Today Rasi Palan 29 March 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Today Rasi Palan - 29 March 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 29ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, கடந்த காலத்தின் கடின உழைப்பிற்கான சரியான பலன் கிடைக்கும். புதிய பாதைகள் உங்களுக்கு திறக்கப்படலாம். இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் நேர்மறையாகவும் இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். வீட்டின் மூத்த உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குறிப்பாக இன்று நீங்கள் உங்கள் தந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுப்படுத்தினால், உங்கள் பிரச்சனைகளை ஓரளவு குறைக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மாலை 5 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று, வியாபாரிகள் விரும்பிய பலன்களைப் பெறலாம். உங்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம். பொருளாதார ரீதியாக, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இது தவிர, எதிர்பார்த்த பணம் வராததால் உங்களுக்கு சில கவலைகளும் தோன்றலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு கண்கள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய வருமானத்தை பெறலாம். நீங்கள் இப்படி புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுத்தால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு சிறப்பு நபரை சந்திக்கலாம். வேலை சம்பந்தமான அனைத்து முயற்சியிலும் வெற்றி பெறலாம். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பெரிய கவலையும் நீங்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சில பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்களின் அன்புக்குரியவர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதளவில் நன்றாக உணருவீர்கள். பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். வணிகர்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக அவசரமாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். சிலர் தவறான தகவல்களை கொடுத்து உங்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்யலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையானதாக இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:35 மணி முதல் மாலை 7 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, அலுவலகத்தில் சில பொறுப்பான வேலைகள் உங்களிடம் ஒப்படைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்த வகையான அலட்சியத்தையும் தவிர்க்க வேண்டும். சிறு தவறு செய்தாலும் வேலையை இழக்க நேரிடும். வணிகர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் கடுமை தன்மை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இன்று உங்களுக்கு இடையே ஒரு பெரிய சண்டை ஏற்படலாம். நிதி நிலைமை நன்றாக இருக்காது. மருத்துவமனை, மருந்துகளுக்கு நிறைய பணம் செலவழிக்கலாம். பொதுவாக, இன்று உங்களுக்கு மிகவும் கடினமான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 6 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ஆளுமை திறன் இன்று விவாதப் பொருளாக மாறலாம். வேலையின் அடிப்படையில், இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும். கடினமான ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்காக நீண்ட நாட்களாக கடினமாக உழைக்கறீர்கள் என்றால், இன்று உங்கள் வேலை தடையின்றி முடியும். இன்று பண விஷயத்தில் நல்ல அறிகுறி இருக்காது. நிதி இழப்புக்கான வலுவான வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று அவசர அவசரமாக பணம் சம்பந்தமான எந்த வேலையையும் செய்யாதீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, தொழிலதிபர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களின் சிரமங்களும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. திடீர் பணிச்சுமை அதிகரிப்பதால், நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணருவீர்கள். இருப்பினும், உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்ட படி முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர, நேர்மறையாக இருந்து, கடினமாக உழைத்தால் சரியான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். பொருளாதாரத்தில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இன்று குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியை அடைய முடியும். நீங்கள் போக்குவரத்து தொடர்பான வேலைகளைச் செய்தால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். ரியல் எஸ்டே்ட சம்பந்தமான வேலை செய்பவர்களுக்கும் இன்று சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமையை மேம்படுத்த, நீங்கள் கடுமையான முடிவுகளை எடுக்கவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று நண்பர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெளியில் எங்காவது பயணம் செய்யவும் திட்டமிடலாம். உங்கள் வருமானத்தை அதிகரிக்க நீண்ட நாட்களாக முயற்சி செய்தால்,இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இருப்பினும், பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அரசு ஊழியர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் ஒரு சிறு தொழிலதிபராக இருந்தால் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். நல்ல ஆரோக்கியத்திற்காக, அன்றாட வழக்கத்தை ஒழுங்கமைக்க வேண்டும். குறிப்பாக, உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 44
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். அலட்சியம் விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று நீங்கள் வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். இன்று நீங்கள் கடினமாக உழைத்து முடிக்காத பணிகளை முடிப்பீர்கள். நீங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. நிதி நிலை மேம்படும். இன்று உங்களுக்கு பணம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு அழகான பரிசை கொடுக்க முடியும். உங்கள் அன்பானவர்களும் உங்களுக்காக அற்புதமான ஒன்றைத் திட்டமிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் மதியம் 12:45 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த நேரத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இன்று உங்கள் சிறிய வேலைகளை கூட முடிக்காமல் விடாதீர்கள். வணிகர்கள் வரி தொடர்பான விஷயங்களில் எந்த வித அலட்சியமும் காட்ட வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலைகள் தோன்றும். இன்று, வீட்டில் உள்ள ஒருவரின் உடல்நிலை திடீரென மோசமடையலாம். மருத்துவமனைக்கு நிறைய பயணங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், வேலை அழுத்தம் மற்றும் அதிக அலைச்சல் போன்றவற்றால், உடல்நிலை சற்று பலவீனமாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:40 மணி முதல் இரவு 8:05 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, உங்கள் முன்னோர் தொழிலில் நீங்கள் தொடர்புடையவராக இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்களின் சரியான முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் வேலையில்லாமல் வேலை தேடுகிறீர்கள் என்றால், இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணத்தின் அடிப்படையில், இன்று கலவையான நாளாக இருக்கும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று ஓரளவு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

Story first published: Wednesday, March 29, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion