Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
Today Rasi Palan 26 April 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 26ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் பரபரப்பான நாளாக இருக்கும். வேலை அழுத்தம் உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும். வேலையுடன் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து சில பயனுள்ள ஆலோசனைகளைப் பெறலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நேரமிது.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் இரவு 9:05 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய விவாதம் நடத்த வாய்ப்புள்ளது. நீங்கள் உங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும். பெரிய லாபத்திற்காக சிறிய லாபத்தைப் புறக்கணிக்காதீர்கள். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் பணம் எங்காவது சிக்கி கொள்ளலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு தொண்டை தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:25 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, முன்னோர் தொழிலை செய்பவர்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க போகிறீர்கள் என்றால், உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் திடீர் வாக்குவாதம் ஏற்படலாம். இருப்பினும், நகைச்சுவையாக கூட, உங்கள் துணையின் மனதைப் புண்படுத்தாதீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பல்வலியால் அவதியுறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்பைப் பெறலாம். சிறு வியாபாரிகளுக்கு இன்று நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். உங்கள் பங்குகளை அதிகரிக்கவும் பரிசீலிக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் திருமண வயதில் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு சிறந்த வரன் தேடி வரும். இன்று உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்கள் உடல்நிலையில் சிறிதும் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, மாணவர்கள் தங்கள் நேரத்தை வீணாக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுக்கு வேலையில் சற்று காலதாமதம் ஏற்படலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் சில வேலைகள் தடைப்பட வாய்ப்பு உள்ளது. நாளின் இரண்டாம் பகுதியில் சில உறவினர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கென போதுமான நேரம் கிடைக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, ஆன்லைன் வணிகம் செய்பவர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப பலன்களைப் பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் சில மாறுதல்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று மிகவும் சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று குடும்பத்தாருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலை சற்று அதிகரிக்கலாம். அலுவலகச் சூழல் இன்று நன்றாக இருக்கும். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். தொழிலதிபர்கள் இன்று திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணத்தின் அடிப்படையில், இன்று கலவையான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நீண்ட நேரம் பட்டினி கிடப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 11:30 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், இன்று நீங்கள் அலுவலக அரசியலுக்கும் பலியாகலாம். தேவைக்கு மேல் யாரையும் நம்பாதீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். எந்தவொரு பண பரிவர்த்தனை செய்யவும் இன்றைய நாள் உகந்ததல்ல. தேவையில்லாமல் யோசித்து மன அமைதியைக் குலைத்து கொள்ளாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:25 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வேலை தொடர்பான எந்தவொரு புதிய முயற்சியிலும் வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் படித்து முடித்து நல்ல வேலையைத் தேடிக்கொண்டிருந்தால், உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். இன்று பண விஷயத்தில் சிறந்த நாளாக இருக்கும். உங்களுக்கு பணம் கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கினால் நல்லது. அலுவலகத்தில் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ளவும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். இன்று வியாபாரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள், பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:40 மணி முதல் மாலை 3:00 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடலாம். வேலை தொடர்பாக அதிக மனஅழுத்தம் எடுத்து கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். நேர்மறையாக இருந்து, கடினமாக உழைக்கவும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானம் சமநிலையில் இருக்கும். குடும்பத்தாருடன் இருந்துவந்த மனகசப்பு நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று வீண் விவாதத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உங்கள் வேலையை மதிப்பாய்வு செய்யலாம். எனவே, சிறு தவறைக் கூட தவிர்க்கவும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று பண விஷயத்தில் கலவையான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அலட்சியத்தைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை



Click it and Unblock the Notifications