For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 30 March 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பணத்தை திரும்ப பெறுவதில் சிரமம் ஏற்படலாம்...

|

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Today Rasi Palan - 30 March 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 30ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, நீங்கள் அரசு வேலைக்கு தயாராகிறீர்கள் என்றால், இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே வேலையில் இருந்தால், பதவி உயர்வு பெற வாய்ப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையின் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தொண்டை தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 10:15 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், பழைய கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தம் உங்கள் மீது கணிசமாக அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரியின் நட்பு கிடைக்கும். இன்று உங்களின் அனைத்து வேலைகளையும் முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் பழைய நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2:25 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, குழந்தை மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். பாதகமான சூழ்நிலைகளில், உங்கள் அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று வேலை தொடர்பான உங்கள் கவலை சற்று அதிகரிக்கலாம். குறிப்பாக தொழிலதிபர்கள் இன்று பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய நாள் பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 6:40 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, மாணவர்கள் இன்று தங்கள் வரவிருக்கும் தேர்விற்கு கடினமாக உழைக்க வேண்டும். அலட்சியம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தமான எந்த ஒரு முக்கியமான வேலையும் இன்று முடிவடையும். உங்கள் வேலையில் உயர் அதிகாரிகள் குறைபாடுகளைக் கண்டறிந்தால், உங்கள் தவறுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளுக்கு இன்று கலவையான லாபம் கிடைக்கும். இன்றைய நாள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். சில முடிக்கப்படாத வேலைகளால் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் நிதி இழப்புக்கான வலுவான வாய்ப்புள்ளது. தேவைக்கு அதிகமாக யாரையும் நம்பாதீர்கள். இல்லையெனில் உங்களுக்கு நீங்களே சிக்கலை உருவாக்குவீர்கள். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவழிக்கலாம். இன்று உங்கள் உடல்நிலை குறித்து கவலைப்பட நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மாலை 3 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, கூட்டுக்குடும்பத்தில் வசிப்பவர்களின் தேவையற்ற ஆணவம் உங்கள் உறவுகளுக்கு நல்லதல்ல. இன்று அலுவலகத்தில், உங்கள் கடின உழைப்பால் முதலாளி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். அவருடைய பாராட்டு உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். இன்று தொழிலதிபர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். குறிப்பாக கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு தங்கள் வேலையில் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். நீங்கள் குழந்தைகளுக்காக நிறைய பொருட்களை வாங்கலாம். இன்றைய நாள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. வேலையில், இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். இன்று வணிகர்களின் சில முக்கியமான வேலைகள் தடைபடலாம். உத்தியோகஸ்தர்கள் வேலை சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். பண விஷயத்தில் இன்று சாதாரணமாக இருக்கும். செலவுகளின் பட்டியலை வளர விடாதீர்கள். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, அவசரப்பட்டு எந்த ஒரு முடிவு எடுப்பதையும் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் வருத்தப்பட நேரிடும். எலக்ட்ரானிக்ஸ், ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள், பர்னிச்சர்கள் போன்றவை தொடர்பான பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமாக இருக்கும். விற்பனை அதிகரிக்கும். இன்று நீங்கள் பங்குகளை அதிகரிக்கவும் திட்டமிடலாம். இன்று, அரசு ஊழியர்கள் தங்கள் சிறிய வேலையையும் மிகவும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்கள் அலுவலக சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று வேலையில் அழுத்தம் குறையும். அத்தகைய சூழ்நிலையில், சக ஊழியர்களுடன் சிறிது நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறலாம். தொழிலதிபர்கள் சமீபத்தில் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். எந்தவொரு முடிவையும் சிந்தனையுடன் எடுங்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் முன்னோர் சொத்துக்களை விற்க விரும்பினால், இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மாலை 3 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியத்தைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடிப்பதைத் தவிர்க்கவும். இது உங்கள் வேலை மட்டுமின்றி, உங்கள் பெயரையும் மோசமாக பாதிக்கும். வியாபாரிகள் இன்று எந்த ஒரு முக்கிய வியாபார முடிவும் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்றைய நாள் பண விஷயத்தில் நல்ல குறிப்பைக் கொடுக்கும். திடீர் பண வரவு உண்டாகும். உடல்நிலை சீராக இருக்கும். உங்களுக்கென போதுமான நேரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் துறை சார்ந்த பெரிய நபரின் வழிகாட்டுதலைப் பெறலாம். விரைவில் உங்கள் தொழில் ஒரு புதிய திசையில் நகரும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், உங்கள் பணத்தை திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். இருப்பினும், ஓய்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:25 மணி முதல் மதியம் 12:20 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று கல்வி தொடர்பான எந்த முயற்சியிலும் வெற்றி பெறலாம். உத்தியோகஸ்தர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்தை சென்றடைய அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் அலுவலகத்தின் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தொழிலதிபர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணப்பற்றாக்குறையால் உங்களின் எந்த ஒரு வேலையும் தடைபட்டால் இன்றே முடிக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:20 மணி முதல் மாலை 4:30 மணி வரை

English summary

Today Rasi Palan - 30 March 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 30 March 2023 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Thursday, March 30, 2023, 5:25 [IST]
Desktop Bottom Promotion