Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 28 April 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்ப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் மூலம் மற்றும் பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 28ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, குழந்தை தொடர்பான கவலையிலிருந்து நீங்கள் விடுபடலாம். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்களின் கடின உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று உங்கள் செலவுகள் குறையும். இது தவிர, நீங்கள் எதிர்பாரா பண வரவைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் காலை 9:45 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, நண்பர்களின் உதவியால் இன்று பெரிய பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும் போது வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்தவும். இல்லையெனில், இன்று நீங்கள் பெரும் சிக்கலில் சிக்கக்கூடும். வியாபாரிகளுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். உடல்நிலையில் அலட்சியம் காட்டினால் பிரச்சனை பெரியதாகக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:35 மணி முதல் இரவு 8:05 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, ஆன்லைனில் வணிகம் செய்பவர்களின் புதிய திட்டங்களில் முன்னேற்றம் இருக்கும். இன்று அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். தினசரி வேலைகளை முடிப்பதற்கு நெருங்கியவர்கள் உங்களுக்கு உதவலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், அவசரத்தையும், பீதியையும் தவிர்க்கவும். குறிப்பாக வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில், காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 7:20 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று சில செய்திகளால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தால் இன்று வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் தொழிலில் வளர்ச்சி சாத்தியமாகும். தொழிலதிபர்களுக்கு திடீரென பணிச்சுமை கூடும். எனவே, உங்கள் எல்லா வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். இன்று உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் காலை10:00 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் இன்று சில புதிய நபர்களின் நட்பைப் பெறலாம். இது எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்பை இன்று பெற முடியும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவை நீங்கள் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையிலும் சில நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இதய நோய் இருப்பவர்கள், இன்று கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:25 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், இன்று உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். இருப்பினும், எந்த நிதி பரிவர்த்தனைகளையும் அவசரமாக செய்யாதீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று கடினமான பணிகளை எளிதாக முடிக்கலாம். வியாபாரிகளுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முயற்சிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:25 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பழைய கடனில் இருந்து விரைவில் விடுபட விரும்பினால், சேமிப்பில் கவனம் செலுத்தவும். இன்று நீங்கள் நேரத்திற்கு அதிக கவனம் செலுத்தி செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் சட்ட விஷயங்களில் எந்தவிதமான அலட்சியத்தையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இழப்புகள் சாத்தியமாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் சில பெரிய உரிமைகளையும் பெறுவீர்கள். வணிகர்கள் ஏதேனும் பெரிய நிதி பரிவர்த்தனை செய்யவிருந்தால், இன்று உங்கள் வேலை தடைப்பட நேரிடலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். இன்று வீட்டில் பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இன்று உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்:1
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 11:25 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வேலையில் எந்த வித அலட்சியமும் காட்டாதீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்கவும். வியாபாரிகள் பெரிய ஆர்டரை எடுப்பதற்கு முன்பு, நிலுவையில் உள்ள பழைய வேலைகளை விரைவில் முடிக்க முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:20 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் வருமானம் திருப்தியளிக்கும். இன்று செலவுகளை குறைக்கவும் முயற்சிக்கலாம். வேலை நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று மிகவும் சவாலான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், சில பழைய நோய்களின் திடீர் வெளிப்பாட்டினால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:45 மணி முதல் மாலை 3:00 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி முன்னேற முயற்சிக்கவும். இன்று நேரத்தை வீணாக்காமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கியமான விவாதம் நடக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இன்று பணம் சம்பந்தமான வேலையை அவசரமாக செய்ய வேண்டாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 9:20 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று உங்கள் பேச்சில் இனிமை இருக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆற்றலால் முதலாளி மிகவும் ஈர்க்கப்படுவார். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் பெரிய முன்னேற்றம் இருக்கும். இன்று நிதி ரீதியாக சராசரி நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும், நேர்மறையாகவும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை



Click it and Unblock the Notifications











