Latest Updates
-
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்
Today Rasi Palan 05 May 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் பேச்சாலேயே பிரச்சனையை சந்திப்பாங்க...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 05ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். தடைப்பட்ட பணத்தைப் பெறுவதன் மூலம், உங்கள் நிதி நெருக்கடி நீங்கும். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஆன்மீக தலத்திற்கு செல்லலாம். இன்று நீங்கள் மனதளவில் மிகவும் சிறப்பாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் மாலை 6:55 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமாக உணருவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையில் அதிகம் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொழிலதிபர்கள் திடீர் பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். இருப்பினும், உங்கள் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுப்பெறும். இன்று நீங்கள் அன்றாட பணிகளை முடிப்பதில் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் வலுவாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், நீங்கள் சிந்திக்காமல் நிதி முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும்.ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் காலை 11:00 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். தொழிலதிபர்கள் சில சவால்களைச் சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்வது நல்லது. உடல்நிலையில் சிறிதும் அலட்சியம் காட்டாதீர்கள். குறிப்பாக, உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று கலவையான நாளாக இருக்கும். நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்தால், இன்று நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால், நேரமின்மையால் உங்கள் வேலைகள் சில முழுமையடையாமல் போகலாம். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு முன்பு, அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். அலுவலகத்தில் உங்கள் பணி மிகவும் பாராட்டப்படும். உங்கள் செயல்திறனில் உயர் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். விரைவில் நீங்கள் பதவி உயர்வைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் ஒருவரிடமிருந்து நற்செய்தி கிடைக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்தவும். இன்று உங்களுக்கு அலுவலக வேலையில் நாட்டம் இருக்காது. மேலும், இன்று நீங்கள் பல கவலைகளால் சூழப்பட்டிருப்பீர்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும். பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் இன்று ஆபத்தான முடிவு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், உணவில் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:25 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்கள் மீதான குடும்ப பொறுப்புகள் உயரலாம். அலுவலகத்தில் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்கள் நீதிமன்ற வழக்குகளில் எந்த அலட்சியமும் காட்ட வேண்டாம். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், வானிலை மாற்றங்களால் சில பிரச்சனைகள் வரலாம். எனவே, சிறு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுவது நன்மை பயக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் சில முக்கியமான பணிகள் முழுமையடையாமல் இருந்தால், இன்று அவற்றை முடிக்க முயற்சிக்கவும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், உற்சாகத்தின் பேரில் அதிகமாகச் செலவு செய்வது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். உங்கள் தவறான வார்த்தைகள் உங்கள் துணையின் உணர்வுகளைப் புண்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, வேலையில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் நிதி நிலையை முன்கூட்டியே சரிசெய்ய வேண்டும். இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் உங்கள் நிலை இனிமையாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் துணையின் கசப்பான வார்த்தைகள் உங்களை வருத்தப்படுத்தலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சரியான நேரம் வரும்போது எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பும். உங்கள் முதலாளி இன்று அலுவலகத்தில் மிகவும் மோசமான மனநிலையில் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிறிய தவறைக் கூட தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் மாலை 6:45 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று நீங்கள் ஏதாவது புதிய வேலையைத் தொடங்க திட்டமிட்டால் அனுபவம் வாய்ந்த நபரின் வழிகாட்டுதலை பெறுவீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்களுக்கு நல்ல வரன் தேடி வரும். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 12:45 மணி வரை



Click it and Unblock the Notifications