Today Rasi Palan 23 June 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் அளவிற்கு மீறி செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 23ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 23 June 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, குழந்தை மூலம் இன்று உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர்கள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் வந்து சேரும். பெற்றோரிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கும். வேலையின் அடிப்படையில், இன்று உங்களுக்கு நல்ல அறிகுறியைக் கொடுக்கும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். திடீர் பண வரவு வந்து சேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் காலை 9:50 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு இன்று நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது உங்கள் வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துங்கள். இல்லையெனில் உங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். சமீபத்தில், நீங்கள் ஒரு பெரிய திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தால், இன்று அதன் சரியான முடிவைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:55 மணி முதல் இரவு 8:15 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இன்று நீங்கள் உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஒருவருக்கொருவர் சுற்றுலா செல்லலாம். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், நீங்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையில், இன்று பரபரப்பாக இருக்கும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 9:00 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று, வேலை தொடர்பான நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தாயின் மூலம் நன்மைகள் சாத்தியமாகும். பணத்தின் அடிப்படையில், இன்று கலவையானதாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். வெகுநேரம் வரை தூங்காமல் இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:45 மணி முதல் மாலை 3 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உங்களுக்காக போதுமான நேரத்தைப் பெறுவீர்கள். உங்களுக்கான சிறிது செலவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்கும். அவர்களிடமிருந்து உங்களுக்கு பிடித்த பரிசைப் பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். பழைய நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. அலுவலகத்தில் நீண்ட நாட்களாக ஏதேனும் வேலை நிலுவையில் இருந்தால், இன்று அதை முடிக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:05 மணி முதல் மாலை 4 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் வீட்டில் ஒரு சிறிய விருந்தை ஏற்பாடு செய்யலாம். இருப்பினும், அளவிற்கு மீறி அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையின் அடிப்படையில் இன்று நல்ல நாளாக இருக்கும். எதிர்பார்த்த பலனைப் பெறலாம். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, வீட்டில் திருமண வயதில் யாரேனும் இருந்தால், இன்று அவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பெற்றோருடன் அருமையான நேரத்தைச் செலவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயம் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாததகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். வணிகர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், இன்று நீங்கள் அதை திருப்பிச் செலுத்த முடியும். இதன் மூலம் உங்கள் பெரிய கவலை நீங்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல நிதிப் பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:50 மணி முதல் காலை 8:55 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, பங்குச் சந்தையில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமாக இருக்கும். உங்களின் சரியான முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

Story first published: Friday, June 23, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion