள்ளது. இதில் 54% பெண்கள் மற்றும் 46% ஆண்கள். நாட்டின் அதிகமான இளைஞர்கள் மற்றும் Influencer-களால் இங்கு அதிகளவு இன்ஸ்டகிராம் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications












