Latest Updates
-
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Today Rasi Palan 16 May 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்பி விடக்கூடாது..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024 ஆம் ஆண்டு மே 16ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.30-11.30 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.90-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உங்களது குடும்பப் பொறுப்புகளைப் புறக்கணிக்காதீர்கள். இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில் அது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் ஏதேனும் போட்டித் தேர்வில் கலந்துகொள்ளத் தயாராகி இருந்தால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உங்களுக்கிடையே நெருக்கம் மேலும் அதிகரிக்கும். வேலையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். நேர்மறையாக இருந்து, தொடர்ந்து கடினமாக உழைக்கவும். விரைவில் உங்களுக்கு முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும். மாணவர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். உங்கள் கல்வியில் சில தடைகள் இருக்கலாம். பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு கடன் கொடுப்பதற்கு முன்பு, நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். இல்லையெனில் பணத்தால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படலாம். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அவசரமாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம். இல்லையெனில், உங்கள் கவனக்குறைவால், பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். வியாபாரிகளின் புதிய திட்டங்கள் வேகம் பெறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனையை எதிர்கொண்டால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, பாதகமான சூழ்நிலைகளில் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அதிருப்தியைச் சந்திக்க வேண்டி வரும். உங்களுடைய சில தவறுகளால் அவர்கள் உங்கள் மீது மிகவும் கோபம் கொள்ளலாம். வியாபாரிகள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பதற்கு இன்று ஏற்ற நாள் அல்ல. உங்கள் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்வது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, உங்கள் மீது அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்றைய நாள் மிகவும் இனிமையான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வேலை தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவருக்கு விலை உயர்ந்த பரிசும் வாங்குவீர்கள். காதலைப் பொறுத்தவரை இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் துணையிடம் திருமணத்திற்கு முன்மொழிய விரும்பினால், இன்று நல்ல நாளாக இருக்கும். நேர்மறையான பதிலைப் பெறலாம். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:20 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உயர்கல்வி கற்க வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைக்கும். இன்று உங்களுக்கு பண விஷயத்தில் சிறந்த நாளாக இருக்கும். உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று உங்களுக்கு வேலையில் பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலiவயான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 2 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறப்பாக நேரத்தைச் செலவிடுவீர்கள். அதிகப்படியான உற்சாகத்தில் அளவிற்கு மீறி செலவு செய்வதைத் தவிர்க்கவும். இன்று வேலை சம்பந்தமான கவலைகள் அதிகமாகும். வியாபாரிகளின் சில வேலைகள் பாதியில் தடைபட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவையில் உள்ள பணிச்சுமை அதிகரிக்கலாம். காதலைப் பற்றி பேசும்போது, உங்களால் நிறைவேற்ற முடியாத எந்த வாக்குறுதியையும் உங்கள் துணையிடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் வருமானம் உயரும். வணிகர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்துவதற்கான அறிகுறிகள் தென்படும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 9:50 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, நீங்கள் உங்கள் முன்னோர் தொழிலுடன் தொடர்புடையவராக இருந்தால், இன்று நீங்கள் வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு பெரியவர்களை அணுகவும். அவசர முடிவு உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அரசு ஊழியர்கள இன்று பெரிய வெற்றியைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் வீட்டைப் பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு கொஞ்சம் பணம் செலவழிக்கலாம். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நீங்கள் தொடர்ந்து மடிக்கணினி அல்லது கணினியைப் பயன்படுத்தினால், உங்கள் கண்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். விரைவில் உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம். நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நிதி முயற்சிகள் வெற்றியடையலாம். முன்னோர் சொத்து தொடர்பான பலன்களுக்கான அறிகுறிகள் தென்படும். வேலையில் இன்று சாதாரண நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் திட்டத்தைத் தொடங்குவதற்கு இன்று சரியான நாள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:15 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு, இன்று சில புதிய எதிரிகள் உருவாகலாம். அப்படிப்பட்ட நிலையில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை வலுவடையும். குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களுடனான உங்கள் உறவு மேலும் வலுவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் பரபரப்பான வழக்கத்தின் காரணமாக, உடற்சோர்வு, தலைவலி போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எந்த விதத்திலும் உடல் நலத்துடன் விளையாடாதீர்கள். நீங்கள் வெளியூர் சென்று வேலை பார்க்க விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வணிகர்கள் இன்று பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் வலுவடையும்.குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9:20 மணி வரை



Click it and Unblock the Notifications











