Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 21 November 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். நவம்பர் 21ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 8.30-9.00 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 3.00-4.30 மணி வரை. குளிகை காலை 12.00-1.30 மணி வரை. எமகண்டம் காலை 9.00-10.30 மணி வரை. சூலம் - வடக்கு திசை. பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, வியாபாரிகளின் நிதிப் பிரச்சனைகள் இன்று தீரும். இருப்பினும், பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், இன்று எல்லாம் சரியாகிவிடும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் நிறைய அலைய வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் சுமையாக உணரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:50 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று வேலையில் கலவையான முடிவுகளைத் தரும். பிறரை அதிகமாக நம்புவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு இது வேலை மாற்றத்திற்கான நேரம். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் புதிய நிதி முயற்சிகள் வெற்றியடையலாம். இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். குறிப்பாக உடன்பிறந்தவர்களுடனான உறவு வலுவடையும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு கை அல்லது கால் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும். வியாபாரிகளுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சற்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:35 மணி முதல் காலை 11 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று அரசியலில் தொடர்புடையவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்கள் வருமானம் உயரும். இன்று பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். சொத்து சம்பந்தமான தகராறுகளைத் தீர்க்க வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:50 மணி முதல் மாலை 3 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்கள் மனதில் வீண் குழப்பம் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். தேவையில்லாமல் உங்கள் துணையைச் சந்தேகிக்கும் பழக்கத்தால், இன்று உங்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கலாம். அலுவலகத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால், உயர் அதிகாரிகளின் கோபத்தை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும். உங்கள் மீது அதிக கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் காலை 11:30 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, பண விஷயங்களில் இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணத்தைப் பெறுவீர்கள். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட வேலையும் இன்று செய்து முடிப்பீர்கள். வேலையில் இன்று பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளின் சுமை உயரலாம். இன்று நீங்கள் வேலை விஷயமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியமும் சமமாக முக்கியமானது. எனவே, ஆரோக்கியம் காக்க போதுமான ஓய்வு எடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று தேவைப்படும் ஒருவருக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இன்று பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், இன்று உங்கள் பணிகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். இன்று சில புதிய யுக்திகளையும் கையாளலாம். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்களின் முழு கவனம் அலுவலகத்தில் உங்கள் வேலையில் இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இன்று வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், சட்ட விஷயங்களில் சிக்கிக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் சாத்தியமாகும். அவர்களின் வார்த்தைகளைப் புறக்கணிக்கும் தவறு செய்யாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு வயிற்றில் எரிச்சல், மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, நிதிக் கண்ணோட்டத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அலவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் உங்களுக்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட சில பொறுப்புகள் உங்களிடமிருந்து திரும்பப் பெறப்படலாம். நீங்கள் மிகவும் நிதானமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். குடும்ப பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 9:15 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பணிச்சுமை குறைய வாய்ப்புள்ளது. இன்று பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்காது. யோசிக்காமல் எந்த பெரிய செலவும் செய்திட வேண்டாம். திருமணமாகாதவர்களுக்கு இன்று நல்ல வரன் தேடி வரலாம். உங்கள் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். உடனே மருத்துவரை அணுகினால் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று பண விஷயத்தில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். விரைவில் கடனில் இருந்து விடுபடலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நேரத்தை முழுவதுமாக கவனித்துக்கொள்ளவும். எந்த வேலையையும் நாளை என தள்ளிப் போடாதீர்கள். தொழிலதிபர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:15 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர்கள் சிறிய விஷயங்களைப் புறக்கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தேவையற்ற சண்டைகள் சாத்தியமாகும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்வது நல்லது. குறிப்பாக, கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் இன்று தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் இன்று ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். உடல்நிலை மோசமடைந்ததற்கான அறிகுறிகள் தென்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 12:20 மணி வரை



Click it and Unblock the Notifications











