Latest Updates
-
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும் -
மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.. -
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க யாராலும் தடுக்க முடியாதவர்களாம் - இவர்களின் வெற்றி பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டது -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கம் எதுன்னு சொல்றோம்.. -
தலையணையில் உள்ள மஞ்சள் நிற கறைகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
நடிகை சமந்தாவிற்கு பிடித்த பிஸிபேலேபாத் - எப்படி செய்யணும் தெரியுமா?
உலகில் அதிக கார்களை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள்... இந்தியா எவ்வளவு கார்களை தயாரிக்கிறது தெரியுமா?
உலகப் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் பல்வேறு துறைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன, குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆட்டோ மொபைல் துறை உலகெங்கிலும் போக்குவரத்து மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், உலகளவில் வாகன உற்பத்தி, குறிப்பாக கார் உற்பத்தி கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கார் ஆடம்பர தேவையிலிருந்து அடிப்படைத் தேவையாக மாறியதே இதற்கு காரணம்.
சில நாடுகள் அதிகரித்து வரும் ஆட்டோமொபைல் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன, மேலும் கார்கள் மற்றும் வணிக வாகனங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. சமீபத்திய உலக மக்கள்தொகை மதிப்பாய்வு அறிக்கையின்படி, அதிக கார்களை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

சீனா
உலகிலேயே அதிகம் கார் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. 2023 ஆம் ஆண்டில், சீனா 26.1 மில்லியன் கார்களை உற்பத்தி செய்தது. சீனா ஒரு மிகப்பெரிய உள்நாட்டு கார் சந்தையைக் கொண்டுள்ளது, இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கிறது, மேலும் சர்வதேச ஏற்றுமதியிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. BYD, Geely மற்றும் SAIC போன்ற உள்நாட்டு நிறுவனங்களும், சர்வதேச பிராண்டுகளுடனான கூட்டு முயற்சிகளும், சீனாவை உலகளவில் கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற்றியுள்ளது.
ஜப்பான்
தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஜப்பான் கார் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஜப்பான் 2023 ஆம் ஆண்டில் சுமார் 7.8 மில்லியன் கார்களை உற்பத்தி செய்துள்ளது. டொயோட்டா, ஹோண்டா மற்றும் நிசான் போன்ற உலகின் மிகவும் நம்பகமான கார் பிராண்டுகளின் தாயகமாக இது உள்ளது. திறமையான மற்றும் தரமான கார்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, கார் ஏற்றுமதி வணிகத்திலும் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது. இந்தியாவிலும் இந்த பிராண்டுகளின் கார்கள் லட்சக்கணக்கில் ஓடுவதை நாம் பார்க்கலாம்.
இந்தியா
உலகில் மூன்றாவது பெரிய கார் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. நம் நாட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.8 மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் கார்களை உபயோகிப்பதால், மலிவு விலை வாகனங்களுக்கான தேவையும் நாட்டில் அதிகரித்து வருகிறது. பில்லியன் கணக்கான மக்களைக் கொண்ட இந்த நாடு, பெருமளவிலான கார் உற்பத்திக்கு ஒரு சிறந்த சந்தையாகும். உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
ஜெர்மனி
ஜெர்மனி கார்கள் உலகப்புகழ் பெற்றவை. ஜெர்மனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.1 மில்லியன் பயணிகள் கார்களை உற்பத்தி செய்கிறது. இந்த நாடு BMW, Mercedes-Benz, Audi மற்றும் Volkswagen போன்ற உலகப் புகழ்பெற்ற ப்ரீமியம் கார்களுக்கு பெயர் பெற்றது. ஜெர்மனியின் கார்கள் ஆடம்பரமானதாக மட்டுமின்றி செயல்திறனிலும் சிறப்பானவையாக இருக்கிறது.
தென் கொரியா
தென் கொரியா சுமார் 3.9 மில்லியன் கார்களை உற்பத்தி செய்கிறது. ஹூண்டாய் மற்றும் கியா போன்ற பெரிய நிறுவனங்கள் உலகளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தென் கொரிய கார்கள் அவற்றின் தனித்துவமான வடிவமைப்பு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறனுக்காக பிரபலமாக உள்ளன.
ஸ்பெயின்
ஸ்பெயின் ஆறாவது இடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஸ்பெயின் கிட்டத்தட்ட 1.9 மில்லியன் கார்களை உற்பத்தி செய்ததன் மூலம், ஐரோப்பாவின் சிறந்த கார் உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாறியது. SEAT, Ford மற்றும் Renault போன்ற பல சர்வதேச நிறுவனங்கள் ஸ்பெயினில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளன.
பிரேசில்
பிரேசில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 மில்லியன் கார்களை உற்பத்தி செய்கிறது. இந்த கார்களை அதன் உள்நாட்டு சந்தைகள் மற்றும் பிற தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. பிரேசிலின் ஆட்டோமொபைல் துறை விலை குறைவான மற்றும் உறுதியான கார்களை உற்பத்தி செய்வதற்கு பெயர் பெற்றது.
அமெரிக்கா
2023 ஆம் ஆண்டில் அமெரிக்கா சுமார் 1.7 மில்லியன் பயணிகள் கார்களை உற்பத்தி செய்தது. இந்த நாடு அதன் சக்திவாய்ந்த டிரக்குகள் மற்றும் SUV கார்களுக்கு உலகளவில் பிரபலமானது. ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் இந்தியாவிலும் இப்போது கால் பதித்திருக்கும் டெஸ்லா போன்ற உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பிராண்டுகள் ஆட்டோமொபைல்களின் எதிர்காலத்தை, குறிப்பாக எலக்ட்ரிக் வாகனத் துறையில் தொடர்ந்து வடிவமைக்கின்றன.
செக் குடியரசு
செக் குடியரசு ஒரு சிறிய நாடு, ஆனால் 2023 ஆம் ஆண்டில் 1.4 மில்லியன் கார்களை உற்பத்தி செய்து உலக கார் சந்தையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. Skoda Auto மற்றும் Volkswagen போன்ற புகழ் வாய்ந்த பிராண்டுகளால் இந்த வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தோனேசியா
இந்தோனேசியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.2 மில்லியன் கார்களை உற்பத்தி செய்கிறது, இது நாட்டின் வளர்ந்து வரும் கார் தொழில்துறையின் ஆதாரமாகும். இந்தோனேசியாவின் மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன், இந்தோனேசியா கார் உற்பத்தியில் வெளிநாட்டு முதலீட்டிற்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாறியுள்ளது.



Click it and Unblock the Notifications

