Today Rasi Palan 22 October 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்கணும்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். அக்டோபர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 22 October 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 6.15-7.15 மணி வரை. மாலை 3.15-4.15 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, நிதி ரீதியாக இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். திடீர் செலவுகள் உங்கள் நிதி நிலையைக் கெடுக்கலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் உங்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. வணிகர்கள் பெரிய லாபத்திற்காக சிறு ஆதாயங்களைப் புறக்கணிக்கக்கூடாது. குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்:45
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, வேலை அடிப்படையில் இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். வியாபாரிகள் பெரிய முதலீடுகளைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். இன்று பணம் சம்பந்தமாக நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்:
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 7:15 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் மனதளவில் நன்றாக உணரமாட்டீர்கள். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை விஷயமாக திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். உடல்நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:10 மணி முதல் மாலை 3:30 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அதை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் இன்று முக்கிய வியாபார முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். புதிய முதலீட செய்த திட்டமிட்டால் இன்று கவனமாக சிந்திக்க வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் காதல் நிறைந்த மனநிலையில் இருப்பார். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 4 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை மேலோங்கும். இன்று அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான முடிவுகளை கவனமாக எடுக்கவும். வேலை அடிப்படையில் கலவையான நாளாக இருக்கும். நிதித்துறையில் பணிபுரிபவர்கள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, நீங்கள் புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால் இன்று உங்கள் ஆசை நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் ஆற்றல் முதலாளியைப் பெரிதும் கவர்ந்திழுக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். திடீரென்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரலாம். உடல்நலம் தொடர்பான சிறிய பிரச்சனைகளைக் கூட
புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இது மிகவும் முக்கியமான நேரமாகும். எனவே, தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு தடைப்பட்ட லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். உடல்நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 6:50 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உத்தியோகஸ்தர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இன்று நண்பர்களுடன் வெளியே செல்லலாம். வானிலை மாற்றத்தால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 மணி முதல் மதியம் 2:50 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, வியாபாரிகள் இன்று பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் போட்டியாளர்கள் உங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் தாராள மனப்பான்மை உங்கள் பிரச்சினைகளை அதிகரிக்கும். இன்று உங்களுக்குள் பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்படலாம். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, கூட்டுத் தொழில் செய்பவர்கள் இன்று கலவையான லாபத்தைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் வேலையில் கவனம் செலுத்தி, தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். வீட்டுச் சூழலில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தின் அடிப்படைல் இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, சில நாட்களாக நீங்கள் எதையாவது பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் எண்ணங்களை உங்கள் அன்புக்குரியவர்களுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சிந்திக்காமல் எந்த நிதி பரிவர்த்தனைகளையும் செய்யாதீர்கள். மற்றவர்களை உங்கள் வேலையில் அதிகமாக தலையிட விடாதீர்கள். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:20 மணி முதல் மதியம் 12 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, காதல் விஷயங்களில் இன்று சர்ச்சைக்குரிய நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் ஒரு முக்கியமான திட்டத்தை வழிநடத்த வாய்ப்பு வழங்கப்படலாம். வியாபாரிகளின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை

Story first published: Sunday, October 22, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion