Latest Updates
-
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது?
கல்வியில் சிறந்த விளங்கும் டாப் 10 நாடுகள் இதுதான்...இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
தற்போது இந்தியாவில் கல்விதான் மிகப்பெரிய சர்ச்சையாக உள்ளது. இந்தியா உலகளவில் கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் கல்வி முறையில் சில குறைபாடுகள் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். சில நாடுகள் அவற்றின் சவாலான கல்வித் திட்டங்கள், போட்டித் தேர்வுகள் மற்றும் உகல்வியில் அவர்களின் சாதனைகளுக்காக தனித்து நிற்கின்றன.
கடினமான கல்வி முறைகளைக் கொண்ட நாடுகளின் குறிக்கோள், மாணவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதும் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து முன்னேற தயார்படுத்துவதும் ஆகும். எனவே, World Population Review.-ன் கல்வி தரவரிசை 2025 அறிக்கையின் அடிப்படையில் கடினமான கல்வி முறைகளைக் கொண்ட டாப் 10 நாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தென் கொரியா
தென் கொரிய அதன் கடினமான கல்வி முறைக்கு மிகவும் பிரபலமானது. இங்கு, மாணவர்கள் ஒரு நாளைக்கு 12-16 மணி நேரம் வரை படிக்கிறார்கள், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் முதன்மை கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் கல்லூரி நுழைவுத் தேர்வான Suneung, உலகின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும், மேலும் தேர்வு நாட்களில் பங்குச் சந்தைகள் மூடப்படுவது போன்ற தேசிய அளவிலான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
டென்மார்க்
டென்மார்க்கின் கல்வி முறை மாணவர்களின் தீவிரமான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. படைப்பாற்றல் சார்ந்த கற்றலுக்கு முன்னுரிமை அளித்தாலும், மாணவர்கள் நாட்டின் அனைத்து கல்வி நிலைகளிலும் கடுமையான தேர்வுகள் மற்றும் உயர் கல்வித் தரங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
நெதர்லாந்து
நெதர்லாந்து அதன் முறையான மற்றும் சமநிலையான கல்வி முறைக்கு பெயர் பெற்றது. இங்கு கல்வி முறை கல்வி அறிவு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் ஆகியவற்றின் கலவையாகும்.
பெல்ஜியம்
பன்மொழி பாடத்திட்டம் மற்றும் உயர்தர தரநிலைகள் காரணமாக பெல்ஜியத்தின் கல்வி முறை உலகளவில் மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. பல மொழிகளில் சிறந்து விளங்குவதும், உயர்கல்விக்கான கடுமையான தேவைகளைப் பூர்த்தி செய்வதும் இந்த நாட்டில் படிப்பதற்கு மிகவும் அவசியமாகும்.
ஸ்லோவேனியா
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஸ்லோவேனியா 100% கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த கல்வி முறையைக் கொண்டுள்ளது. ஸ்லோவேனியா STEM துறைகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் தேசிய தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறது.
ஜப்பான்
தொழில்நுட்ப வளர்ச்சியின் தாயகமான ஜப்பானின் கல்வி முறை மிகவும் பிரபலமானது. ஜப்பானின் கல்வி முறையும் கடுமையானது. மாணவர்கள் நீண்ட பள்ளி நாட்களை அனுபவிப்பதுடன், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்கு கடுமையாகத் தயாராக வேண்டிய சூழல் இங்கு நிலவுகிறது, ஏனெனில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவை.
ஜெர்மனி
ஜெர்மனி இரட்டை கல்வி முறையை வழங்குகிறது, இங்கு துறை சார்ந்த கல்வி தொழிற்கல்வியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் சேர யார் தகுதியானவர் என்பதைத் தீர்மானிப்பது மிகவும் சவாலான Abitur தேர்வு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது, இது கற்பவர்களுக்கு இந்த கல்வி முறையை மிகவும் கடினமாக்குகிறது.
பின்லாந்து
குறைந்த பள்ளி நாட்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட வீட்டுப்பாடம் உள்ளிட்ட சுவாரஸ்யமான கல்வி கொள்கைகளுக்கு பின்லாந்து பிரபலமானது என்றாலும், பின்லாந்தின் கல்வித் தரங்கள் நம்பமுடியாத அளவிற்கு உயர்ந்தவை. பின்லாந்தின் கல்வி முறை அளவை விட தரத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது.
நார்வே
நார்வே கல்விமுறை கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்புகளை ஊக்குவிக்கிறது, ஆனால் மிகவும் கடுமையான கல்வித் தேவைகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, மாணவர்கள் அதிக மேம்பட்ட நிலைகளுக்கு உயர்த்தப்படுவதற்கு தேசிய தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்ணை பெற வேண்டும்.
அயர்லாந்து
அயர்லாந்து இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. அயர்லாந்து கல்வி முறை மாணவர்களிடையே வெறும் பாடம் சார்ந்த கல்வி மட்டுமின்றி அவர்களின் சிக்கல் தீர்க்கும் மற்றும் சிந்திக்கும் திறனை வலுப்படுத்தும் வலுவான கல்வி முறையைக் கொண்டுள்ளது.
இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
இந்த பட்டியலில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா அதன் கல்வி முறையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2025 இல், IIT மும்பை மற்றும் IIT டெல்லி போன்ற இந்திய பல்கலைக்கழகங்கள் உலகின் முதல் 150 இடங்களுக்குள் முன்னேறியுள்ளன. இருப்பினும் உயர் கல்வி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் கவலைக்கிடமான இடத்தில்தான் உள்ளது.



Click it and Unblock the Notifications
