Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
Today Rasi Palan 21 April 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக தடைப்பட்ட வேலை இனிதே முடிவடையும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் உத்திரம்,ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 21ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, வேலை தேடு கொண்டிருப்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நீங்கள் விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம். வியாபாரிகளுக்கு இன்று ஓரளவு நிம்மதி கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை பெற்றோர் துணையுடன் தீர்த்திட முடியும். நிதி நிலையில் ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பிறரை கேலி செய்வதை தவிர்க்கவும். இன்று முதலாளியின் பார்வை உங்கள் மீது இருக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்தால் சிக்கல் உண்டாகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:40 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்கள் மீது கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் நாளை சிறப்பானதாக மாற்ற சில நல்ல திட்டங்களை தீட்டலாம். வேலையைப் பற்றி பேசினால், இறக்குமதி-ஏற்றுமதி தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். தொழிலதிபர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் நல்ல செயல்பாடு பெரிதும் பாராட்டப்படும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் காலை 10:00 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அலுவலகத்தின் சூழல் மிகவும் பதற்றமாக இருக்கும். சிறிய தவறுகளுக்கு கூட உயர் அதிகாரிகளின் கோபத்தைச் சந்திக்க நேரிடும். இன்று கவனமாகவும், சீராகவும் நடந்து கொள்வது நல்லது. வியாபாரிகள் இன்று எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடையலாம். நிதி ரீதியாக, இன்று கலவையான முடிவுகளைத் தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:00 மணி முதல் காலை 8:00 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் புதிய வேலைகளை இன்று தொடங்கலாம். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவதன் மூலம், இன்று நீங்கள் மிகவும் சாதகமாக இருப்பீர்கள். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உடன்பிறந்தவர்களுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். ஒருவர் மீது ஒருவருக்கு உணர்வு ரீதியான பற்று அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவில் இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 6:45 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, மாணவர்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்த்து, படிப்பில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகள் இன்று முடிவதால் மனநிம்மதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் இருக்கும். பொருளாதார நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், நிதி விஷயத்தில், மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், எதிர்கால திட்டங்களில் தடைகள் ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உடல்நலம் குறித்த கவலை சற்று அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9:05 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று நீங்கள் நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வருமானம் அதிகரிக்க வலுவான வாய்ப்புள்ளது. தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். கூட்டு வியாபாரம் செய்ய திட்டமிட்டிருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் காலை 9:35 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமான நாளாக இருக்கும். சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என்றால், இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் முடித்து காட்டுவீர்கள். தொழிலதிபர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். இன்று அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:25 மணி முதல் இரவு 8:05 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்கள் மனம் மிகவும் அலைக்கழிக்கப்படும். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உங்கள் மனதைப் பகிர்ந்து கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் எந்த வேலையையும் முழுமையடையாமல் விடாதீர்கள். இல்லையெனில், உங்கள் முதலாளியின் கோபத்தை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை இன்று உங்களிடம் ஒரு பெரிய கோரிக்கையை முன் வைக்கலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:50 மணி முதல் மாலை 3:00 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் கவனக்குறைவாக இருக்க நேரிடலாம். உங்கள் நிதி முயற்சிகள் தோல்வியடையலாம். குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு விரிசல் ஏற்படலாம். உங்கள் நிலையை அமைதியான முறையில் எடுத்துரைக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வானிலை மாற்றங்களால் உங்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. உணவில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் காலை 9:20 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக அற்புதமான நேரத்தைச் செலவிடுவீர்கள். குறிப்பாக உங்கள் பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெறலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எந்த முக்கிய முடியும் எடுக்க வேண்டாம். நல்ல ஆரோக்கியத்தைப் பெற போதுமான தூக்கத்தைப் பெற வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்பது நல்லது. நிதி ரீதியாக இன்று விலை உயர்ந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் உங்கள் வருமானத்தைக் கெடுத்துவிடும். இன்று நீங்கள் உங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். உங்கள் வேலையுடன், ஆரோக்கியத்தையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 7:25 மணி வரை



Click it and Unblock the Notifications











