Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
Today Rasi Palan 06 May 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் சிறு விஷயங்களுக்கு சண்டையிடுவதைத் தவிர்க்கவும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் ரேவதி மற்றும் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 06ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று ஏதேனும் பெரிய ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்தவும். உங்கள் கட்டுப்பாடற்ற பேச்சு மிகப்பெரிய இழப்புக்கு காரணமாக இருக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். விரைவில் நீங்கள் ஒரு பெரிய முன்னேற்றம் அடைய முடியும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. இன்று மனதளவில் மிகவும் சோகமாக இருப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். இன்று உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் புதிய வேலையைத் தொடங்க இன்று சிறந்த நாள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் விரும்பிய விலையுயர்ந்த பொருளை வாங்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இரவில் தாமதமாக தூங்குவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் காலை 10:10 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் திடீர் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று ஏதேனும் பெரிய செலவு செய்ய திட்டமிட்டிருந்தால், அதைத் தவிர்த்திடவும். அதிக ஆர்வத்தின் பேரில் தேவைக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். வேலையில் இன்று நல்ல நாளாக இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் நிறைய அழுத்தத்தை உணருவீர்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, நீங்கள் சமீபத்தில் செய்த பெரிய வேலையில் சிறப்பான பலனைப் பெறலாம். முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் நிதிப் பிரச்சனை தீரும். வேலையுடன், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை அன்புக்குரியவர்களை வருத்தமடையச் செய்யலாம். நீங்கள் பழைய கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:35 மணி முதல் இரவு 8:00 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, குழந்தைகள் தொடர்பான உங்களின் கவலை அதிகரிக்கலாம். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சனைகள் உங்கள் வேலையைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. எனவே உங்களால் முடிந்ததை செய்ய முயற்சிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் கோபத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9:05 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். கொடுத்த கடனைத் திரும்ப பெறலாம். இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறிய விஷயத்திற்காக வாக்குவாதம் ஏற்படலாம். இன்று உங்கள் துணையின் மனநிலை மிகவும் மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், வறுத்த, பொரித்த மற்றும் காரசாரமான உணவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வேலையில் எந்த வித அலட்சியமும் காட்ட வேண்டாம். இதனுடன், உங்கள் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளைப் புறக்கணிப்பதையும் தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து உங்களுக்கென நேரத்தை பெற முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:20 மணி முதல் காலை 8:00 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடலாம். குறிப்பாக உங்கள் தந்தையின் உதவியால் உங்களின் எந்த பெரிய பிரச்சனை தீரும். இன்று உங்களுக்கு அலுவலகத்தில் சில கடினமான பணிகள் ஒதுக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள் இன்று தங்கள் வணிகத் திட்டங்களில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யலாம். விரைவில் சரியான பலனைப் பெற வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று மாணவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். கல்வி தொடர்பான உங்கள் முயற்சியில் வெற்றி பெறலாம். வியாபாரிகள் தங்கள் கையிருப்பை அதிகரிக்க திட்டமிட்டுருந்தால் இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று குறைந்த முயற்சியில் நல்ல பணத்தைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை நன்றாக வைத்திருக்க முயற்சிக்கவும். தேவையற்ற விஷயங்களில் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் காலை 9:55 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்களுக்கிடையே உள்ள மனகசப்பைக் குறைப்பதற்கு வலுவான வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உங்கள் மனதில் வலுவாக எழலாம். இருப்பினும், அவசரப்பட்டு எந்தவொரு தவறான செயலையும் செய்வதைத் தவிர்க்கவும். வேலையின் அடிப்படையில் இன்று சாதாரண நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், முதுகில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8:00 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இருந்தாலும் பெரிய பிரச்சனை இருக்காது. அலுவலகத்தில் உங்களுக்கு விருப்பமான திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படலாம். உங்களால் முடிந்ததைச் செய்தால் முன்னேற்றம் சாத்தியமாகும். வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தொழிலில் நல்ல மாற்றங்களை விரைவில் காண்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் காலை 8:15 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, சமீபத்தில் நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் நேர்காணல் கொடுத்திருந்தால், இன்று நேர்மறையான பதிலைப் பெறலாம். தொழிலதிபர்கள் இன்று வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். உங்கள் பயணம் மிகவும் இனிமையாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் துணையின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக வேலை அழுத்தம் எடுத்து கொள்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை



Click it and Unblock the Notifications











