Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மக்கள் தொகை வேகமாக குறைந்து வரும் டாப் 10 நாடுகள்... இந்தியா இந்த பட்டியலில் இருக்கா? ஷாக் ஆகாதீங்க...!
உலகில் உள்ள 195 நாடுகளில் கிட்டதட்ட 750 கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஒரு நாட்டின் மிகவும் முக்கியமான சொத்து என்றால் அதன் மக்கள் தொகைதான். சில நாடுகளில் மக்கள் தொகை தொடர்ந்த அதிகரித்து வரும் சூழலில் சில நாடுகள் இதற்கு முற்றிலும் எதிர்மாறாக மக்கள் தொகையில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளில், சில நாடுகள் மக்கள்தொகையில் விரைவாகன வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. போர், பொருளாதார நெருக்கடிகள், குடியேற்றம், வயதான மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றம் என பல்வேறு காரணங்களால் மக்கள் தொகை குறைந்து வருகிறது. சமீபத்திய ஐ.நா. மக்கள்தொகைப் பிரிவு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மக்கள்தொகை வேகமாக குறைந்து வரும் நாடுகளின் பட்டியலை தயாரித்துள்ளது. அவை எந்தெந்த நாடுகள் இந்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உக்ரைன்
போர் முனையில் இருக்கும் உக்ரைன் உலகளவில் கடுமையான மக்கள் தொகை வீழ்ச்சியை சந்தித்துள்ளது, ஒரே வருடத்தில் 8.1 சதவீத மக்கள்தொகை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு 2022 முதல் நடந்து வரும் போர் மற்றும் ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக நடைபெறுகிறது, இது அகதிகள் நெருக்கடி, இறப்பு அதிகரிப்பு மற்றும் பிறப்பு விகிதத்தில் கடுமையான சரிவுக்கு காரணமாக அமைந்தது.
துவாலு
இந்த சிறிய பசிபிக் தீவு நாட்டில் மக்கள் தொகையில் 11.8 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளது, இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள காலநிலை மாற்றமாகும். கடல் மட்ட உயர்வு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஏராளமான மக்கள் அடைக்கலம் தேடி வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள், இதனால் துவாலு உலகின் மிகவும் காலநிலை பாதிப்புக்குள்ளான மக்கள்தொகை குறைவான நாடாக மாறியுள்ளது.
கிரீஸ்
கிரீஸின் மக்கள்தொகை 1.6 சதவீத மக்கள்தொகை சரிவை சந்தித்துள்ளது. பிறப்பு விகிதங்களில் நீண்டகால வீழ்ச்சி, பொருளாதார சிக்கல்கள் மற்றும் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதால் இந்த இழப்பு ஏற்படுகிறது. வயதான மக்கள் தொகை மக்கள்தொகை இங்கு நெருக்கடியை அதிகரிக்கிறது.
சான் மரினோ
சான் மரினோ ஒரு சிறிய ஐரோப்பிய நாடாகும், இதன் மக்கள் தொகை 1.1 சதவீதம் குறைந்துள்ளது. பெரும்பாலான சிறிய ஐரோப்பிய நாடுகளைப் போலவே, சான் மரினோவும் குறைந்த பிறப்பு விகிதங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட குடியேற்றத்தால் பாதிக்கப்படுகிறது. இங்கு வயதானவர்கள் அதிகமிருப்பதால் மக்கள் தொகையில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஏற்படுகிறது.
கொசோவோ
பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இடம்பெயர்வதால், கொசோவோவின் மக்கள்தொகையில் 1 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியல் ஸ்திரமின்மை மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதாரா சிக்கல் தொடர்ந்து மக்களை அங்கிருந்து வெளியேற வைக்கிறது.
செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
இந்த கரீபியன் மாநிலமான செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், மக்கள்தொகையில் 0.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இயற்கை பேரழிவுகள் மற்றும் மோசமான பொருளாதார வாய்ப்புகள் குடிமக்களை, குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு செல்ல வழிவகுத்துள்ளன.
பெலாரஸ்
அரசியல் அமைதியின்மை, பொருளாதார பிரச்சினை மற்றும் குடியேற்றம் காரணமாக பெலாரஸில் மக்கள் தொகையில் 0.6 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் சூழல், குறிப்பாக இளைஞர்கள், வேறு இடங்களில் சிறந்த வாழ்க்கையைத் தேர்வுசெய்ய காரணமாக உள்ளது.
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் 0.6 சதவீத மக்கள்தொகை சரிவுக்கு தொடர்ச்சியான மக்கள் வெளியேற்றம் மற்றும் குறைந்த பிறப்பு விகிதங்கள் காரணமாக உள்ளது. நீண்டகால உள்நாட்டு போர், பொருளாதார சிக்கல்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை ஆகியவை அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுகின்றன.
அல்பேனியா
அல்பேனியாவின் மக்கள்தொகையில் 0.6 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது, குறைந்த மக்கள்தொகை விகிதங்களுக்கு மக்களின் வெளியேற்றம் முக்கிய காரணியாக உள்ளது. நாட்டின் இளம் மற்றும் படித்த மக்கள் மேற்கு ஐரோப்பாவில் பொருளாதார நன்மைகளுக்காக தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஜப்பான்
உலகின் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளிலும் மக்கள்தொகை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜப்பானின் மக்கள்தொகையில் 0.5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.. இதற்கு காரணம் இங்கு வேகமாக குறைந்து வரும் பிறப்பு விகிதம் ஆகும். நாட்டில் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், தொழிலாளர் சக்தி குறைந்து வருவதாலும், இந்த வீழ்ச்சி ஏற்படுகிறது.



Click it and Unblock the Notifications
