Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Today Rasi Palan 27 October 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்ய நேரிடலாம்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் இன்று வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம். உங்கள் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்கள் மனதில் பல கவலைகள் இருக்கும். இன்று எந்த முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களை அதிகம் நம்புவதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு லாபகரமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளவும். உங்களை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, தினசரி வழக்கத்தில் யோகா, தியானத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, வேலை தொடர்பான புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். முன்னோர் தொழிலுடன் தொடர்புடையவர்கள், தங்கள் சரியான முடிவுகளால் நல்ல பலன்களைப் பெறலாம். இன்று பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். மற்றவர்களைக் கவர உங்கள் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று பிறர் மனம் புண்படும்படி பேசுவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சில முக்கியமான வேலைகளை ஒப்படைத்திருந்தால், சிறு தவறு கூட நேராமல் பார்த்து கொள்ளுங்கள். தொழிலதிபர்கள் புதிதாக எந்த வேலையை தொடங்கும் முன்பு நன்கு சிந்திக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். உங்கள் உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மாலை 3 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். நீங்கள் ஏதேனும் பெரிய செலவு செய்யப் போகிறீர்கள் என்றால், அதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு இன்று வாக்குவாதம் ஏற்படலாம். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். நீங்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்தால், வானிலை மாற்றத்தால் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் சிறிய முடிவுகளை கூட மிகவும் புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பண விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்வில் நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மாலை 4:20 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் முக்கிய செய்திகளைப் பெறலாம். இன்று பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். முன்னோர் சொத்துக்களை விற்க நல்ல சலுகை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று நீங்கள் நன்றாக உணருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, தேவையில்லாமல் கவலைப்பட்டு உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். வணிகர்கள் முக்கிய ஆவணத்தில் அவசரமாக கையொப்பமிடுவதைத் தவிர்க்கவும். தெரிந்தோ தெரியாமலோ உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதைக் காயப்படுத்தலாம். நிதி நிலைமை சீராக இருக்கும். உடல்நிலை மோசமடைந்ததற்கான அறிகுறிகள் தென்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, நிதி விஷயங்களில் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்று திடீர் பண வரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். இன்று உங்கள் மேலதிகாரி உங்களை மிகவும் பாராட்டுவார். சில பொறுப்பான வேலைகள் உங்களிடம் ஒப்படைக்கலாம். வியாபாரிகள் இன்று பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறந்த நாளாக இருக்கும். இருப்பினும், உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்கள் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:25 மணி முதல் மதியம் 2 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க கடினமாக உழைக்கவும். இன்று உங்கள் உடற்சோர்வு சற்று அதிகரிக்கும். வேலை நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். வருமானம் அதிகரித்தாலும், செலவுகளும் உடன் அதிகரிக்கும். இன்று பழைய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்களின் பொருளாதார பிரச்சனைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இன்று உங்கள் துணையின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடலாம். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்ய நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 44
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை



Click it and Unblock the Notifications