Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
Today Rasi Palan 13 May 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு மே 13ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 6.30-7.30 மணி வரை. மாலை 4.30-5.30 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். பணம் சம்பாதிக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலை மிகவும் பாராட்டப்படும். இன்று உங்கள் மேலதிகாரி உங்களுக்கு சில பெரிய பொறுப்புகளை வழங்கலாம். வியாபாரிகள் தகுந்த லாபத்தைப் பெறலாம். சட்டத்திற்கு புறம்பான எந்த வேலையும் செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தொண்டை தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். மிகவும் குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணருவீர்கள். எனவே, நீங்கள் ஓய்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று நீங்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் ஒரு பெரிய நிதி பரிவர்த்தனை செய்யப் போகிறீர்கள் என்றால், அவசரப்பட வேண்டாம். வணிகர்கள் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன்பு அதை நன்கு படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை விரைந்து முடிக்க முயற்சிக்கவும். வாழ்க்கைத் துணையுடனதன உறவில் இணக்கம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:15 மணி முதல் காலை 11 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும் நபர்களிடம் இருந்து விலகி இருங்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. அவசரப்பட்டு எடுக்கும் முடிவால் தவறான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். அலுவலகத்தில் முக்கியமான வேலைகளை கவனமாக செய்ய முயற்சியுங்கள். நீங்கள் தவறு செய்தால், உங்கள் முன்னேற்ற கனவு நிறைவேறாமல் போகலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, கடந்த சில நாட்களாக உங்கள் திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டிருந்தால், இன்று நிலைமை சீரடையும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் மாற்றம் ஏற்படும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் குழந்தைகளுக்காக ஒரு பெரிய செலவு செய்யலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய விவாதம் நடத்தலாம். வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்தவும். இன்று வியாபாரிகளுக்கு மந்தமான நாளாக இருக்கும். இருப்பினும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:20 மணி முதல் காலை 7:45 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் இருப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்வீர்கள். உங்கள் உறவை வலுப்படுத்த உங்களால் முடிந்தவரை முயற்சி செய்வீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். ஆடம்பரமாக செலவுகளைச் செய்யாதீர்கள். அலுவலகத்தில் இன்று பொறுப்புகளின் சுமை சற்று அதிகரிக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:50 மணி முதல் இரவு 8 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, சில குடும்ப உறுப்பினர்களின் நடத்தை இன்று உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் உணர்ச்சி ரீதியாக சற்று பலவீனமாக உணருவீர்கள். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளவும். விரைவில் நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். குறிப்பாக இன்று பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்பு கிடைத்தால், அவசரப்பட வேண்டாம். வேலையில் இன்று கலவையான முடிவுகளைத் தரும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், உங்களின் உணவுப் பழக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் காலை 12:30 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்கள் குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் இருப்பதைத் தவிர்க்கவும். இன்று வேலையில் அதிக அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலை நிமித்தமாக திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். நிலுவையில் உள்ள வேலையை முடிக்க தொழிலதிபர்களும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் வேலை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் காலை 10 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். மனரீதியாகவும் நன்றாக உணர்வீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். பொறுமையாக இருக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், வீட்டுச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய திட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 7:30 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, நீங்கள் ஒரு பெரிய சாதனையைப் புரியலாம். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களால் மிகவும் பெருமைப்படுவார்கள். உங்கள் துணையுடன் உறவில் அன்பும் இனிமையும் அதிகரிக்கும். பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக இன்று முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். வேலை அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும், இன்று எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்குப் பிடித்த திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களின் தடைப்பட்ட ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மதியம் 1:50 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வாக்குவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் நீங்கள் சில சட்டச் சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால் நல்லது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் நல்லது. வேலையில் அதிக மன அழுத்தத்தை தவிர்க்கவும். உங்கள் மனதை அமைதியாக வைத்து முழுமையான நேர்மறையுடன் முன்னேறுங்கள். வியாபாரிகள் இன்று தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் சோம்பலாக உணரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இன்று காதல் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் நிதி நிலையை மேம்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அலுவலகத்தில் உங்கள் வேலையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அவசரம் மற்றும் பீதியைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். வியாபாரிகளின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் பெரிய பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று ஒரு குடும்ப உறுப்பினர் தனது சில பிரச்சனைகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். சில காரணங்களால் உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது கோபமாக இருந்தால், அவர்களை சமாதானப்படுத்துவதற்கு இன்று சாதகமான நாள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்களைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்களுடைய இந்த பழக்கம் இன்று உங்களுக்கு விலை உயர்ந்ததாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் போட்டியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை



Click it and Unblock the Notifications











