Latest Updates
-
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Today Rasi Palan 27 April 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்வதை தவிர்க்கணும்.. இல்ல கஷ்டமாயிடும்
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் மூல நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 27ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை எழும். ஆனால் அதற்காக அவசரமாக எந்த விஷயத்தையும் செய்யாதீர்கள். பணிபுரிபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் உயர் அதிகாரிகளின் உதவியுடன் சரியாகும். வியாபாரிகளுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக இந்நாள் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்நாள் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் 10:15 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்கள் குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களின் வேலைகள் தடையின்றி முடிவடையும். பணிபுரபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:20 முதல் மாலை 4:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். செலவுகள் அதிகம் இருக்கும். பட்ஜெட்டை மனதில் வைத்து செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் சிறப்பாக நடக்க வேண்டும். தேவையற்ற சண்டைகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:10 முதல் மதியம் 2:25 வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று தொழிலதிபர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற கடினமாக உழைக்க வேண்டும். தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்க, தேவையற்ற கவலைகளை விட்டு விலகி இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 முதல் மாலை 6:40 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று நிதி ரீதியாக அவ்வளவு சிறப்பாக இருக்காது. உங்களின் பணம் எங்காவது சிக்க வாய்ப்புள்ளது. வேலையில் உங்களால் கவனம் செலுத்த முடியாது. சில வேலைகள் முழுமையாக முடிக்கப்படாமல் போகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நரம்புகள் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆனால் எந்த ஒரு பண பரிவர்த்தனைகளையும் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களின் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கலவையான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 முதல் மாலை 3 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! நீங்கள் வேலையில்லாமல் இருந்தால், வேலை கிடைக்க இன்னும் சில காலம் ஆகும். குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும். வீட்டு சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இடுப்பு அல்லது முதுகில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று புதிய வேலை ஏதாவது தொடங்க நினைத்தால், வீட்டு பெரியோரின் ஆசியைப் பெற்று தொடங்குங்கள். இதனால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். லாட்டரி, பந்தயம் போன்றவற்றில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:25 முதல் மதியம் 12:20 வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று வேலையுடன் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்களிடம் கொடுக்கப்படும் பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் நடத்தை நன்றாக இருக்காது. தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். கடனில் இருந்தும் விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே! இதுவரை உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த நேரம் இல்லாவிட்டால், இன்று அதற்கு நேரம் கிடைக்கும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உங்களின் சில பெரிய பிரச்சினைகள் தீர்க்கப்படும். நிதி நிலை வலுவாக இருக்கும். திடீரென்று ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மாலை 3 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதீத நம்பிக்கை உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகள் முன்னிலையில் சங்கடப்பட வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு கலவையான நாளாக இருக்கும். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக இந்நாள் நன்றாக இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சோர்வு, தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 முதல் இரவு 8 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று வீட்டில் உள்ளோருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்களின் மன அழுத்தம் குறையும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வணிகர்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களின் எந்த வேலையையும் முடிக்காமல் இருக்காதீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 12:25 மணி வரை



Click it and Unblock the Notifications











