Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 11 May 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சவாலான நாளாக இருக்க போகிறது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் மிருகசீருசம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 11ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று மாணவர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். வேலை விஷயத்தில் அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள், இல்லையெனில் அது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எதையாவது சாதிக்க முடியும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். அத்தியாவசிய விஷயங்களுக்கு மட்டும் செலவு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:25 மணி முதல் இரவு 7 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள் இன்று ஆபத்தான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் சரியான முடிவுகளைப் பெறுவது சாத்தியமாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உங்கள் புரிதலின் மூலம் எந்த பெரிய நிதிப் பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் உடல்நிலையில் சிறிதும் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 8 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, காதல் விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் கடின உழைப்பை முதலாளி கூட கவனிக்கலாம். வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். உங்கள் தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தரையில், இன்று நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, மாணவர்கள் வரவிருக்கும் தேர்விற்கு, தங்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். அலுவலகத்தில், உங்கள் எல்லா வேலைகளையும் விரைவாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் சிறிய தவறும் இன்று உங்களைக் கடுமையாக பாதிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:20 மணி முதல் மதியம் 12:45 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் நீண்ட நேரமாக லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், இன்று உங்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். வாழ்க்கைத் துணையின் மனநிலை சற்று மோசமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயத்தையும் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் ஒரு நீண்ட தூர பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல பலனைத் தரும். ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம். வேலைப்பளு சாத்தியமாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் சில முக்கிய முடிவுகளை மிக எளிதாக எடுக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். கடின உழைப்பு இருந்தபோதிலும், நீங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறவில்லை என்றால், மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரமிது. இது தவிர, நீங்கள் சரியான திசையில் முயற்சி செய்ய வேண்டும். வணிகர்கள் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:35 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் பொருளாதார நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி இழப்புக்கான அறிகுறிகள் தென்படலாம். இதெல்லாம் உங்கள் தவறான முடிவுகளின் விளைவு. அலுவலகத்தில் கோபப்படுவதைத் தவிர்க்கவும். குறிப்பாக உயர் அதிகாரிகள் முன்பு சரியாக நடந்து கொள்ளுங்கள். இன்று வணிகர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும். நீங்கள் செய்து கொண்டிருந்த வேலை பாதியில் நிற்கவும் வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:15 மணி முதல் இரவு 7:30 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, சொத்து சம்பந்தமான பழைய விவகாரத்தின் வெளிப்பாட்டால் இன்று உங்கள் வீட்டில் வாக்குவாதம் ஏற்படலாம். மனதளவில் மிகவும் வருத்தப்பட நேரிடலாம். அலுவலகத்தில் உங்கள் வேலையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பான வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் திடீர் பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் காலை 8:20 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, வேலை விஷயமாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளின் எந்த முக்கிய பிரச்சனையும் தீரும். இன்று நீங்கள் உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம். திருமண வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை தோன்றும். உங்களுக்குள் தன்னம்பிக்கை குறையும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு தசைகள் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் மதியம் 12 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, ஆரோக்கியமாக இருக்க, அதிகரித்து வரும் உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் அலட்சியமாக இருந்தால் சில தீவிர நோய்களின் பிடியில் வரலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். இது தவிர, நீங்கள் ஒரு புதிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் இன்று பெரிய வாடிக்கையாளர்களுடன் இணையும் வாய்ப்பைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். இது தவிர, உங்கள் வருமானமும் உயரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குழந்தை தொடர்பான எந்த முக்கிய முடிவையும் எடுக்கலாம். பணத்தைப் பொறுத்தவரை, இன்று நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், சில நாள்பட்ட நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:50 மணி முதல் காலை 10:10 மணி வரை



Click it and Unblock the Notifications











