Today Rasi Palan 08 June 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்திலிருந்து விலகி இருப்பது நல்லது...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 08ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 08 June 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று பிறருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால், உங்கள் திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு உதவுங்கள். வேலை தொடர்பான எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். இதனால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இன்று, உங்கள் திருமண வாழ்க்கையின் பழைய நினைவுகள் மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று தொழிலதிபர்கள் புதிய சவாலை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், அதனை முழு தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் முதலாளியின் ஆதரவைப் பெறுவார்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் காலை 11:00 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வீண் விவாதத்திலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் நீங்கள் சட்டச் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். நீங்கள் தினமும் அலுவலகத்திற்கு தாமதமாக செல்லும் பழக்கத்தால் சிக்கலில் மாட்டி கொள்ளலாம். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் எந்த முக்கிய வணிக முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்த, உங்கள் தினசரி வழக்கத்தில் சிற மாற்றங்கள் தேவை. இது தவிர, தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:20 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத்தால், உங்கள் முடிவை கவனமாக எடுக்கவும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். இந்த நேரத்தில் எந்த விதமான மாற்றத்தையும் தவிர்க்குமாறு உத்தியோகஸ்தர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கலாம். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 7:45 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கோபப்படுத்தலாம். இன்று பண விஷயத்தில் அவ்வளவு சிறப்பாக இருக்காது. இன்று நீங்கள் கடன் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தின் சூழல் இன்று நன்றாக இருக்கும். தொழிலதிபர்கள் புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்கினால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் காலை 11:20 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். இன்று உங்களுக்கு பண விஷயத்தில் அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். பணம் சம்பாதிக்க கிடைத்த வாய்ப்பு கை நழுவக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்கள் வணிகத் திட்டங்களிலும் சில மாற்றங்களைச் செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:15 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலை இனிமையாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சமீபத்தில் தொடங்கிய புதிய தொழில் தொடங்கியிருந்தால், விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்தவும். உத்தியோகஸ்தர்கள் அதிக வேலை அழுத்தத்தைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் சரிவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் அரசியலில் ஈடுபட நினைத்தால், இன்று செல்வாக்கு மிக்க நபரின் வழிகாட்டுதலைப் பெறலாம். நீங்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால், உங்கள் வழியில் இருந்து பிரச்சினை இன்று தீர்க்கப்படும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது, வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்துங்கள். உங்கள் கட்டுப்பாடற்ற நாக்கே உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 7:25 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கையில் சில காலமாக ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருந்தால், இன்று சிறந்த நாளாக இருக்கும். உங்களுக்கிடையேயான தூரம் குறையும். மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரியில் உயர்கல்வி பெற விரும்பினால், அது தொடர்பான சில முக்கிய செய்திகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வேலையில், இன்று மிகவும் பரபரப்பாக இருக்கும். உங்களுக்கென போதுமான நேரம் கூட கிடைக்காமல் போகலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் காலை 11:45 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, எந்தவொரு சமூகப் பணியிலும் நீங்கள் தீவிரமாக பங்கேற்கலாம். தேவைப்படுபவர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் மரியாதை உயரும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறனில் முதலாளி மிகவும் மகிழ்ச்சியடைவார். ஆணவம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்கள் சட்ட விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் ஏதேனும் புதிய வேலையையும் தொடங்க போகிறீர்கள் என்றால், பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற மறக்காதீர்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் திடீரென்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். தொழிலதிபர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். உங்கள் வேலை தற்காலிகமானதாக இருந்தால், இன்று உங்கள் கவலை சற்று அதிகரிக்கலாம். குழந்தைகளிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:10 மணி முதல் காலை 10:50 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு திடீர் வாக்குவாதம் ஏற்படலாம். கோபத்தைக் கட்டுப்படுத்தி தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. இது தவிர, உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் வெளியாட்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல நாளாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்களின் அனைத்துப் பணிகளும் தடையின்றி நிறைவேறும். இன்று உங்கள் உடல்நிலை சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 8:00 மணி வரை

Story first published: Thursday, June 8, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion