Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...!
Today Rasi Palan 10 April 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுக்காக ஆடம்பர செலவு செய்வதைத் தவிர்க்கவும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 10ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைய போகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றியடைந்தால், விரைவில் நீங்கள் பெரிய முன்னேற்றம் அடையலாம். வர்த்தகர்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் உங்கள் சரியான முடிவுகளின் விளைவுகள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று ஒரு முக்கிய முடிவை எடுத்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். அவசர முடிவு உங்களுக்கு சிக்கலை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்து சக ஊழியர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். தேவையற்ற ஆணவம் மற்றும் மோதல் உங்கள் வேலையைப் பாதிக்கும். பொருளாதார ரீதியாக இன்று சிறப்பாக இருக்கும். செலவுகள் குறையும்.நல்ல ஆரோக்கியத்திற்காக, உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:55 மணி முதல் காலை 9:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, பொருளாதார அடிப்படையில் இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றியடைந்து, நிதி நிலைமையில் ஏற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. இன்று அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பில் பங்கேற்கலாம். வியாபாரிகள் ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். விரைவான லாபம் ஈட்ட, எந்தவொரு வேலையையும் அவசரத்தில் செய்யாதீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:45 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படலாம். உங்களின் கவனக்குறைவான அணுகுமுறை அவர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்யும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் திருப்திகரமாக இருக்கும். இன்று உங்கள் கடின உழைப்பை மேலதிகாரி கவனிக்கலாம். இன்று வியாபாரிகளுக்கு புதிய சவால்கள் ஏற்படலாம். சில சட்டச் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்களுக்கு மூட்டுவலி பிரச்சனை இருந்தால், இன்று பிரச்சனை திடீரென அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8:45 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, அலுவலகத்தில் ஒரு முக்கியமான திட்டத்திற்கு தலைமை தாங்கினால், இன்று நீங்கள் குழுப்பணி மூலம் வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சில்லறை வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்காததால், இன்று உங்கள் கவலை அதிகரிக்கலாம். வேலையுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:15 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், நெருக்கமானவர்களின் உதவி கிடைக்கும். உங்கள் திட்டம் முன்னேறும். நிதி நிலையின் பலம் கூடும். உங்கள் கடின உழைப்பு மற்றும் புரிதலுடன் நல்ல பணம் சம்பாதிக்கலாம். வீட்டில் உள்ளவர்களுடனான உறவில் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:25 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு காதல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் துணையிடமிருந்து சிறப்பு பரிசைப் பெறலாம். வேலையில், இன்று சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் காலை 11 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். பழைய கடனை திருப்பிச் செலுத்திடலாம். இன்று மனதளவில் நன்றாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நாள் பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி குறித்த நேரத்தில் முடிவடையும். தொழிலதிபர்களின் தடைப்பட்ட வேலையும் முடிவடையும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் திடீர் பின்னடைவு ஏற்படலாம். உங்கள் துணைக்கு சரியான கவனிப்பு தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 2:55 வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் உறுதித்தன்மை இருக்கும். இன்று உங்கள் துணையும் உங்களுக்கு திருமணத்தை முன்மொழியலாம். மற்றவர்களைக் கவர உங்கள் பட்ஜெட்டை விட அதிகமாக செலவழிக்காதீர்கள். அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவும். இன்று உங்களின் சிறிய அலட்சியமும் முதலாளியின் கோபத்தை உண்டு பண்ணக்கூடும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உடல்நலக் குறைவு காரணமாக இன்று சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். எதிலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடலாம். மாணவர்களின் கல்வியில் இருந்துவந்த தடைகள் போக்க ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் பிரச்சனை நிச்சயம் தீர்க்கப்படும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, சரியான திசையில் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இது தவிர, அதிகரிக்கும் செலவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். வேலையில் இன்று சராசரி நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 8 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். இன்று உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரிகள் பணி நிமித்தமாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக அமையும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் சுற்றுலா செல்லலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனக்குறைவு நல்லதல்ல.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மாலை 3 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, கேட்காமல் யாருக்கும் வீண் ஆலோசனைகளை வழங்காதீர்கள். இல்லையெனில், நீங்கள் சிக்கல் சிக்கலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வார்த்தைகள் உங்கள் மன உறுதியைக் குறைக்கும். இருப்பினும், நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். கடினமாக உழைத்தால் எந்தத் துறையிலும் வெற்றிபெறும் திறன் உங்களிடம் இருக்கும். வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை



Click it and Unblock the Notifications











