Today Rasi Palan 07 May 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் அஸ்வினி மற்றும் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 07ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 07 May 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உத்தியோகஸ்தர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. வணிகர்கள் பெரிய லாபம் ஈட்ட குறுக்குவழியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:45 மணி முதல் மதியம் 12:15 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலைப்பளு குறைந்து ஓய்விற்கான நேரத்தைப் பெறலாம். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். திடீர் பெரிய செலவு உங்கள் நிதி நிலையைக் கெடுத்துவிடும். நாளின் இரண்டாம் பகுதியில், சில நல்ல செய்திகள் கிடைக்கும். இதனால் மனம் மிகவும் மகிழ்ச்சியடையும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், மிகவும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கி இன்று மனதளவில் நன்றாக இருப்பீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும், சிந்திக்காமல் எந்த செலவும் செய்யாதீர்கள். சேமிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும். வணிகர்கள் புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்கியிருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று மாணவர்களுக்கு சவாலான நாளாக இருக்கலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலை சமநிலையில் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். இன்று முதலாளியின் பார்வை உங்கள் மீது இருக்கும். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலக்குறைவு உங்கள் கவலைகளை அதிகரிக்க செய்யும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சியும் கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பொழுதுபோக்கிற்காக கொஞ்சம் பணம் செலவிடலாம். உங்கள் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம். உட்கொள்ளும் உணவில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 2:55 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமான நாளாக இருக்கும். குடும்பத்தாருடன் மேற்கொள்ளும் சுற்றுலா பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரத்தையும் பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், விரும்பிய பலனைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் காலை 11:00 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, காதல் விஷயங்களில் இன்று மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். இன்று வேலை தொடர்பான கவலை சற்று அதிகரிக்கலாம். அலுவலகத்தில் கடின உழைப்பிற்கு பிறகும், உயர் அதிகாரிகளின் அதிருப்தி பெறக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தன்னம்பிக்கை குறையக்கூடும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். இன்று எந்த ஒரு முக்கிய வியாபார முடிவும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:25 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் பொருளாதார நிலையில் பலம் உண்டாகும். சொத்து சம்பந்தமாக பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய மற்றும் முக்கியமான பொறுப்பு வழங்கப்படலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் பதற்றமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். கோபத்தையும் அவசரத்தையும் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுக்கு உடற்சோர்வு அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மனதளவில் நன்றாக உணரமாட்டீர்கள். மனதில் பல கவலைகள் இருக்கும். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். நீங்கள் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முன்பு ஒழுங்காக நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அணுகுமுறை இன்று உங்களைத் தொந்தரவு செய்யலாம். சிறு தவறுகளுக்கு கூட அவர்களின் கோபத்தைத் தூண்டும். வணிகர்கள் இன்று புதிய ஒப்பந்தத்தால், மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவருக்கு பிடித்த பரிசையும் வாங்கலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:45 மணி முதல் மதியம் 12:35 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, அரசு வேலை பெற முயற்சிப்போருக்கு, இன்று நல்ல செய்திகள் கிடைக்கும். இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணத்தைப் பற்றி பேசினால், நீங்கள் பழைய குடும்பக் கடனை அடைப்பதன் மூலம், பெரிய கவலைகள் நீங்கும். ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், உங்கள் அன்றாட வழக்கத்தில் தேவையான சில மாற்றங்களையும் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:20 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, அலுவலகத்தில் நீங்கள் செய்த சிறு தவறையும், திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தொழிலதிபர்கள் இன்று அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நஷ்டம் ஏற்படும். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். பணப்பற்றாக்குறையால் சில பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் வாழ்க்கை துணைக்கு முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் உடல்நிலை பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை

Story first published: Sunday, May 7, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion