Today Rasi Palan 19 May 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பணம் தொடர்பான கவலைகளிலிருந்து விடுபடலாம்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 19ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 19 May 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் மந்தமாக இருக்கும். தொழிலதிகர்ள் நல்ல நிதி நன்மைகளை பெறவும் வாய்ப்புள்ளது, இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பரபரப்பாக இருக்கும். இருப்பினும், உங்கள் வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிவடையும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று பண பரிவர்த்தனை செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். உடல்நலம் சம்பந்தமான திடீர் பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று வீட்டின் சூழல் சரியாக இருக்காது. வியாபாரிகள் இன்று அவசரத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களுக்கு லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தால், கவனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் திடீரென்று ஒரு பழைய நண்பரைச் சந்திக்க நேரிடும். இன்று, உங்களின் சில நல்ல நினைவுகள் மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவார்கள். ஒருவேளை இன்று உங்களுக்கு பிடித்த திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படும். இன்று நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள், தங்கள் கூட்டாளருடனான ஒருங்கிணைப்பு இன்னும் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையில்லாத அலுவலக அரசியலில் ஈடுபடாதீர்கள். இல்லையெனில், வரும் நாட்களில் நீங்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். தொழிலதிபர்கள் இன்று புதிய வியாபார முன்மொழிவை பெறலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். யோசித்து செலவு செய்வது நல்லது. தேவையில்லாமல் சந்தேகப்படும் உங்கள் பழக்கம் உங்கள் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை கெடுக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 10:30 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் வாங்கிய பங்குகளால் எதிர்பார்த்த முடிவைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் சொந்தமாக சிறு தொழில் தொடங்க விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, வருமானத்தை அதிகரிக்கும் உங்கள் முயற்சிகளில் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களின் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். உங்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று நீங்கள் மனதளவில் அதிக அழுத்தத்தை அனுபவிப்பீர்கள். பல வகையான எதிர்மறை எண்ணங்களும் மனதில் வரலாம். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நேரமிது. உத்தியோகஸ்தர்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆனால் இன்று செலவுகள் சற்று அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் சில முக்கிய ஆலோசனைகளைப் பெறலாம். நீங்கள் வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டிருந்தால், பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, சில காலமாக உங்களால் குடும்ப வாழ்க்கையில் சரியான கவனம் செலுத்த முடியவில்லை என்றால், இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரிகள் இன்று புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். உங்கள் எதிரிகளிடமும் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று சராசரி நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சோம்பலாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, காலநிலை மாற்றத்தால், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் தினசரி வழக்கத்தில் சில மாற்றங்கள் தேவை. நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் மனநிலை இன்று சரியாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயத்தை பற்றியும் விவாதிப்பதைத் தவிர்க்கவும். இன்று அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் காலை 10:25 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, வீட்டின் பெரியவர்களுடன் உங்கள் உறவை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். திருமணமாகாதவர்களுக்கு இன்று நல்ல வரன் தேடி வரும். விரைவில் உங்கள் ஆசை நிறைவேறும். பண விஷயத்தில் இன்று சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானமும் உயரும். வேலையில் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பான பலனைப் பெற்றிடலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, அலுவலக சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு முக்கியமான சந்திப்பில் பங்கேற்கலாம். இன்று உங்கள் தன்னம்பிக்கை முதலாளியை மிகவும் கவர்ந்திழுக்கும். வியாபாரிகளுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். சில சட்ட விவகாரங்களில் சிக்கிக் கொள்ளலாம். பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் உள்ள குழந்தைகளிடம் அதிகம் கண்டிப்புடன் இருக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் பயணம் சாத்தியமாகும். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் எண்ணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் நன்றாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:40 மணி முதல் மாலை 3:00 மணி வரை

Story first published: Friday, May 19, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion