Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 30 June 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் நிதி நிலையை மனதில் வைத்து முடிவுகளை எடுக்கணும்
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. மகம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே எந்த முடிவையும் எடுங்கள். நிதி நிலைமை மோசமடையலாம். தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்ய இன்று சாதகமான நாள் இல்லை. உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் வரலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். இன்று மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். தேவையில்லாத கோபம் உங்கள் காதல் வாழ்க்கையில் பதற்றத்தை அதிகரிக்கும். இன்று நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, வேலை தொடர்பான பயணங்கள் இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். தொழிலதிபர்கள் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் சில பெரிய சாதனைகளைப் பெறலாம். அலுவலகத்தில் முதலாளி இன்று உங்கள் கடின உழைப்பைக் கவனிப்பார். குடும்பத்தாரிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் அமைதியான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் துணை இருப்பார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்களை மனரீதியாக வலுவாக வைத்திருக்க முயற்சியுங்கள். தேவையில்லாத விஷயங்களை நினைத்து மன அமைதியைக் கெடுத்து கொள்ளாதீர்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையைப் பராமரிக்க வேண்டும். தொழிலதிபர்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுங்கள். இன்று யாருக்கும் கடன் கொடுத்து விடாதீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கையில் உங்கள் பொறுப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். அவர்களை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இன்று எந்த வகையிலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு புதிய தொடக்கமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் இருக்கும். வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றியடைவதோடு, உங்கள் முன்னேற்றத்தில் இருந்துவந்த தடைகளும் நீங்கும். வியாபாரிகள் புதிய வேலைகள் தொடங்க வாய்ப்பு உண்டாகும். வேலை சம்பந்தமான பிரச்சனைக்கும் மிக புத்திசாலித்தனமாக தீர்வு காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். குடும்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்களது பழைய நட்பு காதலாக மாறலாம். ஆனால், அவசரப்பட வேண்டாம். உங்களுக்கு வயிறு சம்பந்தமான தொற்று ஏற்படலாம். உங்களின் உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று நீங்கள் எதிர்கொள்ளும் பாதகமான சூழ்நிலையை, அனுபவம் வாய்ந்த மற்றும் நெருங்கிய நபரின் உதவியுடன் சுலபமாக சமாளித்திடலாம். தடைப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவது உங்கள் முக்கிய கவலைகளை நீக்கும். தொழிலதிபர்கள் விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்தவும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களை அலட்சியம் செய்யாதீர்கள். அலுவலகத்தில் அவர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சியுங்கள். நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல வரன் தேடி வரலாம். உங்கள் காதல் துணையிடமிருந்து நீங்கள் ஒரு சிறப்பு ஆச்சரியத்தைப் பெறலாம். உங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்களது பழைய கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். இன்று நீங்கள் மனதளவில் மிகவும் சிறப்பாக உணருவீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். எதிர்காலம் தொடர்பான சில திட்டங்களையும் தீட்டுவீர்கள். வியாபாரிகள் சமீபத்தில் செய்த புதிய முதலீட்டின் சரியான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றம் அல்லது ஊதிய உயர்வு பெறலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் நன்றாக உணருவீர்கள். உங்கள் பெற்றோரிடம் எண்ணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணையுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் மீது அதிக வேலை அழுத்தம் எடுத்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் காலை 9:30 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, வேலை தொடர்பான முடிவுகளை இன்று நீங்கள் நம்பிக்கையுடன் எடுக்க வேண்டும். இன்று நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அது வெற்றி அடையும். வியாபாரிகளின் ரகசிய எதிரிகள் இன்று உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாமல் பேசி நேரத்தை வீணடிக்காமல், உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நாளின் இரண்டாம் பகுதியில் குடும்பத்துடன் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு செல்லலாம். உங்கள் வாழ்க்கைத் துணையைப் புறக்கணிக்காதீர்கள். ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை வெளிப்படையாக பேச முயற்சியுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு முழங்கால் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்:43
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதன் மூலம், உங்கள் நிகழ்காலத்தை மேம்படுத்த உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக பணத்தைச் செலவிடுவது நல்லது. வியாபாரிகள் தங்களுக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து பயனுள்ள ஆலோசனைகளைப் பெறலாம். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். உங்கள் வீட்டில் அமைதியைக் காக்க, உங்கள் நடத்தையை மாற்ற வேண்டும். மேலும். கோபத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணை நல்ல மனநிலையில் இருப்பார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நேரத்திற்கு சாப்பிடுவதன் மூலமும், ஒரு முறையான தினசரி வழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலமும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் தங்கள் பணத்தை ஆபத்தான வேலைகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். சிலர் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். தொழிலதிபர்கள் விரைவான லாபம் ஈட்டுவதற்காக தவறான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களின் அலட்சியத்தால், கொடுக்கப்பட்ட முக்கிய பொறுப்புகள் திரும்பப் பெறப்படலாம். தந்தை உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற முடியாமல், தந்தையின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்யும். காதல் ஜோடிகளுக்கு இன்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். தவறான புரிதலால் உங்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கலாம். உங்கள் உடல்நலம் மோசமடைவது உங்கள் நாளுக்கான திட்டங்களைத் தடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் நன்றாகத் தொடங்கும். சில நல்ல செய்திகளால் மனம் மகிழ்ச்சி அடையலாம். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால், உங்கள் எல்லா வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு இருக்கும். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் இரவு 9:15 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடனான உறவை மேம்படுத்த விரும்பினால், நீங்கள் அனைத்து மனக்கசப்புகளையும் மறந்து புதிய தொடக்கத்தை உருவாக்க முயற்சிக்கவும். ஒரு சிறிய முயற்சி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். வியாபாரிகள் புதிய வணிக முன்மொழிவைப் பெறலாம். ஆனால் உங்கள் நிதி நிலையை மனதில் வைத்து மட்டுமே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் அடைய நீண்ட நாட்களாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துங்கள். காதல் வாழ்க்கையாக இருந்தாலும், திருமண வாழ்க்கையாக இருந்தாலும், உங்கள் உறவில் முழு கவனம் செலுத்தவும். மேலும், உங்கள் துணையின் ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். ஆனால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வரும். தொழிலதிபர்களின் வியாபாரத் திட்டம் வெற்றியடைந்து லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையை இரு மடங்கு வேகமாக செய்து முடிப்பார்கள். இன்று உங்கள் மேலதிகாரி உங்களுக்கு சில பெரிய பொறுப்புகளை வழங்கலாம். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சாதகமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:25 மணி முதல் இரவு 8:25 மணி வரை



Click it and Unblock the Notifications











