Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்.. -
இன்றைய ராசிபலன் 05 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்!
ஒருநாள் இண்டர்நெட் இல்லன்னா பெரிய இழப்பை சந்திக்கும் டாப் 10 நாடுகள்.. இந்தியா எந்த இடத்துல இருக்கு பாருங்க..
தற்போது நமது அன்றாட வாழ்வில் இணையம் என்னும் இண்டர்நெட் முக்கிய பங்கை வகிக்கிறது. சொல்லப்போனால் இண்டர்நெட் இல்லாமல் மனிதனால் ஒரு 5 நிமிடம் கூட இருக்க முடியாத நிலையில், இண்டர்நெட்டை சார்த்திருக்கிறோம். அதாவது ஃபோன் செய்ய, மெசேஜ் அனுப்ப, பொழுதுபோக்குகள், பயணம், வங்கிச் சேவை என்று நாம் செய்யும் அனைத்திற்கும் இண்டர்நெட் மிகவும் இன்றியமையாதது. சொல்லப்போனால், இண்டர்நெட் தற்போதைய நவீன வாழ்க்கையின் முதுகெலும்பாக உள்ளது.
இப்படிப்பட்ட இண்டர்நெட் ஒரு நாள் வேலை செய்யாமல் போனால், அது எவ்வளவு பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியுமா? நிச்சயம், இது நாம் எதிர்பாராத வகையில் நிறைய பணச் செலவிற்கு வழிவகுக்கும். மேலும் பலரது முக்கியமான மற்றும் தினசரி வேலைகள் தடைபடும். அந்த செலவுகள் எவ்வளவு என்பது தெரிந்தால், பலரும் வாயைப் பிளப்போம்.

பாதுகாப்பு நிறுவனமான AtlasVPN வழங்கிய தரவுகளின் படி, ஒரு நாள் உலகில் இண்டர்நெட் இல்லாவிட்டால் உலகளவில் பொருளாதார தாக்கமானது சுமார் $43 பில்லியனாக இருக்கும். முக்கியமாக அமெரிக்காவும், சீனாவும் சேர்ந்து கிட்டத்தட்ட $21 பில்லியன் செலவை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
இந்த தரவானது, NetBlocks-ல் உள்ள பணிநிறுத்தம் கருவியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. NetBlocks என்பது இணைய பாதுகாப்பு மற்றும் இணையத்தின் நிர்வாகத்தை கண்காணிக்கும் ஒரு கண்காணிப்பு அமைப்பாகும். இது உலக லங்கி, ITU, Eurostat மற்றும் அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றின் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, இணையச் சீர்குலைவு, மொபைல் தரவு தடை (Mobile Data Outage) அல்லது ஆப் கட்டுப்பாடு ஆகியவற்றினால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தை மதிப்பீடு செய்தது.
இப்படி ஒரு நாள் இண்டர்நெட் செயல்படாமல் இருந்தால், அதிக பொருளாதார பாதிப்பை சந்திக்கும் டாப் 10 நாடுகள் எவை என்பதையும், எவ்வளவு செலவை சந்திக்கக்கூடும் என்பதையும் இப்போது காண்போம். இந்தியாவில் ஒரு நாள் இண்டர்நெட் இல்லாவிட்டால் எவ்வளவு பண இழப்பு ஏற்படும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. இணைய பயன்பாட்டை எடுத்துக் கொண்டால், உலகளவில் அதிகம் பயன்படுத்தும் ஒரு நாடு தான் அமெரிக்கா. இந்நாடு இண்டர்நெட் பயன்பாடு இல்லாமல் ஒரு நாளைக்கு சுமார் $11 பில்லியன் பெரும் இழப்பை சந்திக்கும். இது இந்நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும். நுகர்வோர் செலவு மற்றும் வணிக நடவடிக்கைகள் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும்.
2. அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக சீனா சுமார் 9 பில்லியன் டாலர்களை இழக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் சீனா அதிக நம்பிக்கையுடன் இருப்பதால், இணையத்தடையானது எல்லை தாண்டிய வர்த்தகத்தை கணிசமாகக் குறைக்கும்.
3. இங்கிலாந்து அதன் வலுவான இ-காமர்ஸ் மற்றும் நிதி சேவை துறைகளால் சுமார் 3 பில்லியன் டாலர்களை இழக்கும். ஆன்லைன் ஷாப்பிங் பல யுகே சில்லறை விற்பனையை இயக்குகிறது. அதே வேளையில் கணிசமாக வங்கி செயல்பட இணைய இணைப்பை நம்பியுள்ளது. இந்நிலையில் இண்டர்நெட் இல்லாவிட்டால், இங்கிலாந்தின் பொருளாதார பாதிப்பு கணிசமானதாக இருக்கும்.
4. மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு மற்றும் இண்டர்நெட் தொழில்நுட்பம் போன்றவை ஜப்பானின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், இங்கு ஒரு நாள் இண்டர்நெட் இல்லாவிட்டால் சுமார் 2.7 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
5. ஜெர்மனியின் உலக-முன்னணி உற்பத்தித் தொழில் அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இந்நாட்டில் ஒரு நாள் இண்டர்நெட் செயல்படாமல் இருந்தால், அது ஜெர்மனியின் உற்பத்தி மற்றும் வணிக செயல்பாடுகளை கடுமையாக பாதிப்பதோடு, சுமார் 1.5 பில்லியன் டாலர்களை இழக்க வைக்கும்.
பிற நாடுகள்..
6. இந்தியா - $1.4 பில்லியன்
7. தென் கொரியா - $1.2 பில்லியன்
8. பிரான்ஸ் - $870 மில்லியன்
9. இத்தாலி - $640 மில்லியன்
10. கனடா - $580 மில்லியன்
இவ்வளவு முக்கிய பங்கை வகிக்கும் இண்டர்நெட்டை நாம் பெரும்பாலும் குறைக்கூறுவோமே தவிர, பாராட்டமாட்டோம். ஏனெனில் இண்டர்நெட்டினால் பல மோசமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இதனால் இந்த இண்டர்நெட் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறலாம். ஆனால் ஒரு நாள் இந்த இண்டர்நெட் இல்லாவிட்டால் ஒவ்வொரு நாட்டிற்கும் எவ்வளவு பெரிய இழப்பு ஏற்படுகிறது என்று பாருங்கள்.



Click it and Unblock the Notifications