Today Rasi Palan 26 May 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு மே 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 26 May 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.30-8.30 மணி வரை. மாலை 3.30-4.30. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, தொழிலதிபர்களின் சில வேலைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தால், இன்று உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். உங்கள் வேலையை விரைவில் முடிக்கவில்லை என்றால், நீங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று எந்த ஒரு கடினமான காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் உடற்சோர்வு மற்றும் தலைவலியால் பாதிக்கப்படலாம். அதிக மன அழுத்தத்தைத் தவிர்த்து, போதுமான ஓய்வு எடுக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:25 மணி முதல் காலை 11:25 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று அரசியலில் தொடர்புடையவர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்களின் அனைத்து வேலைகளையும் விடாமுயற்சியுடன் செய்வீர்கள். வியாபாரிகள் லாபம் ஈட்ட கடுமையாக போராட வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். தகுந்த நேரம் வரும்போது உங்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு முதுகு அல்லது தோள்பட்டை தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் வேலையை விட்டுவிட்டு, பிறர் வேலையில் அதிகம் தலையிடாதீர்கள். இல்லையெனில், உங்களின் இந்த பழக்கம் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக நீங்கள் சில்லறை வியாபாரியாக இருந்தால், உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலை சாதகமற்றதாக இருக்கக்கூடும். குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று திடீர் செலவுகள் உண்டாகக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, மாணவர்கள் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். உங்கள் கல்வியில் ஏதேனும் தடைகள் இருந்தால் அது நீங்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் வேலை மிகவும் பாராட்டப்படும். இன்று உயர் அதிகாரிகளும் உங்கள் முன்னேற்றத்தைக் குறிப்பிடலாம். வியாபாரிகள் தங்களின் தடைபட்ட ஒப்பந்தங்கள் முடிவடையும். இந்த நேரத்தில் நீங்கள் ஆபத்தான முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் காணப்படும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களைப் புறக்கணிப்பதாக உணர்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் பொருளாதார நிலை மேம்படும். உங்கள் வருமானம் உயரும். அலுவலகத்தில் உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உயர் அதிகாரிகளின் மனநிலையைக் கெடுக்கும். நீங்கள் தொடர்ந்து கவனக்குறைவாக இருந்தால், உங்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பும் இன்று உங்களிடமிருந்து திரும்பப் பெறப்படலாம். மேலும், அது உங்கள் முன்னேற்றத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வியாபாரிகள் இன்று சில ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உங்கள் பழையச் நண்பரை சந்திக்கலாம். அதனால், உங்களின் சில நல்ல நினைவுகள் மீண்டும் மலரும். வேலையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். தொடர்ந்து கடினமாக உழைத்தால், விரைவில் உங்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று உங்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். நீங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணைக்கான தேடல் இன்று முடிவடைய வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறிதளவும் அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 9:50 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, சில காலமாக உங்கள் உடல்நிலை குறித்து கவலைப்பட்டால், உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தினமும் யோகா, தியானம் செய்ய வேண்டும். விரைவில் நீங்கள் பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை அடிப்படையில் இன்று கலவையான பலன்களை தரும். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும். அனைத்து வேலைகளும் குறித்த நேரத்தில் முடிவடையும். வணிகர்கள் விரைவான லாபத்தை ஈட்டுவதற்கான பிறர் பேச்சை கேட்டு நடப்பதைத் தவிர்க்கவம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். பணம் தொடர்பான உங்கள் முயற்சிகள் இன்று தோல்வியடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் காலை 12:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால், நீங்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். நீங்கள் பொறுமையாக இருங்கள். வியாபாரிகளின் பொருளாதார நிலை மேம்படும். முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதற்கு இன்று ஏற்ற நாள். ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும், இன்று நீங்கள் சில வழிபாட்டு தலங்களுக்குச் செல்லலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, குடும்பத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும், உறவுகள் மேம்படும். இன்று நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையை மேம்படுத்தும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிவடையும். இருப்பினும், நீங்கள் நிறைய அலைய வேண்டியிருக்கும். உங்களுக்காக போதுமான நேரத்தை நீங்கள் பெற முடியாது. உடல் நலத்திலும் அக்கறை காட்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இன்று புதிய வீடு, வாகனம், கடை போன்றவற்றையும் வாங்கலாம். வியாபாரரிகள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். நீங்கள் புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களின் வருமானமும் கூடும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஆச்சரியம் அளிக்க நீங்கள் திட்டமிட்டால், இன்று அதற்கு சரியான நாள். காதல் வாழ்க்கையில் இன்று சர்ச்சைக்குரிய நாளாக இருக்கும். உயர்கல்விக்கான முயற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று செலவுகள் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் தனிமையில் இருந்தால் உங்கள் எதிர்கால துணையை சந்திக்கலாம். உங்கள் காதல் வாழ்க்கை விரைவில் தொடங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும் போது, ​​உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். இல்லையெனில், உங்கள் கட்டுப்பாடற்ற பேச்சு உங்கள் பெயரைக் கெடுக்கும். வியாபாரிகள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:25 மணி முதல் இரவு 8 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, அரசு வேலைக்குத் தயாராகும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை சில பெரிய வெற்றிகளை அடையலாம். அதனால், நீங்கள் மிகவும் பெருமைப்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு பற்றிய கனவு நனவாகும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று உங்களுக்கு பண விஷயத்தில் சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்கள் கண்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் அதிகம் பயன்படுத்தினால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை

Story first published: Sunday, May 26, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion