Today Rasi Palan 21 October 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவு செய்வதற்கு முன்பு யோசித்து செயல்படணும்

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். அக்டோபர் 21ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 21 October 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 8.15-9.00 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. மிருகசீருஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, வேலை மாற்றத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், அதைச் செயல்படுத்த இதுவே சரியான நேரம். இன்று பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நேரத்திற்குச் சாப்பிடுவதைப் பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ் நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 8:50 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் அலட்சியத்தைத் தவிர்த்து, மிகவும் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். உங்கள் நிதி நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, கூட்டுக்குடும்பத்தில் வசிப்பவர்கள் அனைவரையும் அனுசரித்து வாழ பழகி கொள்ளவும். தேவையற்ற கோபம், குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தலாம். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிவடையும். இதனால் முதலாளி மிகவும் மகிழ்ச்சியடைவார். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 44
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மதியம் 12 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று தேவைப்படும் ஒருவருக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் நீங்கள் சரியான முடிவுகளைப் பெறலாம். உங்கள் தந்தையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை மிகவும் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் முன்வைக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு சில கடினமான பணிகளை ஒதுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். வணிகர்கள் ஆபத்தாக முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், நஷ்டம் ஏற்படும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் ஒரு பெரிய கோரிக்கையை முன்வைக்கலாம். கோபத்திற்கு பதிலாக அமைதியாக செயல்படவும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். வேலை தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். புதிய தொழில் தொடர்பான உங்கள் திட்டம் இன்று முன்னேறும். இன்று நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகள் உணவில்சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:20 மணி முதல் காலை 8:30 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சோர்வாகவும் சுமையாகவும் உணரலாம். வேலையுடன், உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் வணிகம் செய்வோர், ஓர் பெரிய ஒப்பந்தத்தை பெறலாம். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:15 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்கள் திருமண வாழ்வின் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இருக்கலாம். அலுவலகத்தில் சில முக்கிய வேலைகள் தடைபடுவதால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். வணிகர்கள் புதிய வணிக முன்மொழிவுகளை அவசரமாக ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் இன்று நல்ல நாளாக இருக்கும். பெரிய செலவுகளை செய்வதற்கு முன்பு நன்கு யோசிக்கவும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:20 மணி முதல் மாலை 3:20 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பண விஷயங்களில் கவனம் தேவை. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். இது உங்கள் வேலையைப் பாதிக்கும். வணிகர்கள் இன்று வீண் சச்சரவுகளைத் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் சட்ட விஷயங்களில் சிக்கிக்கொள்ளலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், அதிக மன அழுத்தத்தால் இன்று உங்களுக்கு உடல்நிலை பாதிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:40 மணி முதல் மதியம் 1 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, வேலை அடிப்படையில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். குழந்தைகளின் கல்வி சம்பந்தமான முடிவுகளில் அவசரப்படாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் வழக்கத்தை விட இன்று சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், அதிகப்படியான வறுத்த அல்லது காரமான உணவைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பணம் தொடர்பாக ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. அலுவலகத்தில் சிறிய வேலைகளைக் கூட கவனமாகச் செய்யுங்கள். இல்லையெனில், முதலாளியின் கோபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். இன்று அதிகப்படியான அலைச்சலாம் உடல் நலம் பாதிக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று வேலை அடிப்படையில் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்பிற்கான புகழும், அங்கீகாரமும் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில், சில நல்ல செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். மனதிற்கு நெருக்கமான ஒருவருடன் உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:10 மணி முதல் காலை 7:30 மணி வரை

Story first published: Saturday, October 21, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion