Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...!
Today Rasi Palan 19 April 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 19ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, இன்று நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்பு பலனளித்து, மிகப்பெரிய வெற்றியை அடையலாம். இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக சில முக்கியமான பொருட்களை வாங்கலாம். இன்று நீங்கள் உணர்ச்சிவசப்படுவதையும், அவசரமாக முடிவு எடுப்பதையும் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:40 மணி முதல் காலை 11 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் சில காலமாக இருந்துவந்த மனக்கசப்பை பேசி தீர்க்க முயற்சிக்கவும். நீங்கள் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் மேலதிகாரியிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளைப் பெறலாம். வர்த்தகர்கள் அதிக லாபம் ஈட்ட தவறான பாதையில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் ஒரு சிறு தவறு உங்களைப் பெரிய சிக்கலில் சிக்க வைக்கும். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். உங்கள் உடல்நிலை குறித்து அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7:25 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்களுக்கு இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. வேலையில் அதிக அழுத்தத்தைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் அன்பானவர்களுடன் மனதைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல அறிகுறி தென்படும். உங்கள் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:35 மணி முதல் காலை 11:30 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்கள் நண்பரே உங்களது நம்பிக்கையை உடைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமாக உணருவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். நல்ல வெற்றியை அடைய புதிய மற்றும் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். இன்று உங்கள் விற்பனை அதிகரிக்கலாம். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், சரியான நேரத்தில் சாப்பிடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, சிறிய விஷயங்களுக்காக அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் வீண் விவாதத்தைத் தவிர்க்கவும்.இல்லையெனில், பெரும் இழப்பு சாத்தியமாகும். பொருளாதார ரீதியாக இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உங்கள் வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துங்கள். உங்களின் முக்கிய முடிவுகளில் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, முன்னோர் தொழிலில் தொடர்புடையவர்கள் தந்தையின் உதவியால் இன்று பெரிய பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் கூடுதல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக உணருவீர்கள். இன்று நீங்கள் பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:05 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, தொழிலதிபர்களின் தடைபட்ட வேலைகள் அனைத்தும் வேகமாக முன்னேறும். இன்று வணிக ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் வித்தியாசமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். உங்களின் கவனக்குறைவால் பெரும் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். இன்று சில காரணங்களால் உங்கள் வாழ்க்கைத் துணையை விட்டு விலகி இருக்க வேண்டி வரும். இன்று உங்களுக்கு பல் பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, முன்னோர் சொத்து சம்பந்தமான சில பெரிய ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பம் தொடர்பான சிறிய முடிவையும் மிகவும் கவனமாக எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். அரசு ஊழியர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் முன்னேற வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், இந்த நேரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். சில புதிய யுக்திகளை வகுக்க வேண்டும். உடல்நலம் தொடர்பான கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:15 மணி முதல் மாலை 6 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் விஷயங்கள் பதற்றமானதாக இருக்கும். நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் வழியில் பெரிய தடைகள் இருக்கலாம். திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் செய்யப் போகிறார்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, பணம் தொடர்பான விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் இனிமையான நாளாக இருக்கும். வேலை தொடர்பான பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பொழுதுபோக்கிற்காக சிறிது பணம் செலவிடலாம். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் துணையின் அன்பான உபசரிப்பு உங்களைச் சிறப்புற உணர வைக்கும். இன்று நீங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் காலை 11:15 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் இன்று தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். அலுவலகத்தில், உங்கள் பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தியை மேலதிகாரி உங்களிடம் வழங்குவார். வியாபாரிகளின் பொருளாதார நிலையும் வலுவடையும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலையின் அடிப்படையில், இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உத்தியோகஸ்தர்களே, அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்பாட்டில் திருப்தி அடைய மாட்டார்கள். இன்று நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். வணிகர்களுக்கு பணம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். உடல்நலக் குறைவு காரணமாக பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9:25 மணி வரை



Click it and Unblock the Notifications











