Latest Updates
-
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 22 May 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் செலவழிப்பதை தவிர்க்கணும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு மே 22ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.30-10.30 மணி வரை. மாலை 4.30-5.30 மணி வரை. ராகு காலம் காலை 12.30-1.00 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் -வடக்கு திசை. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்கள் டினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் உங்களை கட்டுப்படுத்தி உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் நல்லது. சிறிய தவறுகளை தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். அன்புக்குரியவர்களுக்கு போதிய நேரம் கொடுக்க முடியாமல் போகலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். யோசிக்காமல் பெரிய செலவு செய்யாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தோள்பட்டை தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் இருப்பவர்கள் இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று உங்களுக்கு சில கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகலாம். இன்று உங்கள் அன்புக்குரியவர்கள் மிகவும் மோசமான மனநிலையில் இருப்பார்கள். நிதி ரீதியாக சுமாராக இருக்கும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டிருந்தால், நீங்கள் விரும்பிய வேலையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வணிகத்துடன் தொடர்புடையவர்கள் இன்று பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்றைய தினம் உங்களுக்கு நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். மற்றவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பைப் பெறலாம். அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம், இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படலாம். குழந்தைகளின் படிப்பிற்காக அதிக பணத்தை செலவழிக்க வாய்ப்பு உள்ளது.ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உதவி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சிறிய உதவி ஒருவரின் பெரிய பிரச்சனையை தீர்க்கலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் உங்களது ஒருங்கிணைப்பு மேம்படும். இன்று அனைத்து வேலைகளையும் விரைவாக முடிப்பீர்கள். நிலுவையில் உள்ள சில பணிகளை முடிப்பதிலும் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் நிலுவையில் உள்ள விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டும். நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டால், இன்று உங்களுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று அரசியல்ல் ஈடுபடுபவர்களுக்கு மிவும் நல்ல நாளாக இருக்கும். பதவி, புகழ் இரண்டும் உயரும். வெளிநாடட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது நிறைவேறும். நிதி ரீதியாக அதிர்ஷ்டமாக இருக்கும். வருமானம் பெருகும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பேணுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு நடைக்கு செல்லலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ,இன்று அரசு வேலை செய்பவர்கள் தங்கள் வேலைகளை திட்டமிட்டபடி முடிக்க முயற்சிப்பது நல்லது. இல்லையெனில் உங்கள் முக்கியமான சில வேலைகள் இன்று முழுமையடையாமல் போகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமான நிதி முடிவுகளால் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். வீட்டில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். இந்த வாரம் உங்களின் மன அழுத்தம் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! வியாபாரிகளுக்கு தங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சோம்பலை கைவிட வேண்டும். இன்று உங்களின் கடின உழைப்பு முன்னேற்றத்திற்கான வாய்ப்பைத் தரும். நீங்கள் கடினமாக உழைத்து உங்களால் முடிந்ததைச் செய்வது நல்லது. உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். மற்றவர்களைக் கவர அதிகமாகச் செலவு செய்வது உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் மாற்றங்களை காணலாம். இன்று ஆரோக்கியம் சற்று சிரமமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படலாம். உங்கள் உறவை முன்னோக்கி நகர்த்த நீங்கள் முடிவு செய்யலாம். உங்கள் துணையின் ஆதரவையும் பெற வாய்ப்பு உள்ளது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்தால், இன்று அது தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் சகவாசம் கிடைக்கும். உங்களின் வேலையை விடாமுயற்சியுடன் செய்வீர்கள். இன்று நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சுமாராக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! வேலையுடன் உங்கள் அன்புக்குரியவர்களிடம் கவனம் செலுத்துவது நல்லது. வீட்டுப் பொறுப்புகளைப் புறக்கணிக்காதீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் சில வேலைகளில் அதிருப்தி அடைவார்கள். அவருடைய வார்த்தைகளை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் நல்லது. வியாபாரிகளுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இன்று இருக்கும். உங்களின் முக்கியமான வேலைகள் சில தடைபடலாம். மேலும் நிதி இழப்பும் ஏற்படலாம். நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம் இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவலை மற்றும் சோர்வு காரணமாக உங்கள் உடல்நலம் இன்று திடீரென மோசமடையக்கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! புதிய சொத்து வாங்க விரும்பினால், இன்று உங்கள் விருப்பம் நிறைவேறும். உங்களுடைய பழைய சொத்தில் ஏதேனும் ஒன்றை நீங்கள் விற்க விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். நிலுவையில் உள்ள சில வேலைகளை முடிக்க வாய்ப்பு உள்ளது. பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். செலவுகள் குறையும். அதிகமாக சேமிக்க முடியும். வாழ்க்கை துணையுடன் போது உங்கள் வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்தவும். தெரிந்தோ தெரியாமலோ இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதை காயப்படுத்தலாம். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி இருப்பதால், பணம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், இன்று அதை திரும்பப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் நீங்கள் செய்யும் பணி மிகவும் பாராட்டப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல நீங்கள் திட்டமிட்டால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். காதலைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











